வியாழன், 30 ஜூன், 2011

முப்பெரும் விழா

புதுச்சேரி : புதுச்சேரி போதி பதிப்பகம் சார்பில் கண்ணதாசன் 85வது பிறந்தநாள், கவியரங்கம், விருது வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. முத்தரையர்பாளையம் முத்தரையர் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு கண்ணதாசன் பதிப்பக முதன்மை மேலாளர் மரியவிசுவாசம் தலைமை தாங்கினார். கவிஞர் வசீகரன் வரவேற்றார். ஈரோடு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தாலாட்டு, காதல், பெண்மை, மனிதநேயம், தேசியம், சமுதாயம், தத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். கவிஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கவிஞர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக