பட்டுக்கோட்டை, செப். 15: பேராவூரணி சேது சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் குழ. செல்லையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேராவூரணி ஒன்றிய, நகர திமுக சார்பில் ஒன்றியச் செயலர் சுப. சேகர் தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார், துணைத் தலைவர் கி.ரெ. பழனிவேல், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இரா. ராஜரத்தினம், சேதுபாவாசத்திரம் ஒன்றிய திமுக செயலர் மு.கி. முத்துமாணிக்கம், திமுக மாவட்டத் துணைச் செயலர் என். செல்வராஜ், மாவட்டப் பிரதிநிதி ஏ. அப்துல்மஜீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் அந்தக் கட்சியின் விவசாய அணி மாநிலத் துணைச் செயலர் வி.எஸ்.கே. பழனிவேல் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தேமுதிக ஒன்றியச் செயலர்கள் நடேச. பழனிவேல், ஏ. செல்லத்துரை, நகரச் செயலர் எஸ்.ஆர். சீனிவாசன், மருத்துவரணி மாவட்டச் செயலர் அ. சிவபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாபநாசம்: கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இரா. துரைக்கண்ணு தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். அதிமுக மாவட்டச் செயலர் எம். ரங்கசாமி, தொகுதிச் செயலர் எம். கருணாநிதி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, ரோட்டரி மணிக்கூண்டு அருகே அமைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு அதிமுக பாபநாசம் தொகுதிச் செயலர் எம். கருணாநிதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். கோபுராஜபுரம் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு ஊராட்சி செயலர் என். சுரேஷ் தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி கலியமூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக