Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

முத்தரையர்கள் இஸ்லாமிய கட்சியில் ...???

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட முத்தரையர் சங்கத்தினர் எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் மற்றும் பொது செயலாளர் இஷாக் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்தனர்.
 
 
SDPI கட்சி என்பது இஸ்லாமிய மக்களுக்கான கட்சி அவர்களின் கொள்கைகளும் செயல்பாடுகளும் எல்லாமே இஸ்லாமிய மக்களுக்கானதாக இருக்கும் பட்சத்தில் முத்தரையர்கள் அந்த கட்சிகளில் இணைய வேண்டிய அவசியம் என்ன ? அவர்கள் கட்டாயத்தின் பெயரில் இணைக்கப் பட்டார்களா ? ராமநாதபுரம் முத்தரையர் சங்கத்தினர் இது குறித்து உரிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்பது இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் கோரிக்கை


எந்த கட்சிக்கோ , மதத்திற்கோ ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ செயல்படுவது எமது நோக்கம் இல்லை, முத்தரையர்களுக்கு ஆதரவான எதையும் ஆதரிப்போம், எதிரான எல்லாவற்றையும் எதிர்ப்போம்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

முத்தரையர்களின் வரலாறு - ராஜா முத்தரையர்

முத்தரசர்
39.

சொற்றவ ராதோர் கனிவு ளகத்தோர் துகளறநூற்
கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே.

(க-ரை) சொல் மாறாது இளகிய உள்ளத்தவராய்ப் புலவர்களை
ஆதரிப்பவர்களும் வீரத்தன்மையுள்ளவர்களுமான முத்தரசர்கள் ஆண்டது
கொங்கு மண்டலம் என்பதாம்.


வரலாறு : முத்தரையர் என்பவர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட
அரசர்கள். ஆனால் நார்த்தாமலைச் சாசனத்தால், விடேல் விடுகு
முத்தரையன் மகன், சாத்தம் பழியிலியாவன். அவன் மகள் பழியிலி சிறிய
நங்கை என்பவள்; மீனவன் தமிழதியரை யனாயின மல்லனனந்தனை
மணந்தாளென்றிருப்பதால், மீனவராகிய தென்னவரும், முத்தரையரும் ஏக
காலத்தில் பாண்டி நாட்டையும் மற்றும் பெற்றுக்கொண்ட நாடுகளையும்
ஆண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை சமஸ்தானத்துள்ள குடுமியான் மலைக்
கோயில் சாசனத்தில், சத்துரு பயங்கர முத்தரையன், தஞ்சாவூருக்கு
வடமேற்கிலும், திருக்காட்டுப் பள்ளிக்கு இரண்டு மயில் தூரத்து முள்ள
சந்திரலேகை சதுர்வேதி மங்கல மென்ற பழம் பெயருள்ள செந்தலைக்
கிராமத்துள் மீனாட்சி சுந்தரேசுரர் கோயிலுள் குவான் மாறன் பெரும்பிடுகு
முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி வரையன்
மகனுமாகிய சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையன் என்பவர்களின்
சாசனங்களிருக்கின்றன. இக்காலம் சுமார் ஆயிர வருஷங்களாம்.
திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்தில் "முத்தரைய நல்லூர்" என ஓரூரிருக்கிறது.


இம்முத்தரையர் மிகுந்த புகழுடையவர்கள் என்பதை நாலடியாரிலுங்
காணலாம்.
(மேற்)

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருணைச் சோறார்வர் கயவர் கருணையைப்
பேரூ மறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரு மரிதாய் விடும்.


மல்லன்மா ஞாலத்து வாழ்பவரு ளெல்லாஞ்
செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்.
(நாலடி)

இம்முத்தரையர் கொங்குநாடும் ஆண்டிருக்கிறார்கள் என்பதைத்
தமிழறியும் பெருமாள் கதை என்னும் புத்தகத்தில் - 'அங்காடி
கொள்ளப்போ யானை கண்டேனணி நகரமன்றியிலே சேனை கண்டேன்.
கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்' எனக் கூறப்பட்டுள்ளது காண்க.
கொங்கு நாட்டுள் அங்குமிங்குமாக அருகி வாழ்கின்ற வலையர் என்னும்
ஒரு வகுப்பினர்முத்தரசர் கூட்டத்தாரெனத் தங்களைப் புகழ்ந்து
கொள்கிறார்கள்.


கோசர்

40.

பனிமிகு நீள்கடல் சூழ்மே தினியிற் பலருமெச்ச
இனிமை தருந்தமிழ் மாது களிப்புற் றெலாவணியுங்
கனிவுறப் பூண்டு வளர்ந் தோங்கச் செய்யுங் கருத்தொடுநன்
மனமிகு கோசரும் வாழ்ந்தாண் டதுங்கொங்கு மண்டலமே

(க-ரை) தமிழை ஆதரித்தவர்களும், நல்ல மனதுடையவர் களுமாகிய
கோசர்கள் ஆண்டது கொங்கு மண்டலம் என்பதாம்.


வரலாறு : கோசர் என்பவர்கள் படைப்பயிற்சியிற் சிறந்தவராகிய
ஒரு மரபினர். இதனை "இளம்பல் கோசர் விளங்கு படை கன்மா
ரிகலினரெறிந்த வகவிலை முருக்கின், பெருமலைக் கம்பம் போலப்
பொருநற் குலையா நின்வலன்" (புறநானூறு) - மனத் தொடுபொருந்திய
மாறுபடாத சொல்லையுடையவர்கள் என்பது பொதியிற்றோன்றிய நாலூர்க்
கோசர் நன்மொழி போல வாயாகின்றது (குறுந்தொகை) என வருதல்
காண்க. இக்கோசர் கொங்கு நாட்டினை ஆண்டிருக்கிறார்கள் என்பதனைச்
"சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரையில்". "அது கேட்டுக் கொங்கிளங்
கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய மழை
தொழிலென்றும் மாறாதாயிற்று" என்பதன் உரையிலே, "அங்ஙனஞ் செழியன்
நன்மை செய்து அவை நீங்குதலின் அதனைக்கேட்டு


செய்தி உதவி : ராஜா முத்தரையர்

 

கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தல்

திருச்சி, ஆக. 27: கிளிக்கூடு- இடையாற்றுமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என முத்தரையர் வளர்ச்சி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அந்த சங்கத்தின் தலைவர் ஏ. அருணாசலம் மனு அளித்தார்.

இதேபோல, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை இரணியம்மன் கோவில் அருகே சாலையைக் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மற்றொரு மனுவும் அளிக்கப்பட்டது.


- தினமணி 

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

"சிந்தனை சிற்பி" - மறு பதிப்பு

சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
இவரது இயற்பெயர் சின்னராஜ். கா...


ஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். 1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
-திருமேனி


சில தினங்களுக்கு முன்பு இங்கே மரியாதைக்கு உரிய திரு. திருமேனி அவர்கள் எழுதிய செய்திக்கு திரு. வேலூர் சண்முகம் "முத்தரையர் இணையத்தில்" வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு ..
திரு சி.பி சிற்றரசு , குறித்த விவரங்கள் விளக்கமாக சில காலங்களக்கு முன்னர் நமது குழுமத்தில் பதிவிட்டிருந்தோம் ,அப்போது நண்பர்கள் அவர் நாயுடு என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி சந்தேகங்களும் எழுப்பப்பட்டது அப்போது நமது நண்பர் திரு மணிமாறன் போன்றோர் அவர் முத்தரையர் தான் முத்தரையர் சங்க நிறுவுனர் திரு வேங்கட சாமி அவர்களும் நாயுடு என்றே கூறப்பட்டார் என்பதை சுட்டி காட்டி பதிவிட்டிருந்தோம் .நிற்க தற்போது எனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது ,மற்ற இடங்களில் பதிவு செய்யப்பட்ட பின்பு எனக்கு அனுப்ப பட்டிருந்தது அதில் அவரை பற்றிய தகவல்கள் அவரின் அரசியல் பற்றியவையும் இருந்தது ,கருணாநிதிக்கும் அவருக்கும் கருத்து வேறு பாடு காரணமாக அதிமுகவுக்கு சென்று விட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அதோடு அக்கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது .திரு .சி .பி சிற்றரசு பெயர் வேலூர் மாவட்ட ஆட்சியாளார் கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடபட்டிருந்தது .
சி.பி .சிற்றரசு மாளிகை வேலூர் - இது தான் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலுகம் ,பாலாற்றங்கரை ஒட்டி சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது ,இந்த அலுவலகத்தை ஒட்டி முத்தரையர் இன மக்கள் மற்றும் முதலியார் இன மக்களும் தலித்துகளும் வாழும் பகுதி ,இது மூன்றாம் நிலை நகராட்சியாக சென்ற திமுக ஆட்சி காலத்தில் தரம் உயர்த்தப்பட்டு முத்தரையர் இனத்தை சார்ந்த திருமதி ,ஆர்.பி, ஜெயலக்ஷ்மி ஏழுமலை ,முதல் மற்றும் கடைசி நகராட்சி தலைவர் .இப்போது இது வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது .திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களின் மகன் திரு ,சசிகுமார் அவர்கள் மாமன்ற உறுபினராக வெற்றி பெற்று வெற்றிகரமாக சிறப்பாக செயல் பட்டு வருகிறார் ,இவரது தந்தை திரு ,ஆர் .பி ஏழுமலை அவர்கள் திமுக ஒன்றிய செயலாளராக நீண்ட காலமாக இறுந்து வருகிறார் ,வேலூர் அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தி ,நம் மக்களக்கு முடிந்த அளவுக்கு சென்ற ஆட்சி காலத்தில் அனைத்து உதவிகளும் புரிந்தார் ,அனைத்து நல திட்டங்கள் ,இலவசங்கள் என அனைத்தும் தாராளமாக கிடைத்தது .இவரது மைத்துனர் திரு சக்கரவர்த்தி திமுக நகர செயலாளர் .
அதில் ஒரு உண்மை மறுக்கப்பட்டிருக்கிறது ,தெரிய வில்லையா அல்லது தவிர்க்கப்பட்டதா என்று தெரிய வில்லை ,அது வேலூர் ஆட்சியர் அலுவலகம் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்டது ,அந்த மாளிகைக்கு சி ,பி சிற்றரசு மாளிகை என்று பெயர் சூடியவரும் அவர்தான் ,அதை திறந்து வைத்தவரும் அவர்தான் என்பதை நமது நண்பர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்
உண்மையில் இங்கு வாழும் நமது இனத்து மக்களக்கு பெரும்பான்மையோருக்கு அவர் முத்தரையர் என்று தெரியாது ,எனக்கும் கூட மணிமாறன் அவர்கள் கூறிய போதுதான் தெரியும் .அதேபோல் திரு முத்தையா முரளிதரன் அவர்கள் நம்மவர் என்றும் கூறியதால் நமது இணைய தளத்திலும் போட்டிருக்கிறோம் ,ஆனால் சமிபத்தில் வேறு ஒரு இனத்தின் இணையதளம் ஒன்றை பார்க்க நேரிட்டது அதில் அவர்களும் முத்தையா முரள்தரன் அவர்களின் இனத்தை சார்ந்தவர் என்று பதிவிட்டிருக்கிரார்கள் ,நாமக்கல் நண்பரும் இதையே தான் என்னிடத்தில் கேட்டார் காரணம் முரள்தரனின் மனைவி அந்த இனத்தை சார்ந்தவர் நன்றாக தெரியும் என்றும் கூறினார் .காரணம் ஒரு நாயடு நண்பர் ஒருவர் சிற்றரசு எங்களவர் என்று என்னிடம் கூறினார் ,ஆக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியது நிறைய உள்ளது .

முத்தரையர் வளர்ச்சி சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று
நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைத்தார்.
 
முத்தரையர் வளர்ச்சி சங்கம் தலைவர் அருணாச்சலம்
அளித்த மனுவில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பொன்னுரங்கபுரம்,
திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு ஆகிய
ஊர்கள் உள்ளது. இப்பகுதி மக்கள், மாணவ, மாணவியர் திருவானைக்காவல்,
திருச்சிக்கு செல்ல திருச்சி - சென்னை நான்கு வழி சாலையை கடந்து
செல்கின்றனர். சாலையை கடக்கும் போது அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது.
எனவே, இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். கிளிக்கூடு இடையாற்று மங்கலம்
இடையே கொளளிட ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும், என
குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருமுத்தரையர் புகழ் பாடும் நாலடியார் ..!!

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்;-

திருக்குறள், நாலடியார், பழமொழி, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ

மூலம், ஆசாரக் கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,

முது மொழிக் காஞ்சி என்ற அற நூல்கள் 11.

திணை மாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை

எழுபது,திணைமாலை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது என்ற

அகநூல்கள் 6.

களவழி நாற்பது என்ற புற நூல் 1 ஆக மொத்தம் 18.

இவற்றுள் அகநூல்களே 11 ஆக அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் சங்க

காலத்தை ஒட்டியும், பிற்காலத்தும் எழுதப் பெற்ரவை.எனவே, இவற்றைச்

சங்க மருவிய கால நூல்கள் என்றும், நூலாசிரியர்களைப் பிற்சான்றோர்

என்றும் வழங்குவது தமிழ் இலக்கிய மரபாக உள்ளது. அற நூல்களின் காலம்

என்றே இக்காலம் கருதப்பட்டு, இலக்கிய ஆசிரியர் பலராலும்

விவரிக்கப்பட்டு வருகின்றது.

நாலடியார்;-

1. அறத்துப்பால் :- துறவற இயல், இல்லறவியல்

2. பொருட்பால் :- அரசு இயல், நட்பு இயல், இன்ப இயல், துன்ப இயல், பொது

இயல், பகை இயல் பல்நெறி இயல்


3. காமத்துப்பால் : இன்ப துன்ப இயல், இன்ப இயல்

என்பதாக, அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்ற

முப்பால்களையும், 400 வெண்பாக்களைக் கொண்டிலங்குகின்றது.

சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்டதொரு தொகுப்பே

நாலடியார்.



"Something is better than nothing " என்பதற் கிணங்க ஒரு சிலவற்றையேனும்

மேலோட்டமாகத் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. மிகவும் அதிகமாகப்

போனால் 4 பாடல்களைக் கீழ் வகுப்புக்களில் சிலர் படித்திருப்பர்.

7-ஆம் நூற்றாண்டின் ந்டுப்பகுதியில் சமணர்கள் கூட்டணி அமைத்து

எழுதித் தொகுத்ததே நாலடியார் என்பது அறிஞர்கள் கருத்தாகும். ,

முத்தரையர் என்ற அரசர் பரம்பரையினரைப் பற்றிய குறிப்புகள் இரு

பாடல்களில் இடம்பெற்றிருப்பதையே காரணமாகக் கூறுகின்றனர்.

அந்த இரு பாடல்களை மட்டும் இங்கே காண்போம்.



நாலடியார் , பொருட்பால், அரசு இயல் :20 : தாளாண்மை 200


உழைத்து உண்ணலே பேரின்பம்


. பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும்

கருணைச் சோறு ஆர்வர் கயவர், கருணையைப்

பேரும் அறியார், நனி விரும்பு தாளாண்மை

நீரும் அமிழ்து ஆய்விடும்.




கருத்துரை :- இலவசமாகப் பெற்று உண்னும் விருந்து உணவைவிடத் தானே முயன்று உழைத்துக் குடிக்கும் தண்ணீர், உழைத்தவனுக்கு

அமிழ்தத்தை நிகர்த்தது ஆகும்.





தெளிவுரை- பெருமுத்தரையர் பெரிதும் மகிழ்ந்து அன்னதானம் செய்வர் அவர் வழங்கும் பொரியலுடன் கூடிய சோற்றை முயற்சி எதுவும்

செய்யாமல் கயவர் வாங்கி உண்பர். பொரிக்கறியையும் சோற்றையும்

அறியாதவராய்த் தம் அயரா உழைப்பால் தாம் முயன்று பெற்ற தண்னீர் கூட உழைப்பாளிக்கு அமிழ்தத்தை ஒத்த இன்பம் தருவதாகும்

 

நாலடியார் : நான்கு : துன்ப இயல் : 30. மானம்



யாரிடமும் யாசிக்க மாட்டார்


மமல்லல் லா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்

செல்வர் எனினும், கொடாதவர் நல்கூர்ந்தார்,

நல்கூர்ந்தக் கண்னும், பெரு முத்தரையரே,

செல்வரைச் சென்று இரவாதார்.




கருத்துரை :- மற்றவர்க்கு உதவாத செல்வந்தர், செல்வந்தர் அல்லர். வறுமையிலும் செம்மை காத்து, யாரிடமும் சென்று யாசிக்காதவர்,
பெரு முத்தரையருக்கு இணையான
பெரும் புகழுடையவராவர்.




தெளிவுரை :- வளப்பம் மிக்க பெரிய உலகத்து வாழ்வோரும், மிகுந்த செல்வராக இருந்த போதிலும், ஏழைக்கு இரங்காத கொடியவர் வறியரே. வறுமையுற்ற போதும் சென்று யாரிடமும் யாசிக்காதவர் பெரும் முத்தரையருக்கு இணையான செல்வராவார்.





சிறப்புறை :- பெரும் முத்தரையரின் பெருமை இரண்டாம் முறை பேசப் படுகின்றது.



!

உதவி :- புதிய பார்வையில் பதினெண் கீழ்க்கணக்கு
நாலடியார் மூலம், தெளிவுரை, சிறப்புரை, கருத்து அடைவு

க.ப.அறவாணன்

தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு,
அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை
சென்னை- 600 029


தொலை பேசி :- 044-2374 4568



தமிழ் வெல்க !
 
 
News From : CLICK

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

மதுவை தவிர்ப்போம்...

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

 மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

 ... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

 1. ரம்.... 50-60%
 2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
 3. ஷெர்ரி, போர்ட்---20%
 4. ஒயின்---10-15%
 5. பீர்--4-8 %
 6. சாராயம்--40-50%

 மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.

 மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.

 இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

 இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.

 இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

 பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

 மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.

 எனவே, நண்பர்களே...!!!

 மதுவை தவிர்ப்போம்...

 சுய சிந்தனை பெறுவோம்.

--கரிகாலன் ஜெயராமன்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

அறிவிப்பு பலகை



வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

“சிந்தனைச் சிற்பி” - மறு பதிப்பு

சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
இவரது இயற்பெயர் சின்னராஜ். கா...

ஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். 1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
 
-திருமேனி

 
சில தினங்களுக்கு முன்பு இங்கே மரியாதைக்கு உரிய திரு. திருமேனி அவர்கள் எழுதிய செய்திக்கு திரு. வேலூர் சண்முகம் "முத்தரையர் இணையத்தில்" வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு ..
திரு சி.பி சிற்றரசு , குறித்த விவரங்கள் விளக்கமாக சில காலங்களக்கு முன்னர் நமது குழுமத்தில் பதிவிட்டிருந்தோம் ,அப்போது நண்பர்கள் அவர் நாயுடு என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி சந்தேகங்களும் எழுப்பப்பட்டது அப்போது நமது நண்பர் திரு மணிமாறன் போன்றோர் அவர் முத்தரையர் தான் முத்தரையர் சங்க நிறுவுனர் திரு வேங்கட சாமி அவர்களும் நாயுடு என்றே கூறப்பட்டார் என்பதை சுட்டி காட்டி பதிவிட்டிருந்தோம் .நிற்க தற்போது எனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது ,மற்ற இடங்களில் பதிவு செய்யப்பட்ட பின்பு எனக்கு அனுப்ப பட்டிருந்தது அதில் அவரை பற்றிய தகவல்கள் அவரின் அரசியல் பற்றியவையும் இருந்தது ,கருணாநிதிக்கும் அவருக்கும் கருத்து வேறு பாடு காரணமாக அதிமுகவுக்கு சென்று விட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அதோடு அக்கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது .திரு .சி .பி சிற்றரசு பெயர் வேலூர் மாவட்ட ஆட்சியாளார் கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடபட்டிருந்தது .
சி.பி .சிற்றரசு மாளிகை வேலூர் - இது தான் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலுகம் ,பாலாற்றங்கரை ஒட்டி சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது ,இந்த அலுவலகத்தை ஒட்டி முத்தரையர் இன மக்கள் மற்றும் முதலியார் இன மக்களும் தலித்துகளும் வாழும் பகுதி ,இது மூன்றாம் நிலை நகராட்சியாக சென்ற திமுக ஆட்சி காலத்தில் தரம் உயர்த்தப்பட்டு முத்தரையர் இனத்தை சார்ந்த திருமதி ,ஆர்.பி, ஜெயலக்ஷ்மி ஏழுமலை ,முதல் மற்றும் கடைசி நகராட்சி தலைவர் .இப்போது இது வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது .திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களின் மகன் திரு ,சசிகுமார் அவர்கள் மாமன்ற உறுபினராக வெற்றி பெற்று வெற்றிகரமாக சிறப்பாக செயல் பட்டு வருகிறார் ,இவரது தந்தை திரு ,ஆர் .பி ஏழுமலை அவர்கள் திமுக ஒன்றிய செயலாளராக நீண்ட காலமாக இறுந்து வருகிறார் ,வேலூர் அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தி ,நம் மக்களக்கு முடிந்த அளவுக்கு சென்ற ஆட்சி காலத்தில் அனைத்து உதவிகளும் புரிந்தார் ,அனைத்து நல திட்டங்கள் ,இலவசங்கள் என அனைத்தும் தாராளமாக கிடைத்தது .இவரது மைத்துனர் திரு சக்கரவர்த்தி திமுக நகர செயலாளர் .
அதில் ஒரு உண்மை மறுக்கப்பட்டிருக்கிறது ,தெரிய வில்லையா அல்லது தவிர்க்கப்பட்டதா என்று தெரிய வில்லை ,அது வேலூர் ஆட்சியர் அலுவலகம் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்டது ,அந்த மாளிகைக்கு சி ,பி சிற்றரசு மாளிகை என்று பெயர் சூடியவரும் அவர்தான் ,அதை திறந்து வைத்தவரும் அவர்தான் என்பதை நமது நண்பர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்
உண்மையில் இங்கு வாழும் நமது இனத்து மக்களக்கு பெரும்பான்மையோருக்கு அவர் முத்தரையர் என்று தெரியாது ,எனக்கும் கூட மணிமாறன் அவர்கள் கூறிய போதுதான் தெரியும் .அதேபோல் திரு முத்தையா முரளிதரன் அவர்கள் நம்மவர் என்றும் கூறியதால் நமது இணைய தளத்திலும் போட்டிருக்கிறோம் ,ஆனால் சமிபத்தில் வேறு ஒரு இனத்தின் இணையதளம் ஒன்றை பார்க்க நேரிட்டது அதில் அவர்களும் முத்தையா முரள்தரன் அவர்களின் இனத்தை சார்ந்தவர் என்று பதிவிட்டிருக்கிரார்கள் ,நாமக்கல் நண்பரும் இதையே தான் என்னிடத்தில் கேட்டார் காரணம் முரள்தரனின் மனைவி அந்த இனத்தை சார்ந்தவர் நன்றாக தெரியும் என்றும் கூறினார் .காரணம் ஒரு நாயடு நண்பர் ஒருவர் சிற்றரசு எங்களவர் என்று என்னிடம் கூறினார் ,ஆக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியது நிறைய உள்ளது .

புதன், 22 ஆகஸ்ட், 2012

இடைகாலத்திய புதுக்கோட்டை வட்டாரத்தில் பணபுழக்கம்

இந்திய வரலாற்று வரைவியலில் பணம் / காசு பற்றிய ஆய்வு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்துகொண்டுள்ளது. ஜேம்ஸ் ப்ரின்செப்பின் காசு பற்றிய பார்வைதான் இந்திய வரலாற்றினைப் புதிய ஆய்வுமுறையில் எழுத வழிவிட்டது. இந்தி யாவில் இருவகைகளில் பழங்காசுகள் கிடைத் துள்ளன: புதையல்காசுகள்; தனித்தனியே கண் டெடுக்கப்படும் காசுகள். புதையல்காசுகள் கண் டெடுக்கப்பட்ட இடங்களைக் கருத்தில்கொண்டு வணிகப்பாதைகளை ஓரளவிற்கு அனுமானிக்கலாம். தென்னகத்தில் காசுபுதையல்கள் (Hoard coins) அரண் மனை வளாகங்களிலோ, கோட்டை கொத்தளங் களிலோ, கோயில் வளாகங்களிலோ கிடைக்க வில்லை. வணிகநகரங்களிலோ, துறைமுகநகரங் களிலோ கிடைக்கவில்லை. தமிழகத்திலும் இதே நிலைதான். சிதறலாகக் கிடைத்த காசுகளைவிட புதையல்களில் கிடைத்த காசுகளே மொத்தமாக ஒரே இடத்தில் அதிகமாகக் கிடைத்திருப்பதால் இடைக்காலத்து வரலாற்றில் காசுகள் பெரும் பாலும் தனியாரிடமே புழக்கத்தில் இருந்துள்ளன என்று கருதலாம்.
சில இடங்களில் மட்டும் குவியல் களாகக் கிடைத்திருப்பதால் இவை பரவலாகப் புழக்கத்தில் இல்லை என்றும் கொள்ளலாம். தமிழகத்தில் சோழமண்டலத்தில் காவிரிச் சம வெளியில் காசுகுவியல்கள் கிடைக்கவில்லை. இடைக் காலத்தில் மக்கள்நெருக்கம் இல்லாத நிலப்பரப்பு களான கொங்கு, பட்டுக்கோட்டை போன்ற பகுதி களிலேயே கிடைத்துள்ளன. இவை வணிகவழி களைக் கொண்டிருப்பன. காவிரிச்சமவெளியில் காசுகள் அதிகமாகக் கிடைக்காமைக்குக் காரணம் அங்கு உலோகங்கள் பெரும்பாலும் படிமக்கலைக்குப் பயன்படுத்தப்பட்டதால் இருக்கலாம். வறண்ட புதுக்கோட்டைப் பகுதியில் முப்பது வகையான காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளன என்பதனைக் கல்வெட்டுகள் பதித்துள்ளன. ஆனால், புதுக் கோட்டை தொண்டைமான்அரசு வெளியிட்ட அம்மன்காசினைத்தவிர முக்கிய வரலாற்றுச் சம்பவத் தினைக் கோடுகாட்டும்படியான வரலாற்றுக் காலத்திய காசுகள் எதுவும் இதுவரை இவ்வட்டா ரத்தில் கிடைக்கவில்லை.
ஒரு வறண்டபகுதியில் இத்தனை வகையான காசுகள் ஏன் புழக்கத்தில் இருந்தன என்ற கேள்வி எழ வேண்டும். ஆனால், ஆய்நூற்றுவர், வளஞ்சியர் போன்ற வணிகக் குழுக்கள் இவ்வட்டாரத்தில் இயங்கியுள்ளன. இவர்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் பரவலாகக் கிடைத்துள்ளன. காலனியகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் பணத்தில் பலம்கொண்ட வணிகர்களாகத் தொழில் செய்த நாட்டுக்கோட்டை செட்டியார்களின் பூர்வீகம் புதுக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இக்கட்டுரையில் காசுகளைக் குறிக்கப் பணம் என்ற பொதுச்சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பணத்தினை மக்கள் மதித்தனர் என்றும் சொல்லலாம்; மதிக்கவில்லை என்றும் சொல்லலாம். இன்றும்கூட உழைப்போர் காசுகளைக் கோயில் போன்ற இடங்களில் புனித நீர்நிலைகளில் வீசி எறிவர்; செல்வர் கல்லாப்பெட்டியில் சேமிப்பர். இப்படித் தான் பணம் புதையல்களாக்கப்பட்டிருக்கும்.
பணம் : பெயர்கள்
பொன், துளைப்பொன், கலிபொன், காசு, நல்காசு, நற்காசு, அன்றாடு நற்காசு, அன்றாடு நற்புதுக்காசு, பழங்காசு, அன்றாடு நற்பழங்காசு, பணம், அன்றாடு வராகன்பணம், பஞ்சசலாகை, பஞ்சசலாகை அச்சு, இராசிபணம், இராசபணம், செண்பககுளிகை பணம், வாளால்வழிதிறந்தான் குளிகைபணம், அன்றாடு வழங்கும்பணம், அன்றாடு வழங்கிய வராகன்பணம், ஆடூரபணம், ஆடுர வெட்டு, வாளால் வழிதிறந்தான்பணம், வாளால் வழிதிறந்தான் குளிகை பொன், சக்கரம்பணம், அன்றாடு வழங்கும் சக்கரம்பணம், அச்சுவரிக்காசு, புள்ளிக்குளிகை வராகன், சிற்றிராசிபணம், திருக் கோகர்ணம் மின்னல்பணம் போன்ற சொற்களால் பணம் இவ்வட்டாரக் கல்வெட்டுகளில் பதிக்கப் பட்டுள்ளது.
பணம் : வகை
இவ்வட்டாரத்தில் இருமுறைகளில் காசுகள் உருவாக்கப்பட்டுள்ளன : அச்சுக்காசு; வெட்டுக் காசு. முதலாவது cost coins என்றும் - அதாவது, வார்க்கப்பட்ட காசுகள் என்றும் வெட்டுக்காசு என்பது Punched coins என்றும் கருதலாம். காட்டு: பஞ்சசலாகை அச்சு; ஆடூர வெட்டு.
பணம் புழங்கும்வட்டம் (Area of Money circulation)
தொடக்கத்தில் உள்ளூர்க்காரர்களே உள்ளூரில் ஒருவரைச்சாத்தி பணத்தினை இட்டுக் கோயில் விழாவினையும் பிற கொண்டாட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனால், காலம் செல்லச் செல்ல ஒரு கூற்றத்திலிருக்கும் தனியார் பிறிதொரு கூற்றத்தி லிருந்த இன்னொரு தனியார்வசம் பணத்தினைக் கோயிலுக்காகக் கொடுத்துள்ளனர். ஒல்லையூர் கூற்றத்திலிருந்து முற்றூற்றுக் கூற்றத்திற்கு இப்படிப் பணப்புழக்கம் விரிந்துள்ளது. உறையூர்க் கூற்றத்துப் புலிவலத்துஅரங்கன் இவ்வட்டாரத்தில் உள்ள ஒரு கோயிலில் பணம் வைத்துள்ளான். கி.பி.1206-இல் ராஜேந்திர வளநாட்டுத் திருவால நாட்டின் தனியார் ஒருவர் திருவிளாங்குடி கோயிலில் நொந்தா விளக்கிற்குப் பண்டாரத்தே காசு இருபத்துநாலு வைத்துள்ளார். பணம் இப்படி ஒருவருக்கு, நாடு விட்டு நாடு தாண்டி உறவினை ஏற்படுத்தியுள்ளது. திருநலக்குன்றத்தின் கைக்கோலர் ஒருவன் திருச்சிராப் பள்ளியின் உடையானாக இருப்பவனுடன் பணப் புழக்கம் கொண்டிருக்கிறான். படைத்தலைவன் நிலையிலிருந்த மலைமண்டலத்தினை (present Kerala state) ஊராகக் கொண்ட நாட்டு அரையன் ஒருவன் இவ்வட்டாரத்துக் கோயில் ஒன்றில் அமுது படிக்குப் பழங்காசு இருபது வைத்துள்ளான்.
பணம் புழங்கியவர்கள்
மதிப்புறு பட்டப் பெயர்களான எட்டி, கிழவன், உடையான், கண்டன், நாடாழ்வான், அரையன், குடையான், கடம்பரையன், பல்ல வரையன், மூவேந்தவேளான், விழுப்பரையன், தென்னவதரையன், முனையதரையன் வாணவ தரையன், காங்கேயராயர் போன்றவர்களே பணப் புழக்கத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்தனர் என்று அறியமுடிகிறது. மாவலி வாணாதிராயர், காங்கேய ராயர், நிஷதராஜன் போன்ற வட்டாரத் தலைவர் களும் புழங்கியுள்ளனர். அரசுமக்கள், மறமுதலிகள் போன்று இனக்குழுக்களைத் தலைமையேற்று நடத்தியவர்களும், கைக்கோலர், இரதகாரர் போன்று தொழில்சார் குழுமத்தினரும் பணப்புழக்கத்தில் ஈடுபட்டிருந்தனர் என்று அறியமுடிகிறது.
கோயில் அலுவலர்களான கோயில் மெழுகு கின்ற தவசி,கணக்கு எழுதுபவர், கோயில்தானத்தார், கோயில்கணக்கு, ஸ்ரீ மாகேஸ்வர கண்காணி செய் வார், ஆதி சண்டேஸ்வரர், ஸ்ரீகார்யம் செய்பவர், தேவகன்மி போன்றவர்களும் இப்புழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு சமூகத்தின் பலநிலை களில் இயங்கிவந்த மக்கள் பணப்புழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சில குழல்களில் சில குழுக்களில் மட்டும் பணம் புழங்கியுள்ளது. இது கோயிலையும் கடவுளையும் முன்னிறுத்தி நிகழ்ந்துள்ளது. விருதுராஜ பயங்கர புரத்துநகரத்தார் தம்மைப் பெருங்குடி என்று விளித்துக் கொள்கின்றனர். ஆனால், கடவுளுக்குத் தம்மைக் குடிமக்கள் என்று அறிவிக்கின்றனர். பொருளியல் நிலையில் தம்மை நெடுக்காகவும், சமயநிலையில் தம்மைக் கிடையாகவும் கணித்துக் கொண்டனர் என்று அறியமுடிகிறது. தம்மைக் காக்கும் நாட்டு அரையர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் காசு இறுத்துள்ளனர். இங்கு, பணம் வணிகர்குழுமம், காவலர்குழுமங்களிடையே நிகழ்ந்துள்ளது. இங்குக் கடவுள் சாட்சியாக்கப் பட்டுள்ளார். கிபி 1117-இல் ஒரு ஊரிலுள்ள வெள்ளாளர் அதே ஊரிலுள்ள காணிஉரிமை யுடைய சிவபிராமணரிடம்தான் நாயனார் சந்தி விளக்கிற்குக் காசு இருபது இட்டுள்ளார். அதே யாண்டு இன்னொரு வெள்ளாளர், உடையான் பட்டம் கொண்டவர், கோயில்காணி உடைய சிவபிராமணரிடம் காசு இருபத்துஇரண்டு சந்தி விளக்கிற்கு அளித்துள்ளார். இப்படி இப்பணப் புழக்கம் நிலவுடைமையாளர்களுக்கும் சமயம் சார்ந்த குழுமத்திற்கும் இடையே நிகழ்ந்துள்ளது.
அலுவலகம்
ஒருவரிடமிருக்கும் பணத்தினைப் பிறிதொரு வருக்கு மாற்றித்தருவதற்கான ஒரு முகாண்மையாக ஆவணக்களரியும், பண்டாரமும் இயங்கியுள்ளன. இவை பெரும்பாலும் கோயில் நிறுவனங்களில் இயங்கியதாகக் கல்வெட்டுகளில் அறியலாம். பண்டாரத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டதனைப் பண்டாரத்தில் ஒடுக்குகொண்ட என்ற கல்வெட்டுத் தொடரால் அறியலாம். ஆவணக்களத்தே காட்டி என்ற தொடர் இதனை மேலும் விளக்கும். பண்டா ரத்தில் பணம் பெறப்பட்டது என்பதனைப் பண்டா ரத்தில் வாங்கின சக்கரம்பணம், ஸ்ரீ பண்டாரத்திலே கைக்கொண்ட போன்ற கல்வெட்டுத்தொடர்கள் விளக்கும்.
காலம் செல்லச் செல்ல இவற்றின் இயக்கம் அருகி வந்துள்ளதைப் போன்று தெரிகிறது. ஆவணக் களரியும், பண்டாரமும் வேறுவேறான அலுவலகம் போன்றும் கருதத் தோன்றுகிறது. இவை பணப் புழக்கத்தில் இயங்கியதனைப் பின்வரும் கல்வெட்டுத் தொடர்களால் அறியலாம் : பண்டாரத்து இட்ட, பண்டாரத்து ஒடுக்கின, ஸ்ரீ பண்டாரத்தே இட்ட காசு, ஆவணக்களத்தே காட்டேற்றி, ஸ்ரீ பண்டாரத்திலே ஊரார் தருவிக்க, ஸ்ரீ பண்டா ரத்தில் நாங்கள் வாங்கி, ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்க, ஸ்ரீ பண்டாரத்திலே கைக்கொண்டு, ஸ்ரீ பண்டா ரத்திலே ஒடுக்கு கொண்டு, ஸ்ரீ பண்டாரத்து இவனை மூன்று அச்சு ஒடுக்குவித்துக் கொண்டு, ஸ்ரீ பண்டாரங்களில் கொண்டகாசு, ஸ்ரீ பண்டா ரத்திலே ஒடுக்கின பணம், ஸ்ரீ பண்டாரத்திலே வாங்கின சக்கர பணம்.
நொந்தாவிளக்கு
தொடக்கத்தில் கோயிலில் நொந்தாவிளக்கு எரிப்பதற்காகத் தனியார் சிலரால் துளைப்பொன் என்ற பெயரில் காசு / பணம் இருப்பாக வைக்கப் பட்டன. இருப்பாக வைக்கப்பட்ட இக்காசுகள் வைத்த என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளன. கோயில்கள் நன்கு வளர்ந்த பொருளியல் நிறுவன மாக உருப்பெற்ற பிறகே ஸ்ரீபண்டாரத்திலே ஒடுக்கினகாசு, ஸ்ரீபண்டாரத்திலே இட்டகாசு, ஸ்ரீ பண்டாரத்திலே குடுத்துக்கொண்டகாசு போன்ற தொடர்கள் பதிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கோயிலில் நொந்தாவிளக்கு எரிப்பதற்காகத் தனி யாரால் வைக்கப்பட்ட துளைப்பொன் பிறிதொரு தனியாரைச் சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. காசினைப் பெற்றுக்கொண்டவர்கள் அவ்விளக்கினை எரிப் பதற்கு ஒப்புக்கொண்டனர். காசினைத் தொடக்கத்தில் வழங்கியவர்கள் முத்தரையர், இருக்குவேள் போன்ற குரிசில் குடும்பத்தின் நபர்களாக இருந் துள்ளனர்.
காட்டாக, முத்தரையர் நம்பியான தொங்கலார் மகளார் நொந்தாவிளக்கு ஒன்றிற்குப் பொன் இரு கழஞ்சரை துளைப்பொன் இரண்டு வைத்துள்ளனர். இருக்குவேள் குரிசில் குடும்பத்தின் செம்பியன் இருக்குவேளின் மனைவியார் தேவியார் நங்கை நொந்தாவிளக்கு ஒன்றுக்குத் துளைப்பொன் ஒரு கழஞ்சரை வைத்துள்ளார். நக்கன் என்ற முன் னொட்டினைக் கொண்ட நபர்களும் பணப் புழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வணிகத் தோடு தொடர்புடையவர்கள். இதனை உறுதி செய்வது போல் கல்குறிச்சி வரகுணவதி அரையன் ஆன நக்கன்செட்டி கோகர்ணத்து மாதேவர்க்கு நொந்தாவிளக்கிற்குப் பொன் பதின்கழஞ்சு வைத் துள்ளார். இவர் அரையன் என்ற பட்டம் கொண்ட தால் நிலவுடைமையாளராகவும், நக்கன்செட்டி என்ற பட்டம் கொண்டதால் வணிகராகவும் இயங்கி யுள்ளார் என்று அறியலாம். சார் என்ற ஊரினுடைய அரையன் ஆட்சியாளர்களுக்கு அணுக்கமாக இருந்ததனை சார் அரையன் தன்னன் எதிரிலி பெருமாளான குலோத்துங்க கடம்பரான அணுக்கி என்ற பெயரால் அறியலாம். சோழஅரசன் முதலாம் பராந்தகனின் மகன் கோதண்டராமன் ஆதிக்க விக்ரமகேசரி என்ற மதுராந்தகன் இருக்குவேள் என்பவனும்கூட காசுகளை நொந்தாவிளக்கு இட்டு வைத்ததன்மூலம் இவ்வட்டாரத்தில் ஆட்சியதி காரத்தில் இருப்பவர்கள் பெரிதும் பணப்புழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர் எனலாம்.
தொடக்கத்தில் கோயிலில் நொந்தாவிளக்கு எரிப்பதற்கான செலவினை ஏற்றுக்கொள்ளவும் மாசிமகம் போன்ற விழாக்களின் கொண்டாட்டச் செலவினை ஏற்கவும், பிராமணர்களுக்கு உண வளிக்கவும் காசுகள் சிலரை சாட்சியாகக் கொண்டு கோயில்களில் வைக்கப்பட்டன. காலம் தொடர இப்பணப்புழக்கம் கோயிலை மையமிட்டு இயங்கி யதாக அறியமுடிகிறது. நிலப்பரிமாற்றத்திலும் காசு முதன்மையுறுகிறது. காசினைப் பெருமளவு இருத்திவைக்கும் அளவிற்குக் கோயில் நிறுவனம் வளர்ந்தது. இச்சூழலில்தான் முன்பு குறிப்பிட்டது போல் பண்டாரம் என்ற அலுவலகம் எழுகிறது. தொடர்ந்து, கோயில் அலுவலர்களும், தேவரடி யார்களும் பணப்புழக்கத்தில் முதன்மையுறுகின்றனர். முதலிகள், கோமற்றவர், அச்சுபெற்ற பேறாளர் போன்ற அலுவலர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
மெள்ள மெள்ள பணப்புழக்கம் கோயிலிற்கும், கோயில்தொடர்பானவர்களுக்கும், சிவ பிராமணர் களுக்கும், வணிகர்களுக்கும், நிலவுடைமையாளர் களுக்கும் இடையில் அதிகரிக்கிறது. புழக்கம் அதிகமானதால் புதிய கோயில்கள் கட்டுவதும், புதிய கடவுள்உருவங்களைப் பிரதிட்டை செய்வதும் வழக்கமானது.
திருப்பணி
இடைக்காலத்திய இந்திய வரலாற்றில் கோயில்கள் சமூகத்தினைத் தம் கட்டுக்குள் வைத் திருக்கும் அதிகார நிறுவனங்களாக இருந்தமை யால் அவற்றைக் கட்டவும், புனரமைக்கவும், அந் நிறுவனங்களில் கடவுள் உருவங்களைப் பிரதிட்டை செய்யவுமான பணிகளைப் பணத்தினைக் கொண்டு இவ்வட்டார மக்கள் செயல்பட்டுள்ளனர். கோயிலை ஆளும் உரிமையினை - அதாவது, கோயில் என்ற செல்வ நிறுவனத்தினை ஆளும் உரிமையினை ஆள்வோர் கோயில் சுவந்திரம் என்ற பெயரில் பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். பணம் கொண்டிருந்த இவ்வாளும் குழுமத்தினருக்கே இவ்வுரிமை கிட்டியுள்ளது.
கிபி 1259-இல் புதிதாக நிறுவப்பட்ட அக்கசாலை (Minting office) கூத்தர் என்ற கடவுளின் திருநாள்படிக்கு ஊனையூரின் குடிகள் ஆண்டுதோறும் ஒரு பணம் கொடுத் துள்ளார். இக்கடவுளை நிறுவியவர் காசு அச்சடிக்கும் ஊர்த்தட்டார். அழிநிலையிலிருந்த கோயில்களைத் திருப்பணி செய்து அவற்றை நிலைநிறுத்துவதற்கு சமூகத்தின் பல நிலைகளிலும் இயங்கிவந்த மக்கள் தங்கள் பணியினைச் செய்து உள்ளனர். கி.பி.1268இல் நாடுபிடித்த வைப் பூருடையார் என்பவரும் இரண்டுகரை நாட்ட வரும் திருக்கற்றளி செய்வதற்காக நாயனார் ஸ்ரீ பண்டாரத்தில் ஊர்முதலிகளின் பொறுப்பில் அறுபத்துநாலாயிரம் காசு ஒப்படைத்துள்ளனர். இவ்வூர் முதலிகள் ஊர்க்காவலர்களாகவும் இயங்கி யுள்ளனர். அதற்காக ஸ்ரீபண்டாரத்திலிருந்து அய்ம்பதினாயிரம் பணம் பெற்றனர். இவ்வாறு பணப்புழக்கத்தில் நாட்டுத்தலைவர்களும், நாட்ட வரும், ஊர்முதலிகளும் பண்டாரத்தின் வழியே ஈடுபட்டுள்ளனர்.
கி.பி.1300இல் திருநலக்குன்றத்தி லுள்ள கோயிலின் கோபுரத்திருப்பணிக்கு அவ் வூரிலுள்ள கைக்கோலர் ஒருவர் மூன்றுஅச்சு பணம் வழங்கியுள்ளார். பிறிதொரு கோயிலின் கடவுள்திருமேனிகள் செய்துவைப்பதற்குப் பணம் ஆயிரத்துநூறு ஒருவரால் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிற்குப் பிற ஊர்களும் தங்கள் பங்கிற்குப் பணம் வழங்கியுள்ளன. இதனை ஒரு கோயிலும் அதன் கடவுளும் பல ஊர்களில் பிரசித்தி பெற்றுள்ளதாகக் கருதலாம். பல ஊராரும் ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு வழங்கிய பணம் விவரம் வருமாறு:
பெருஞ்சாவூர் விழுக்காடு பணம் - 300
வீரைக்குடி................................................... 240
சுனையக்குடி................................................. 210
வீரராசெந்திரன் கள்ளிக்குடி........ 140
இதே போன்று மற்றொரு ஊரிலிருந்த கோயிலின் திருப்பணிக்கு அவ்வூரிலுள்ள ஒவ் வொருவரும் பணம் தந்துள்ளனர். அவர்கள் வழங்கிய பணத்தினுடைய தொகையின் அடிப் படையில் அவ்வூரிலுள்ள சமூகத்தின் பொருளியல் படிநிலையினை அறியலாம். அம்மக்கள் பின்வரு மாறு தம் தம் விழுக்காடு பணத்தினை வழங்கி யுள்ளனர்.
பேர் ஒன்றுக்கு பணம் அரை
இளமையாளர் பேர் ஒன்றுக்கு பணம் கால்
படைப்பற்று பேர் ஒன்றுக்கு பணம் அரைக்கால்
குடிமக்கள் பேர் ஒன்றுக்கு பணம் அரைக்கால்
தண்டிகள் பேர்ஒன்றுக்கு பணம் அரைக்கால்
பள்ளர் / பறையர் பேர் ஒன்றுக்கு பணம் அரைக்கால்
கோயிலை மையமாகக்கொண்டு இயங்கிய இப்பணப்புழக்கம் பொருளியல் அடிப்படையில் சமூகப் படிநிலையினை அமைத்துள்ளது. சமூகப் படிநிலையும், பொருளியலும் ஒன்றுக்குள் ஒன்று இயைந்துள்ளதனை இதனால் அறியலாம். கோயிலைத் தங்கள் கட்டுக்குள் இருத்திக்கொண்டால் அதன் வழியே மக்களையும் தம் கட்டுக்குள் இருத்திக் கொள்ளலாம் என்று எண்ணியே ஆட்சியாளர் களும் கோயில் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் தெய்வமான தம்பிராட்டியாரின் வழி பாட்டுச்செலவினை ஏற்க மூன்றுபடை பொற் கோயில் கைக்கோலர் ஒருவர் இருபத்தஞ்சுகாசு கொடுத்துள்ளார். இதனை அவர்களுள் கணக்கு எழுதும் ஒருவரிடமே 1228இல் ஒப்படைத்துள்ளார். பிறிதொருமுறை ஒருகோயிலின் திருப்பணிக்காகக் கோயில் பண்டாரத்தில் முப்பதுபணம் ஒடுக்கப் பட்டுள்ளது. 1303இல் ஒரு கோயிலின் அலுவலர்கள் கோயிலின் திருப்பணிக்காகக் கிணறு உட்பட நீர்ப்பாசனவசதி கொண்ட சேரவேளார்குடிக் காட்டினை ஏலத்தில் விற்றுள்ளனர். இதன்வழி இருபதுபணம் பெற்றுள்ளனர். பணத்தேவை யினைக் கோயில் அலுவலர்கள் இப்படி நிறை வேற்றிக் கொண்டனர். மற்றுமொரு சந்தர்ப் பத்தில் ஒரு கோயிலின் திருப்பணிக்கு வேரொரு முதல் இல்லாமையால் நிலத்தினை ஒற்றியாக வைத்துப் பணம் அறுபது வாங்கப்பட்டது. இப்படிக் கோயில்திருப்பணியை மையமிட்டு ஒருவகையான பணப்புழக்கம் நிகழ்ந்துள்ளது. திருப்பணி செய்யப் படவேண்டிய கோயில் நாயனார் கோயில் இறந்து பட்டுக் கிடக்கையில் என்ற கல்வெட்டுத்தொடரில் பதியப்பட்டுள்ளது. 1400-இல் ஒரு முருகன் கோயிலில் உள்ள மண்டபத்தின் திருப்பணிக்காகப் பணம் திரட்டப்பட்டுள்ளது. அம்மண்டபத்திலுள்ள கபோதபடையினைச் செய்வதற்குக் கூலியாக உடையான் வெளிநின்றான் என்ற சிறுத்தொண்டன் என்ற தனியார் பண்டாரத்தில் அய்நூறு காசுகள் ஒடுக்கியுள்ளார்.
தண்டனையும் பணமும்
தண்டனையைப் பணமாக வசூலிக்கும் முறை இருந்துள்ளதைக் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. போர்க்குணமிக்க இவ்வட்டாரத்தின் அரையர்கள் கோயில்களை மையமிட்டு அரசாள்வதற்கு எழுகையில் தம்முள் பூசலைத் தவிர்த்து சமரசப்பேச்சினைக் கடைபிடித்துள்ளனர். இப்படி இரண்டுமலை நாட்டு அரையர்கள் தாம் காக்க வேண்டிய மக்களேயே வெட்டியும், குத்தியும் அழித்துள்ளதனை ஒரு கல்வெட்டில் பதிவுசெய்துள்ளனர். அவர்களுக் குள்ளே சண்டையிட்டும் செத்துள்ளனர். இதனைத் தவிர்க்கும்பொருட்டு கோயில்தானத்து முதலிகள் என்ற அலுவலர்களிடம் உடன்படிக்கை செய்துள்ளனர். அதன்படி அவர்கள் எதிர்காலத்தில் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை என்றும் ஒத்துக்கொண்டு உள்ளனர். அவர்களில், ஒருவர் அழிவில் ஈடுபட்டால் அவர் தாமாகவே நூறுபணம் தெண்டம் இட வேண்டும் என்றும், ஒரு ஊரே சேர்ந்து அழிவில் ஈடுபட்டால் அய்நூறுபணம் தெண்டம் இடவேண்டும் என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர். போர்க்குலத்த வரிடம் வீரம் பதிந்திருந்தது; பணமும் குவிந்திருந்தது.
ஊர்பாடிகாவல் புரிவோர் களவு செய்துள்ளனர் என்றும் அவ்வாறு களவு செய்கையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு களவிரப்பு என்ற பொருளில் தண்டம் கட்டவும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகிறது. இவர்களின் இரவுநேரக்களவு இராக்களவு காணுதல் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இவர் களுடைய இரவுக்களவினால் பாதிக்கப்பட்டவர் களுக்கு இராத்தெண்டமாக அய்நூறு பணம் தர வேண்டும் என்று பாடிகாவல் புரிவோர் தம்முள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் களவாடியுள்ளனர் என்பதனை நம்மிலொருவர் களவு காணக்கடவ தல்ல என்ற தொடரினால் விளக்கியுள்ளனர். களவாணிகளிடம் பணம் குவிந்துள்ளது என்ப தனையும் அதனைக் களவாடியே சேமித்துள்ளனர் என்பதனையும் கல்வெட்டு உறுதி செய்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் முதலி அலுவலர்கள் ஒரு கைக்கோலரைத் தண்டிக்க அவர்தம் நிலத்தினை விற்று தண்டப்பணம் ஆறாயிரத்தினை ஸ்ரீபண்டா ரத்தில் செலுத்தியுள்ளார். அச்சுபெற்றபேறாளர் என்ற அலுவலர்கள் ஒல்லையூரான மதுரை மறவர் களைப் பலவேதனைகள் செய்யுமிடத்து தங்கள் நிலத்தினை விற்று எண்ணாயிரம் நற்காசுகளைத் தண்டமாகச் செலுத்தியுள்ளனர்.
பாடிகாவலும் பணப்புழக்கமும்
பாடிகாவல்சுவந்திரம், அரசுசுவந்திரம் போன்ற ஆட்சி உரிமைகள் பணத்திற்காக விற்கப் பட்டுள்ளன. இவ்விற்பனையின் புழக்கத்தில் நாட்டவர், ஊரவர், தனியார் மற்றும் குடிமக்கள் பங்கு பற்றியுள்ளனர். ஊராரும், நாட்டாரும் தங்கள் உரிமைகளைப் பாடிகாவலர்களுக்கு மாற்றித்தந்து தங்கள் இயக்கத்தினை / பொறுப்புகளை விலக்கிக் கொண்டது ஒருவகையான அதிகார மாற்றமாகும்; இதனைச் சமூகமாற்றமாகவும் கருதலாம். 1340இல் திருமெய்யத்து சபையார் வலையர் சமூகத்தின் மூவன் காடப்பிள்ளை என்பாருக்கு பாடிகாவல் உரிமையினை இருநூறு வாளால்வழிதிறந்தான் பணத்திற்கு விற்றுள்ளனர். இப்பணம் விலை ஆவணக்களத்தில் கட்டப்பட்டுள்ளது. வேட்டைச் சமூகத்தின் ஓர் இனக்குழுத்தலைவர் பணத்தினால் இப்படி அதிகாரச்சமூகமாக மாற்றப்பட்டுள்ளார். பணப்புழக்கம் இப்படியொரு மாற்றத்தினை நிகழ்த்தி யுள்ளது.
1342இல் மேலூர் ஊரவர் வட்டாரத் தலைவரான சூரைக்குடி பொன்னன் அழகப் பெருமாள் என்பவருக்கு வாளால்வழிதிறந்தான் குளிகைபணம் அய்நூற்று ஐம்பதுக்கு பாடிகாவல் உரிமையினை விற்றுள்ளனர். 1380இல் துலுக்கர் கலகத்தால் அழிந்த ஆதனூர், அதனால் உண்டான விளைவுகளால் விளைச்சல் இல்லாத நிலையில் அவ்வூரார் தங்களை அரசிடமிருந்து காத்துக் கொள்ளும் பொருட்டு வாளால்திறந்தான் குளிகை முந்நூறுக்கு பாடிகாவல் உரிமையினைச் சூரைக்குடி அரசுக்கு விற்றுள்ளனர். இங்கு பாடிகாவல் உரிமை பாடிகாவற்கட்டு என்று சுட்டப்பட்டுள்ளது. இப்படிப் பணத்தினைக் கொடுத்துப் பாதுகாவல் தேடியுள்ளனர்.
1391இல் வடகோநாட்டு நாட்டவர் பேராம்பூர் அரசு என்ற ஆட்சி அலகின் தலைவரான நரசிங்கதேவர்க்கு அரசு சுவந்திரம் என்ற ஆளும் உரிமையினை வழங்கி யுள்ளனர். இதனால் இவ்வாட்சியர் தம் ஆளுகைக்கு உட்பட்ட புறகுடி மக்களிடமிருந்து வரியினைப் பணமாக வசூலிக்கும் அதிகாரத்தினைப் பெற்று உள்ளார். விளிம்புநிலையிலிருந்த புறகுடிமக்கள் வரிசெலுத்த வேண்டியிருக்க உள்குடிமக்கள் பற்றிய குறிப்பு இல்லை. 1431இல் வெவ்வேறு ஊர்களிலுள்ள மக்கள் தங்கள் ஊர்களைப் பாது காக்கும் பொருட்டுப் பாடிகாவல் உரிமையினை அன்றாடுவழங்கும் சக்கரம்பணம் முந்நூறுக்கு விற்றுள்ளனர். அன்றாடுவழங்கும் சக்கரம்பணம் என்பது currency in current circulation என்ற நடை முறையினை வலியுறுத்துவதாயுள்ளது. இக்கருத்தில் இவ்வட்டாரத்து மக்கள் கவனமாக இருந்துள்ளனர் என்று அறியமுடிகிறது. இதற்கான பணத்தினை பாடிகாவலர்கள் ஒரே தவணையில் வசூலிக்கவில்லை.
ஆடிமாதத்து அறுவடையின்போது ஒருபணமும், கார்த்திகை மாதத்து அறுவடையின்போது ஒரு பணமும் என்று வசூலித்துள்ளனர். இப்படி குடி மக்கள் ஆள்வோருக்கு உழைப்பினையும் கொடுத்து பணத்தினையும் கொட்டவேண்டியிருந்தது. இங்குப் பணப்புழக்கம் சமூகத்தினைப் பாதுகாவலர் என்றும், ஊரார் என்றும், குடிமக்கள் என்றும் மூன்றாகப் பகுத்துள்ளது. கிபி 1465இல் ஒரு ஊராரின் ஊரார் பிறிதொரு ஊராருக்குப் பாடிகாவலர் களாக இயங்கியுள்ளனர். இதன்படி, மேலூர் ஊரவர் இராசிங்கமங்கலத்து ஊரவற்கு சக்கரம் பணம் அய்நூறுக்குப் பாதுகாவல் உரிமையினை விற்றுள்ளனர். இங்கு சமநிலையில் இரு ஊராருக்கு இடையில் பணப்புழக்கம் நிகழ்ந்துள்ளது.
1483இல் நெல்வாயில் ஊரார் சக்கரம்பணம் இருபதுக்கு பாதுகாவல் உரிமையினை ஒருவருக்கு விற்றுள்ளனர். இப்பாடிகாவல் உரிமை என்பது பாதுகாவல் சுவந்திரம் என்பதோடு அதனை வாங்கியவருக்கு மதிப்புறு பட்டப்பெயரினையும் வழங்கியுள்ளது. இப்படி காரையூர் ஊரவர் தங்கள் ஊரின் பாது காவல்சுவந்திரம் என்ற உரிமையினை வாங்கிய வருக்குக் காரையூர்ப்பரையன் என்ற பட்டத்தினையும் 1518 இல் வழங்கியுள்ளனர். இதனை வாங்கியவர் ஊராளி என்ற சமூகத்தினைச் சேர்ந்தவராவார்.
இப்படி, பணப்புழக்கம் நாட்டாரையும், ஊராரையும் புறக்கணித்து கோயில்சுவந்திரம், அரசுசுவந்திரம், பாடிகாவல்சுவந்திரம் போன்ற புதுவகை உரிமைகள் விற்கப்படுவதற்கும் வாங்கப் படுவதற்கும் வழிவிட்டது. இதனால் புதிதாக ஓர் ஆளும் குழுமம் எழுந்துள்ளது.
கோயிலை மையப்படுத்திப் பணப்புழக்கம் நிகழ்த்தப்படுகையில் பல உரிமைகள் விற்கப்பட்டன; வாங்கப்பட்டன. கோயில்சுவந்திரம் என்ற உரிமை கூட கோயில் சிவபிராமணர்களுக்குக் கோயில் அலுவலர்களே ஊராரின் ஒப்புதலுடனும், முதலி அலுவலர்களுடனும் இணைந்து விற்கப்பட்டுள்ளது. கோயில் இயக்கத்தோடு தம்மை இணைத்துக் கொள்வதனை மக்கள் பெருமையாகவே கருதி யுள்ளனர். கோயிலின் மரியாதை மக்களுக்குப் பெரும் கவ்ரவத்தினைத் தருவதாகக் கருதப்பட்டது. 1515இல் பேரையூரில் ஊர்க்காராண்மை நிலவுரிமை கொண்ட ஒருவர் பணம் முப்பது செலுத்திப் பரிவட்டம் ஒன்றினைக் கோயிலில் வாங்கிக் கொண்டனர்.
பணமும் தேவரடியாரும்
கோயில் தேவரடியாரும், கோயில் அலுவலர் களும் நெருக்கமான பணப்புழக்கத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்று கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக் கின்றன. 1198இல் கோயில் தேவரடியார் ஒருவர் கோயில் திருப்பணிக்குக் கோயில் அலுவலரிடம் அய்நூறுகாசு ஒப்படைத்துள்ளார். 1228இல் பிறி தொரு தேவரடியார் சித்திரைத்திருநாள் விழாவின் செலவிற்கு காசுஆயிரம், பண்டாரத்தே ஒடுக்கி யுள்ளார். கி.பி. 1313-இல் கோயில் அலுவலர்களும் மடாதிபதிகளும் ஊராரும் கோயில் தேவரடியார் ஒருவருக்கு அன்றாடு வராகன்பணம் நூறுக்கு நிலம் விற்றுள்ளனர். 1238இல் ஊராரிடமும், கோயில் தானத்தாரிடமும் இருபது பழங்காசு கொடுத்து ஒருதேவரடியார் நிலத்தினை வாங்கி யுள்ளார். 1263இல் நாட்டாரும், கோயில் அலுவலரும் சேர்ந்து கோயில்தேவரடியார் ஒருவருக்கு அன்றாடு நற்பழங்காசு எழுபத்து மூவாயிரத்து முந்நூறுக்கு நிலம் விற்றுள்ளனர். தொடக்கத்தில் கோயிலுக்கு வெளியில் இருந்து தனியார் காசினை வைக்க வேண்டியிருந்தது. அங்குப் பணப்புழக்கம் வெவ்வேறு நபர்களிடையே நிகழ்ந்தது. ஆனால், மேற்சொன்ன உதாரணங்களில் கோயிலின்பணம் கோயிற்குள்ளேயே புழங்கி வந்துள்ளது.
பணமும் பாசனமும்
முதன் முதலில் அய்நூற்றுவர் பேரேரியினைப் பராமரிக்க காசுஇரண்டு இருப்பாக வைக்கப்பட்டு அதனால் வரும் வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் அவ்வேரியினைப் பராமரிக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று முனியந்தை குளத்திற்குத் தனியார் ஒருவர் காசுஇரண்டு வைத் துள்ளார். அதனைக் கொண்டு அக்குளத்தினை ஆழப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விரண்டு நிகழ்விலும் பணப்புழக்கம் நேரிடை யாகப் பாசனக்குளத்தோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளது. 1221இல் பாசனத்திற்காக நீரினை ஊரார் கோயிலிற்காக விற்றுள்ளனர். 1615இல் பணத்திற்காக நிலத்தோடு சேர்ந்து நீரும் விற்கப் பட்டுள்ளது.
இப்படி இவ்வட்டாரத்தில் பணப்புழக்கம் கோயில் நிறுவனத்தினை மையப்படுத்தியே இயங்கி யுள்ளது. இப்புழக்கத்தில் பணத்தினை ஆளுவோர் இக்கட்டுரையின் அய்ந்தாம் பத்தியில் சொன்ன படி மதிப்புறு பட்டப்பெயர்களைக் கொண்டவர் களாகவும், வணிகர்களாகவும், பாடிகாவல் சுவந்திரம், அரசுசுவந்திரம், கோயில்சுவந்திரம் போன்றவற்றைக் கொண்டவர்களாகவும் அரசு அலுவலர்களான அச்சு பெற்ற பேறாளர் போன்றோ ராகவும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவருமே பணப்புழக்கத்தில் பெரும்பங்கு வகித்துள்ளனர்; குடிமக்கள் பணத்தினை வழங்கியோராக இருக்க மேற்சொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பணத்தினை ஆள்வோராக இருந்துள்ளனர்.
கருத்துரு
தொடக்கத்தில் மாசிமகம் திருவிழாவிற்குத் துளைப்பொன் அய்ந்து மட்டுமே ஒருதனியாரால் ஒடுக்கப்பட்டது. ஆனால், காலம் செல்லச் செல்ல திருவிழா கொண்டாட்டங்களுக்குப் பணம் பெரு மளவில் செலவழிக்கப்பட்டுள்ளதனைக் கல்வெட்டு
கள் பதித்துள்ளன. கிபி1300இல் வல்லநாட்டு அரையர்கள் பங்குனித்திருநாளுக்கு முந்நூறுகாசு தந்துள்ளனர். ஆயிரத்து முந்நூறுகாசுக்கு நாள் ஒன்றுக்குப் பதினேழரைகாசு வட்டியாகக் கணிக்கப் பட்டுள்ளது. இப்படி அதிகாரத்தில் இருப்பவர் களே பணத்தோடு பெரிதும் புழங்கியவர்களாக இருந்துள்ளனர். சமயத்தோடு தொடர்புடைய கோயில் அலுவலர்கள், சமயமாக வாழும் பிராமணர்கள், இவ்விரு குழுமத்தினையும் வாழவைக்கும் கோயில் நிறுவனத்தைப் போற்றும் கைகோளர், படையினர், அரையர்கள், நாட்டவர்கள் இவர் களே இப்புழக்கத்தில் பிணைந்துள்ளனர்.
குறிப்பு
இக்கட்டுரைக்காகப் பயன்படுத்தப்பட்ட புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகளின் வரிசை எண்கள் 29;31; 32; 34; 36; 44; 47; 48; 49; 50; 51; 52; 53; 55; 57; 58; 59; 60; 61; 62; 63; 64; 66; 67; 69; 70; 71; 73; 74; 76; 77; 78; 80; 83; 86; 87; 88; 89; 90; 95; 98; 100; 118; 125; 130; 134; 135; 136; 152; 158; 165; 170; 184; 185; 188; 190; 192; 202; 204; 206; 208; 209; 210; 211; 214; 215; 216; 221; 229; 230; 241; 248; 249; 266; 268; 285; 286; 298; 301; 302; 306; 307; 308; 309; 318; 319; 335; 349; 350; 362; 366; 375; 376; 377; 379; 384; 386; 399; 401; 406; 408; 415; 416; 423; 427; 429; 430; 439; 440; 441; 442; 445; 447; 448; 452; 454; 460; 462; 467; 479; 484; 486; 489; 491; 494; 499; 500; 521; 523; 531; 539; 541; 544; 546; 553; 559; 561; 566; 568; 583; 589; 590; 596; 607; 611; 613; 618; 622; 624; 625; 635; 638; 644; 687; 688; 689; 699; 700; 703; 706; 723; 751; 769; 770; 800; 803; 821; 834; 835; 843; 859; 864; 866; 867; 873; 903; 907; 941.
 
 
 
-கி.இரா.சங்கரன்
 
செய்தி எடுக்கப் பட்டது கீற்று இணையதளதிலிருந்து

முத்தரையர் எழுச்சி சங்கம் சென்னை



சென்னையில் இருந்து திரு, மாறன் அவர்கள் தலைமையில் இயங்க கூடிய முத்தரையர் எழுச்சி சங்கம் கடந்த மே மாதம் பேரரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1337 ம் பிறந்த தின விழாவினை சென்னையில் நடத்தியது அங்கே எடுக்கப் பட்ட புகைப்படங்களை காண இங்கே அழுத்தவும்
செய்தி உதவி : MUTHARAIYAR (MUTHURAJA) SHARING GROUP

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் கல்வி பரிசளிப்பு விழா






படங்கள் : சீ அஜய்

சனி, 18 ஆகஸ்ட், 2012

ரூ. 16,338 கோடி! மலைக்க வைக்கும் கிரானைட் ஊழல்!

சாராயக் கடைகளை அரசு நிறுவனத்தின் மூலம் நடத்துகிற அரசு, டாமின் போன்ற அரசு நிறுவனத்தின் மூலம் கிரானைட் தொழிலை நேரடியாக நடத்த முன் வருமா அல்லது கொள்ளைக்குத் துணை நிற்குமா?

ரும்புத்தாது சுரங்க ஊழல் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயைக் குவித்து அந்தப் பண பலத்தைக் கொண்டு, மாநில அரசையே தீர்மானிக்கும் சக்தியாக மாறியவர்கள் கர்நாடகத்தின் ரெட்டி சகோதரர்கள். அவர்களுடைய சுரங்க ஊழலோடு ஒப்பிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் கிரானைட் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ள கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்திருப்பது எதிர்க்கட்சிகளோ, சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ அல்ல. மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய சகாயம், எழுத்து மூலமான அறிக்கையின் மூலம் இதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மே 1ம் தேதி, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினார் சகாயம்.

மே 17ம் தேதி, ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ. தலைமையில் குழு ஒன்றை அனுப்பி, அக்குவாரிகளில் மீண்டும் சோதனைநடத்தினார் சகாயம். அந்தச் சோதனைகள்மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மே 19ம் தேதி தமிழக அரசின் தொழில்துறை செயலாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அறிக்கை அனுப்பிய நான்கு நாட்களில், அதாவது மே 23ம் தேதி, மதுரையில் இருந்து அதிகார ரீதியாக அதிக முக்கியத்துவமில்லாத கைத்தறித் துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார் சகாயம். அப்படி அதிரடியாக என்ன இருந்தது அந்த அறிக்கையில்?

சகாயம் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
  • மேலூர் வட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு, பொதுப்பாதைகள், பஞ்சமி நிலங்கள், குளம் மற்றும் கண்மாய்கள் ஆக்ரமிப்பு செய்து விதிகளை மீறி, கிரானைட் கற்கள் எடுக்கப்படுவது தொடர்பாக வந்த புகார் மனுக்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இந்த அறிக்கை அனுப்பப்படுகிறது.
  • மூன்று குவாரிகளில் வருவாத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்ததில், அங்கு சட்டத்திற்குப் புறம்பாக பெருமளவில் கல் வெட்டப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டாமின் குவாரியில் இருந்து இயந்திரங்களின் உதவியோடு சட்டத்திற்குப் புறம்பாக கிரானைட் கற்களை அப்புறப்படுத்தி தனியார் கிடங்குகளில் வைக்கப்படுகின்றன. இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கிரானைட் கற்கள் கடத்தப்படுகின்றன.
  • மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள 91 குவாரிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் அரசுக்கு வர வேண்டிய பல நூறு கோடி ரூபாய் வருமானம் தனியாருக்குப் போகிறது.
  • அரசு நிறுவனமான டாமின், சில லட்சங்களையே சம்பாதிக்கிறது. ஆனால், அதைச் சார்ந்து செயல்படும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் சம்பாதிக்கும் தொகை பல்லாயிரம் கோடிகள். டாமின் நிறுவனத்தின் கிரானைட் சுரங்கங்களை டாமின் நிறுவனமே நேரடியாக நடத்தினால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
  • மேலூர் வட்டத்தில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் கிரானைட் கற்கள் பெருமளவில் எடுக்கப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் ஆகியவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுகின்றன. கிரானைட் கற்களை வைப்பதற்காக அங்குள்ள நீராதாரங்களும் விவசாயப் பகுதிகளும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கிராம மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டதாலும் பாதைகள் அடைக்கப்பட்டதாலும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் தரக்கூடிய கால்நடை செல்வங்களின் எண்ணிக்கை அருகி விட்டது.
  • அத்துமீறி கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதற்கு எதிராக ஆவேசத்துடன் போராடிய விவசாயிகள், காலப்போக்கில் மிகப் பெரிய சாம்ராஜ்யமாக எழுந்து நிற்கும் கிரானைட் நிறுவனங்களைக் கண்டு அச்சமடைந்து மௌனமாகி விட்டனர். ஆட்சியாளர்களிடம் புகார் செய்தும் எவ்விதப் பலனும் இல்லை. அதனால், விரக்தியடைந்த விவசாயிகள் புகார் அளிப்பதையே நிறுத்தி விட்டனர்.
  • வேளாண் பொருளாதாரம் சத்தமின்றி அழிக்கப்பட்டு, மரணத்தை தழுவிவிட்டது. ஆனால், இன்னொரு புறம் என்ன நடக்கிறது? பி.ஆர்.பி., பி.கே.எஸ். போன்ற தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக வளர்ந்து, அசுரத்தனமான பண பலத்தாலும் ஆள் பலத்தாலும் மிரட்சியூட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளன.
  • கனிம சுரங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைப் தடுத்து நிறுத்திட கனிம வளத்துறை அலுவலர்களையும் வருவாய்த்துறை அலுவலர்களையும் அறிவுறுத்தி வந்தேன். ஆனால், அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்து முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கவில்லை. பி.ஆர்.பி. போன்ற கிரானைட் சாம்ராஜ்யங்களுக்கு எதிராக தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமும் தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு இருந்திருக்கலாம். மேலும் இந்த அலுவலர்கள், கிரானைட் நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி ஆதாயம் அடைந்திருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
  • எதிர்காலத்தில் டாமின் குவாரிகளில் ரைசிங் அண்ட் சேல் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தக்காரர்களை கிரானைட் கற்களை எடுப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தாமல், அதை டாமின் நிறுவனமே நேரடியாகச் செய்தால் தனியார் நிறுவனங்களால் ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியிழப்பு தடுக்கப்படும்.
கிரானைட் கொள்ளை குறித்து ஆணித்தரமான ஆதாரங்களுடன் அரசுக்கு அறிக்கை அனுப்பிய நான்கு நாட்களில் சகாயம், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் அனுப்பிய அறிக்கை, இரண்டு மாதங்களாக தலைமைச் செயலகத்தில் உறங்கியது. தற்போது அந்த அறிக்கை வெளியே கசிந்த பிறகு, அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு.

மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் குவாரிகள் உள்ள பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இத்தகவலை முன்கூட்டியே அறிந்த குவாரி அதிபர்கள், பல நூறு அடி ஆழமான பள்ளத்தில் கழிவுக் கற்களைப் போட்டு மூடிவிட்டனர்.

"சட்ட விதியை மீறுவோர் மீது அபராதம் விதிக்கவும் குவாரி உரிமையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.

கிரானைட் கொள்ளை என்பது சட்ட மீறல் பிரச்சினை மட்டுமல்ல, கிராம மக்களின் வாழ்வாதரங்களையும் சுற்றுச் சூழலையும் பாதிக்கும் பிரச்சினை.

"சில தனியார் குவாரி நிறுவனங்களால் எங்கள் கிராமமே அழிந்துவிட்டது. குவாரியின் கழிவுகளைக் கொட்டி எங்கள் பஞ்சாயத்துப் பகுதியிலுள்ள கோயில் ஊரணி, ஓடை, கண்மாய், குளம் போன்றவற்றை மூடிவிட்டார்கள். பொதுப்பாதைகளை அடைத்ததோடு மட்டுமல்லாமல், கிராம மக்களின் விவசாய நிலங்களுக்கும் பாதையே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிலம் மற்றும் பஞ்சாயத்து நிலங்கள் பலவற்றையும் ஆக்ரமித்து விட்டனர். உள்ளூர் கோயிலை உடைத்து வேறு ஓர் இடத்தில் கட்டிவிட்டு, அங்கும் கல் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நிலத்தடி நீர் மட்டம் படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டதால் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை" என்று குமுறுகிறார்கள் கீழவளவு பகுதியில் உள்ள கிராம மக்கள்.

"குவாரிகள் அரசு நிர்ணயித்த ஆழத்தைவிடவும் பல மடங்கு ஆழமாகத் தோண்டப்படுகின்றன. பள்ளி, கோயில்கள், குடியிருப்புகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தூரத்தையும் மீறுகிறார்கள். இரவு நேரங்களில் வெடி வைக்கக் கூடாது, கற்களை அறுக்க பர்னர்களை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகளையும் கண்டுகொள்வதில்லை. மேலூர் முழுக்க முழுக்க விவசாயப் பகுதி. நீர்நிலைகள் அனைத்தும் அழிந்து போய்விட்டதால், 85 சதவிகித விவசாயமும் அழிந்துவிட்டது. மழை, வெள்ளம் ஊருக்குள் புகுந்து விடுகிறது. கிரானைட் எடுத்த பள்ளங்களை மூடி, அந்த இடத்தை பழையபடி விவசாயப்பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது விதி. ஆனால், அவை பின்பற்றப்படவில்லை" என்கிறார்கள் இதைக் குறித்து ஆராந்த சமூக ஆர்வலர்கள்.

"இந்தப் பகுதியில் ஜைனர்கள் தங்கி இருந்தற்கான ஆதாரங்கள் எழுத்துக்கள், சிற்பங்கள் இருந்தன. இப்போது அவை சுவடு தெரியாமல் அழிந்து விட்டன" என்கின்றனர் தொல்லியல் ஆர்வலர்கள்.

இயற்கை வளம், மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் தொல்லியல் ஆதாரங்கள் இவற்றையெல்லாம் அழித்து இப்படி ஒரு கொள்ளை நடப்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?

இந்தக் கொள்ளையைப் பற்றி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தா.பாண்டியன், சி.மகேந்திரன் உள்ளிட்டோர் இரண்டாண்டுகளுக்கு முன் இந்தப் பகுதிகளை நேரிலேயே சென்று பார்த்திருக்கிறார்கள். அதுகுறித்து அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரைக்கு வந்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜெயலலிதா, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோதக் காரியங்களை நீண்ட பட்டியலிட்டார். அப்போது,‘மதுரை மாவட்டத்தில் டன் கணக்கில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுகின்றன. இந்தச் சட்டவிரோத கிரானைட் கொள்ளை மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள வரி இழப்பு 82 ஆயிரம் கோடி ரூபாய்’ என்று குறிப்பிட்டார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி, மேலூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை சட்டவிரோதமாக எடுப்பதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்தார் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதற்கு மறுப்புத் தெரிவித்த மு.க.அழகிரி, தாம் ஒருபோதும் கிரானைட் குவாரி தொழிலில் ஈடுபட்டதில்லை என்று கூறினார். அதன்பின், தயாநிதி அழகிரிக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஒலிம்பஸ் கிரானைட் கம்பெனியில் திடீர் சோதனை நடத்திய அமைச்சர் வேலுமணி, ‘பத்து சதவிகித அளவுக்கு கிரானைட் எடுப்பதற்கு லைசென்ஸ்வாங்கிவிட்டு, 100 சதவிகித அளவுக்கு கிரானைட் எடுத்துள்ளனர்’ என்று குற்றம் சாட்டினார். அழகிரியின் மறுப்புக்குப் பிறகே, முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க நேரடி சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தார் வேலுமணி.

ஆனாலும், கிரானைட் நிறுவனங்களின் சட்டவிரோத செயல்பாடுகள் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன என்பதையே சகாயத்தின் அறிக்கை உறுதி செய்கிறது.

‘பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

"கிரானைட் ஊழல் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. மாவட்ட ஆட்சியர் சகாயம், மே 19ம் தேதி தொழில்துறை முதன்மைச் செயலாளருக்கு அறிக்கை அனுப்பியும் இரண்டரை மாதங்களாக தமிழக அரசு மௌனம் சாதித்தது ஏன்? கனிம வளங்கள் இந்த தேசத்தின் சோத்து, அவை கொள்ளையடிக்கப்படவும் தனியார் லாபத்துக்காகப் பயன்படுத்தப்படவும் அனுமதிக்கக்கூடாது. ஆகவே, இதைக் கடுமையான குற்றமாகக் கருதி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

மதுரைப் பகுதிகளைக் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அறிக்கை கொடுத்துள்ளதால், அந்தப் பகுதியிலுள்ள அத்துமீறல்கள் அம்பலமாகியுள்ளன. அதற்காக மற்ற பகுதிகளில் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதில்லை என்று சொல்வதற்கில்லை. மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற சட்ட மீறல்கள் அரங்கேறி வருகின்றன. ஓர் உதாரணம், புதுக்கோட்டை (காண்க: பெட்டிச் செய்தி).

சாராயக் கடைகளை அரசு நிறுவனத்தின் மூலம் நடத்துகிற அரசு, டாமின் போன்ற அரசு நிறுவனத்தின் மூலம் கிரானைட் தொழிலை நேரடியாக நடத்த முன் வருமா அல்லது கொள்ளைக்குத் துணை நிற்குமா?

லாபவெறிக்கு இரையாகும் வரலாற்றுச் சின்னங்கள்

‘‘தங்கள் பகுதி தொழில் வளம் பெறும் என்ற நம்பிக்கையில் குவாரிகளை மக்கள் வரவேற்றனர். அந்த மக்கள் இன்று வாழ்வதற்கே வழியின்றித் தவிக்கின்றனர். ஓங்கி உயர்ந்த பல மலைகள்இன்று காணாமல் போய்விட்டன. எல்லாவற்றையும் தரையோடு தரையாக அறுத்துச் சென்றுவிட்டார்கள்.’’
அ.மகபூப் பாட்சா,மேலாண்மை அறங்காவலர் சோக்கோ அறக்கட்டளை

‘‘பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக குவாரிகள் செயல்படுகின்றன. சமீபத்தில் கண்டுபிடித்ததை வைத்து மட்டுமே 16 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்றால், 16 வருடங்களில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும். இந்த முறைகேடுகளை சகாயம் கண்டுபிடித்த பிறகு, டாமின் கழிவுகளைக் கொண்டுவந்து குழிகளை மூடுகிறார்கள். அதை மூடக்கூடாது என்று சொன்னதற்கு எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.’’
தர்மலிங்கம்,கீழவளவு பஞ்சாயத்துத் தலைவர்

‘‘ஒரு வரலாற்றுத் தொன்மை வாய்ந்த நகரம் மதுரை. ஓவியங்கள், சமணப்படுகைகள், பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்துக்கள், குளங்கள், சமணப்பள்ளிகள் எனப் பல வடிவங்களில் இன்றும் நம் வரலாற்றை உறுதிப்படுத்தும் சின்னங்களாக 2500 ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நிற்கின்றன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இருக்கும் மலைகளைச் சுற்றி 300 மீட்டர் தொலைவுக்கு எந்த குவாரி, சுரங்க நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது என்பதற்கு கறாரான விதிகள் இருந்தும் இந்தச் சின்னங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. கீழவளவு பாண்டவர் படுகைகள் குவாரி கற்கள் மத்தியில் தூசு படிந்து கிடக்கின்றன. வரிச்சூரில் மொத்த மலையையும் கபளீகரம் செய்துவிட்டனர். மேலக்குடியில் மொத்தப் படுகையுமே கற்குவியலாக மாற்றப்பட்டுவிட்டது. கீழையூர் வெள்ளூத்துமலையைக் காணவில்லை. இவ்வாறாக மதுரையின் வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தும் கிரானைட் மாஃபியாக்களின் லாபவெறிக்கு இரையாகி வருகின்றன. யானை மலையையும் விழுங்குவதற்கு பெரும்திட்டம் போட்டனர். ஆனால், உள்ளூர் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தால் அது தடுக்கப்பட்டது. ஆனாலும், எல்லாவற்றையும் மீறி கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் இயற்கை வளம் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து சிவகங்கை, காரைக்குடி, தேனி என எந்தத் திசையில் பயணித்தாலும் இக்காட்சிகளைக் காண முடியும்.’’
அ.முத்துகிருஷ்ணன்,சமூக செயற்பாட்டாளர்


ஆபத்தில் புதுக்கோட்டை!
புதுக்கோட்டை மாவட்டமே தொன்மையானது.ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதைபொருள் தாளிகள், கல் வளைவுகள், நடுகற்கள், ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தா மலை, கடம்பர் மலை, ஆளுருட்டி மலைஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை.

அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. தொல்லியல் துறையின் சட்டங்கள் மீறப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், இந்தப் புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும் நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளன. இப்படியே தொடர்ந்தால், மத்திய தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக உருமாறும் நாள் வெகுதூரமில்லை.

மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும் அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்டபோது, ‘யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களைத் தடுக்க முடியவில்லை’ என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ்நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி (இல்லை, இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து), உடனேயே இந்தக் காலவரையற்ற குண்டு வெடிப்புகளைத் தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாகக் கவனிக்குமா?



செய்திகள் புதியதலைமுறை யில் இருந்து எடுக்கப்பட்டது ....
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலே கூறிய மலைப்பகுதிகளில் தான் முத்தரையர்களின் (மன்னர்களின்) கல்வட்டுக்கள் உள்ளன அந்த பகுதியில் இருக்கும் முத்தரையர் மக்கள் இவர்ற்றை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும், அரக்கர்களிடமிருந்து அவற்ற்றை காப்பாற்ற வேண்டும், இல்லை என்றால் நாம் வரலாறே இல்லாதவர்கள் ஆகிவிடுவோம்
- உங்கள் சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
 
 

முத்துராஜா சங்கம் மஞ்சவயல்



இடம் மஞ்சவயல் மரவகாடு,அதிராம்பட்டினம் (தஞ்சை) முத்தரசன் மாத இதழ் வருடம் 1947

 தொகுப்பு ... Mutharaiyar Sharing Group / Kathirvelu Durairathinam ..

சிலை அவமதிப்பு முத்தரையர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தா.பேட்டை, : தொட்டியம் அடுத்த சத்திரத்தில் கடந்த 13ம் தேதி பெரும்பிடுகு முத்தரையரின் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்திருந்தனர். இதை கண்டித்து முசிறி கைகாட்டியில் முத்தரையர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முசிறி நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இளைஞரணி தலைவர் ரமேஷ், செயலாளர் கண்ணன், பொருளாளர் கோபி, துணை தலைவர் மோகன் முன்னிலை வகித்தனர்.
அப்போது, முத்தரையர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள் கவியரசு, ராஜசேகர், தங்கவேல், மங்கலம் கோபி, விமல்ராஜ், சுப்பிரமணியன், பாண்டியராஜன், ஜான்சுந்தர், சிவகுமார் மற்றும் முசிறி, வடுகப்பட்டி, அயித்தாம்பட்டி, மங்களம், புதூர், துலையாநத்தம், ஜம்புநாதபுரம், கணேசபுரம், வாளவந்தி, சிந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்துகொண்டனர். முசிறி டிஎஸ்பி தங்கவேல், மதுவிலக்கு டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முசிறி ரவச்சக்கரவர்த்தி, செல்வி, தொட்டியம் குமரேசன், சப்இன்ஸ்பெக்டர்கள் கருப்பண்ணன், சண்முகலட்சுமி, ராமநாதன், பழனியாண்டி, பாலு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தி தினகரன் நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டது...

 

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

முத்துராஜா ஜன சங்கம்

-Kathirvelu Durairathinam / MUTHARAIYAR ( MUTHURAJA )Sharing Group

ஆலங்குடி திரு. புஷ்பராஜ் Ex.சட்டமன்ற உறுப்பினர்



PHOTO PROVIDE BY. V.P.RAJAN

மருத்துவம் படிக்கலாமா ?

இந்தியாவில், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது செலவு கூடிய விஷயம் என்ற நிலையில், இந்திய மாணவர்கள் சீனாவை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது.

 இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநிலங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத் தேர்வும் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின்வாங்க வைத்துவிடுகிறது.

 மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45 முதல் 75 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் சீனாவிலோ, ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு 15 முதல் 20 லட்சம் வரைதான் செலவாகிறது. இதனால், பலரும் சீனாவை நோக்கி பறப்பதற்கு தயங்குவதில்லை.

 கட்டணம் மட்டும் குறைவாக இருப்பதில்லை. மருத்துவக் கல்லூரிகளின் உள் கட்டமைப்பு, கல்வித்தரம், தொழில்நுட்பம், ஆசிரியர் தகுதி மற்றும் படிக்கும் சூழல் ஆகியவை சிறப்பாக இருப்பதாக அங்கு படித்துவந்த மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 சீன அரசாங்கமும், வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் நாட்டில் வந்து மருத்துவம் படிப்பதை ஊக்குவிக்கிறது. கடந்த 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் முறையே 60 மற்றும் 80 இந்திய மாணவர்கள் சீன மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். அந்த எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 100 என்ற அளவில் உயர்ந்தது. சீனாவில், இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போல, நன்கொடை எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

 முன்பு, வெளிநாட்டு மருத்துவப் படிப்பிற்கு, இந்திய மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்ற இடங்களாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்கள் இருந்தன. ஆனால், அங்கே செலவு மிகவும் அதிகம் என்பதால், மாணவர்கள் வேறு இடங்களை நாடத் தொடங்கி விட்டனர். அமெரிக்காவில், 5 வருட மருத்துவப் படிப்பிற்கு 1 கோடி வரை செலவாகிறது என்று கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

 சீனாவில், தென்னிந்திய மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள். சீன மருத்துவக் கல்லூரிகள் தங்கள் நாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்காக தனித்தனி Batch -களை வைத்துள்ளன. வெளிநாட்டு மாணவர்களுக்கான பிரிவில் பயிற்றுமொழி ஆங்கிலம்.

 சீனாவில் MBBS படித்து நாடு திரும்பும் இந்திய மாணவர்கள், இங்கே மருத்துவ முதுநிலைப் படிப்புகளை மேற்கொள்கின்றனர். நோயாளிகளுடன் பேச, வெளிநாட்டு மாணவர்கள், சீன மொழியை பழகுவது அவசியம் என்ற நிலை இருந்தாலும், அந்நாட்டில், சுமார் 50 பல்கலைகள், ஆங்கிலத்தில், மருத்துவப் படிப்புகளை வழங்குகின்றன.

 அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கடுத்து, மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் நான்காவது இலக்காக சீனா திகழ்கிறது. விலை குறைந்த மருத்துவப் படிப்புக்கு, ஜார்ஜியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், அஜர்பைஜான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் பெயர் பெற்றிருந்தாலும், இந்திய மாணவர்களை ஈர்ப்பதில், சீனாவே முன்னணியில் உள்ளது. முன்னொரு காலத்தில், குறைந்த செலவிலான மருத்துவப் படிப்பிற்கு வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் ரஷ்யா முன்னணியில் இருந்ததை பலரும் அறிவார்கள். ஆனால், இனவெறி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்த இடத்தை ரஷ்யா இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

 சீனாவில், MBBS படித்து வெளிவரும் மாணவர்கள், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள, இந்திய மெடிக்கல் கவுன்சிலின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஸ்கிரீனிங் தேர்வில் தேற வேண்டும்.

 இந்தியாவின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், பல கல்லூரிகளின் தரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தரத்தைப் பற்றி அந்தக் கல்லூரிகள் கவலைப்படுவதே இல்லை. எனவே, இந்திய மாணவர்களுக்கு, சீனா ஒரு நல்ல மாற்றாக இருக்கிறது.

 சமீபத்தில்கூட, உத்திரபிரதேச அரசாங்கம், மாநிலத்தின் தொலைதூர கிராமப்புற பகுதிகளில் பணியாற்ற, சீனாவில் படித்த மருத்துவர்களை பணியமர்த்தும் செயல்பாட்டை துவங்கியுள்ளது.


- LENIN RENGARAJAN

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கண்டன ஆர்ப்பாட்டம்








PHOTO'S TAKEN BY : LION SIVA