திருச்சி வரகனேரி வடக்குபிள்ளையார் கோவில்தெருவை சேர்ந்தவர் ஆர்.விசுவநாதன். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில தலைவராக உள்ளார். இவருடைய மகன் ராம்பிரபு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் முத்தரையர் சதயவிழா ஊர்வலம் நடந்த போது திடீர் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக ஆர்.விசுவநாதன், அவருடைய மகன் ராம்பிரபு (வயது 36) உள்ளிட்ட சிலர் மீது கண்டோன்மெண்ட், காந்திமார்க்கெட், கோட்டை போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே எடமலைப் பட்டிபுதூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கொத்தமங்கலத்தில் உள்ள வீரமுத்தரையர் சங்க தலைவர் செல்வகுமாரின் வீட்டை அடித்து உடைத்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராம்பிரபு, அவருடைய தந்தையும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில தலைவருமான ஆர்.விசுவநாதன் ஆகியோரை சில நாட்களுக்கு முன்பு எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் 2 பேரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராம்பிரபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராம்பிரபுவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
செய்தி எடுக்கப்பட்டது மாலைமலரில் இருந்து எடுக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக