தீர்மானங்கள் :
1. பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊருக்கு ஒருவரைஅடையாளம் காண்பது அவர்கள் மூலம் ஒரு குழு அமைத்து (குறைந்தது 5 முதல் 10 பேர் வரை),அவர்கள் மூலம் அந்த அந்த ஊர்களில் உள்ள முத்தரையர்கள் பற்றிய விவரங்களை வாக்காளர் பட்டியல்கொண்டு சேகரிப்பது. அதில் அவர்களின் குடும்பத்தில் பட்டதாரிகள் இருக்கிறார்களா ? தற்பொழுது யாரேனும் படித்துக் கொண்டு இருக்கிறார்களா ? இதுவரை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ் எதேனும் பலன்கள் பெற்று இருக்கிறார்களா ? அரசு வேலையில் யாரேனும் இருக்கிறார்களா ? என்பது போன்ற தகவல்களை திரட்டுவது பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் மறுஆய்வு செய்து தொடர்ந்து பராமரிப்பது, இந்த தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்க்குமான தேவைகள் என்ன ? அதனைப் பெரும் வழிகள் என்ன? தொடர்ந்து அவர்களை தொடர்பில் வைத்திருப்பதன் மூலம் அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று உறவினைப் பேணுவது, இந்த தகவல்களின் அடிப்படையில் அரசியல் ரீதியிலான பலன்களை நம் இன அரசியல்வாதிகள் பெறவும், அவர்கள் மூலமாக நமக்கான தேவைகளைப் பெறவும் வழிவகைகளை ஆராய்வது.
2. முத்தரையர் சமுதாய இளைஞர்களுக்குள் புரிந்துணர்விற்காகவும், குழுவாக செயல்படுவதினால்ஏற்படும் நன்மையினை பகிரும் வண்ணம் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுழற்கோப்பை சமுதாயகபாடி மற்றும் கைப்பந்து போட்டி" முத்தரையர்கள் பெரும்பாண்மையாக (அ) முத்தரையர்கள் மட்டும்வாழக் கூடிய கிராமங்களில் ஆண்டுதோறும் சுழற்ச்சிமுறையில் நடத்துவது, இதில் திறமையாகவிளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து முறையான பயிற்சிகளை வழங்கி ஒரு வழுவான அணிஅமைத்து மாவட்ட / மாநில போட்டிகளில் பங்கேற்க்க செய்வது.
3. படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது, படிக்கும்மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் கல்வி உதவித்தொகைப் பற்றிய சரியான வழிகாட்டுவது, வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களின் விவரங்களை சேகரித்து, பல்வேறு இடங்களில் பணிபுரியும் (உள் நாடு / வெளி நாடு) நம் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டு அவர்கள் மூலம் வேலைப் பெற முயர்சிப்பது, அரசு வேலைகள் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் தெரிவித்து, அதற்க்கான போட்டித் தேர்விற்க்கு உரிய பயிற்சிக்களை தர முயர்சிப்பது,
4. “அம்பலக்காரர் உறவின் முறை சங்கம்” ஒவ்வொரு கிராமத்திலும் அமைத்து மக்களின் எண்ணிக்கைமற்றும் பங்காளி வகையறாக்களின் எண்ணிக்கைக்கு எற்ப ஒன்றுக்கு மேற்ப்பட்ட சங்கங்கள் அமைத்து,அனைத்து குடும்பத்தினையும் இணைக்க வேண்டும், ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்க்குபெண் கொடுக்கவோ / எடுக்கவோ செய்யும் போது குடும்பத்தினைப் பற்றி அரிய/ மற்றும் இனக்கலப்பினை தடுக்க முடியும்
5. கதை / கவிதை எழுதும் திறனுள்ளவர்களுக்காக ஆண்டு தோறும் " இலக்கிய விழா" நடத்துவது,அதன் மூலம் அவர்கள் திறன் வெளி உலகிற்க்கு செல்ல நம்மால் ஆன உதவியினை செய்வது.
6. இலவச சட்ட உதவிக்கான ஏற்பாடுகள், பல்வேறு சூழ் நிலைகளால் வரும் வழக்குகளை எப்படி கையால்வது, யாரை அணுகுவது, இனத்திற்க்குள் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்க்கென இனப் பெரியவர்கள் அடங்கிய குழு அமைத்து ஒருசார்பு இல்லாமல் நடு நிலையான தீர்வினை பெற உள்ள வாய்ப்புக்களை கண்டறிதல்
7. இலவச மருத்துவ உதவிகள், எந்த நோய்க்கு என்ன சிகிச்சை ? எங்கே பெற வேண்டும் ? இலவசமாக பெற வாய்ப்பு உண்டா ? யாருடைய சிபாரிசும் தேவையா ? தேவை என்றால் எப்படி பெறுவது ?
8. சிறு பத்திரிக்கைகள் மூலம் தொடர்ந்து சமுதாய செய்திகளை அளித்தல், கையெழுத்துப் பிரதியாகவோ, அச்சடித்தோ சமுதாய செய்திகளை எல்லோரும் அறியும் வண்ணம் மாதம் ஒருமுறை வெளியிடுவதற்க்கான வாய்ப்புகள், எந்த மாதிரியான செய்திகள் எல்லொரும் அறிந்திருக்க வேண்டும் ? சமூக விழிப்புணர்வினையும், சுகாதார, கல்வி தொடர்பான செய்திகளை தொடர்ந்து வழங்கும் வாய்ப்புகள்
9. நவீன வேளாண் தகவல்களை பெற்று தருதல், தொடர்ந்து தண்ணிர் பிரச்சனை, உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை சந்தித்துவரும் நம் இனத்தவருக்கான மாற்று விவசாய முறைகள், குறுகிய கால பணப் பயிர்கள், அதிக லாபம் தரக் கூடிய உணவுப் பொருள் உற்பத்தி, விவசாயம் தொடர்பான அரசின் திட்டங்கள், மற்றும் பலன்கள் நமது இனத்திற்க்கு தொடர்ந்து கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? எப்படி தகவல்களை பகிர்ந்துக் கொள்வது ? தகவல்களை பெறுவது ?
10. முத்தரையர் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்தல் // சுயத்தொழில் வாய்ப்புகளை எற்படுத்திக்கொடுத்தல் பெரும்பாலும் இருக்கின்ற அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் எந்த தனிப் பட்ட தொழிலிலும் ஈடுபடுவது இல்லை, அதனை மாற்றி அவர்களுக்கு தேவையான தகவல்களை திரட்டியும் / உதவிகளைப் பெற்றும் தரும் பட்சத்தில் தனிபட்ட ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார ரீதியில் பலம் பெற முடியும் அதற்க்கான நீண்டகால செயல்திட்டம் வடிவமைத்து நமது சமூகப் குடும்ப பெண்களின் விரையம் ஆகும் நேரத்தினை பயன் உள்ள வகையில் பயன்படுத்துவது, சிறிய கைத்தொழில்கள் / மூலதனம் அதிகம் தேவைப் படாத பாதுகாப்பான தொழில்கள், குழுவாக செய்யக் கூடிய வேலைகளை குறித்த தகவல்களை திரட்டி அளித்தல்
11. கந்துவட்டிக் கொடுமையிலிருந்து நம் மக்களை காக்கும் முகமாக முத்தரையர் கூட்டுறவு சங்கம்அமைப்பதற்க்கான சாத்தியக் கூறுகள், இதன் மூலம் நகைக் கடன், விவசாய கடன், உள்ளிட்ட சிறியகடன்களை குறைவான வட்டி விகிதத்தில் வழங்கும் வாய்ப்புகள், ஆதாரத் தொகை திரட்டும் வகையில்இனத்தவர்கள் எல்லொருடைய பங்களிக்கும் விதமாக பங்குகளை வெளியிடும் வாய்ப்புகள் குறித்தஆய்வுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக