''கலப்புத் திருமணம் செய்துவைத்தவரே ராமதாஸ்தான். இப்போது செய்வது தான் நாடகம் ''யாதவரை ஏமாற்றி பலனடைய முயற்சிக்கும் ராமதாசின் அடுத்தகட்ட
நாடக அரசியல்ஆரம்பம் ''பி.ஆர்.தாமோதரன் யாதவ் குமுறல்
தமிழக சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஆர்.தாமோதரன் யாதவ் வெளியிடும்
செய்தி:
ஜூனியர் விகடனில் திரு.தமிழருவி மணியனுக்கு பதில் அளித்த ராமதாசின் நாடக வியாபார அரசியலை தமிழ் நாட்டு மக்கள் அறியாதது போல நடித்துள்ள அவருக்கு ''நாடகக் குடிதாங்கி''மற்றும் அனைத்து சமூக அநீதிக் காவலர் '' ஆகிய பட்டங்களை யாராவது அளித்து விடும் முன்னர் எனது கருத்துகளை படித்து விட்டு முடிவு செய்யுங்கள்
''தமிழ் நாட்டில் எத்தனையோ சாதிகள் உண்டு அந்தச் சாதிகள் தங்களின் பாதுகாப்புக்காக
சங்கங்களைத் தொடங்கி போராடி வந்த நிலையில் வன்னியர் சங்கத்தை தொடங்கிய போது
வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை'' என்ற கோசத்தோடு எல்லாச் சமுதாயங்களையும்
எதிரியாக்கி வன்னியர் சமுதாயத்தை நம்பவைத்தார்.
பல வன்னியர்களை போராட்டத்தில் இரையாக்கி அதன் பயனை தான் மட்டும் அறுவடை செய்து கொண்டார் என்பதை எல்லா வன்னியர்களும் உணர்வார்கள்.
அதற்கு பிறகு தேர்தலில் பங்கெடுக்க பா.மா.க வைத் தொடங்கினார்.தனித்து நின்றார்.பின்னர் அதிமுக,திமுக மீது மாறி மாறி குற்றம் சாட்டி பேசி வன்னியர்களை
அங்கேயும் பலிகிடாவாக்கி விட்டு அதே கட்சிகளுடன் கூட்டணி வைத்து வன்னியர்களை
அடகுவைத்தார்.பஸ் பயனதிற்கு கூட பார்த்துப் பார்த்துச்செலவு செய்த ராமதாசுக்கு இன்று பல்லாயிரம் கோடிசொத்து வந்தது எப்படி என்று நான் கேட்கவில்லை உங்கள் கட்சியின் எம்.ல்.ஏ வாக இருந்த திரு.வேல்முருகன் கேட்கிறார்.இன்று வரை பதில் இல்லை.
சரி.இதுவெல்லாம் அரசியல் சம்பத்தபட்டவை என்று விட்டு விடுவோம்.
சமுதாயப் பிரச்னையில் என்ன செய்தார், சமூக (அ)நீதிக் காவலர் ராமதாஸ்.
வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி,ஆதிக்க சாதி என்று சொல்லியே எல்லாச் சாதிகளையும் எதிர்த்தே அரசியலில் உயர்ந்த திருமாவளவனை தம்பி என்று அவர் தோளில்
கையைப் போட்டுக் கொண்டு கலப்புத் திருமணங்களை செய்ய வைத்தும்,நடத்தி வைத்தும் சாதி ஒழிப்புப்
போராளியாகக் காட்டிக் கொண்டு வன்கொடுமைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்ட போதுஅதைக் கண்டுகொள்ளாமல் திருமாவளவனோடு ஒன்றாகச் சாப்பிட்டு ஊர், உலகை நம்பவைத்தது யார் ?இதே ராமதாஸ் தான்?
பணம்,பதவி,செல்வாக்குக்காக எந்தச் சாதிக்காரனும் தாழ்த்தப் பட்டவன் சாப்பிடமாட்டான்.
திருமாவளவனோடு ஒன்றாகச் சாப்பிட்ட ராமதாஸ் இன்று எல்லா வன்னியர்களையும் தலித் வீட்டில் சாப்பிட வைப்பாரா?
எந்த வன்னியன் மட்டுமல்ல,யாதவர், தேவர்,நாடார்,கொங்கு வேளாளர் உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட ரோசமுள்ள,பணம்,பதவிக்கு ஆசைபடாத உண்மையான சாதிக்காரன் எவனும் சாப்பிட மாட்டான்.
ஆனால் கலப்புத் திருமணம் செய்யவைத்து ''தமிழ் குடிதாங்கி''பட்டம் பெற்று,அம்பேத்கார் விருதுவாங்கி விடுதலைச் சிறுத்தைகளோடு குடும்பமே நடத்தி விட்டு இப்போது திடீர் என்று ''நாடகக் காதல்'' வசனம் பேசுவது தான் நாடகமே தவிர ராமதாசின் பேச்சில்
ஒன்றாவது உண்மையுண்டா?
வன்னியர்களே ராமதாசை நம்பி ஏமாறுவது ஒருபுறம்.
மற்ற சமுதாயங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கட்டிய கோவணத்தையும் அவிழ்த்து விடுவார் ராமதாஸ்.
சில லெட்டர் பேடு அமைப்புகள் நடத்தும் தலைவர்கள் ராமதாசை வைத்து தங்கள் பெயரை
விளம்பரம் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் ராமதாசை நம்பி உங்கள் சமுதாயத்தின் பெயரைக் கெடுக்கவேண்டாம் என்று
அன்போடு வேண்டுகிறேன்.
தமிழ் நாட்டில் யாதவர் சமுதாயத்தின் எதிரி வன்னியர்.ஆனால் எங்கள் யாதவ குலத் தங்கம் அகிலேஷ் யாதவை அழைத்தால் தான் தன் அரசியல் பொழப்பு ஓடும் என்று கணக்குப் போட்டுச் செயல்படுகிறார் ராமதாஸ்.
வருங்காலத்தில் நேதாஜி முலாயம் சிங் யாதவ் ஜி பிரதமர் ஆவார் என்று கணக்குப் போட்டு
தனது தனது அரசியல் நாடகத்தை அற்புதமாக அரங்கேற்ற அகிலேஷ் ஜி காலில்
விழுந்துள்ளார்.
நாளையே மாயாவதி பிரதமராவார் என்று செய்தி வெளிவந்தால் முதல் மாலை போட ராமதாஸ் தான் முந்திக் கொள்வார் என்பதில் சந்தேக மில்லை.
''வன்னியன் ஆளனும்'' என்ற கோசத்தை எந்த யாதவனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
வன்னியன் ஆளனும் மற்றவன் எல்லாம் வேடிக்கை ;பார்க்கனுமா?
யாதவர்கள் மட்டுமல்ல தேவர்,நாடார்,கொங்கு வேளாளர்,முத்தரையர், நாயுடு, செட்டியார்,உடையார் உள்ளிட்ட எந்தச் சமுதாயம் இந்தக் கோசத்தை விரும்பாது என்பதே உண்மை.
''அரசியல் நாடகமாடி''வியாபாரம் செய்யும் ராமதாசை ஆட்சியல் அமர்த்தவா எங்கள் யாதவர்கள் பலியாவார்கள்./எப்போதும் நடக்காது.
பாராளுமன்றத் தேர்தலில் பார்க்கப் போகிறோம்.பா.ம.க ராமதாஸ் செய்யும் மோசடி நாடக அரசியலை.
அனைத்து தமிழ் சமுதாய அமைப்புகள்,தலைவர்கள் அனைவரையும் வேண்டுவது ராமதாசை யாதவர்கள் ஒருபோதும் நம்ப மாட்டோம்.நீங்களும் நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகிறேன்.வன்னியர்கள் எல்லா இடங்களிலும் யாதவர்களை அடித்து ''கோனார்'' என்று இழிவு படுத்தியது மட்டுமல்ல நாயுடு களைப் போல யாதவர்களையும் வந்தேறிகள் என்று வசை பாடி வருவது உண்டு.
தேவர் சமுதாயத்தின் எதிரிகளையும்,கொங்கு சமுதாயத்தின் எதிரிகளையும்,நாடார் சமுதாயத்தின் எதிரிகளையும் வளர்த்து விட்டு இன்று அனைத்து சமுதாயக் கூட்டங்களை அந்த சமுதாயத்தினரைக் கொண்டே செலவு செய்து ஆதாயம் தேடுகிறார் ராமதாஸ்.நமது சமுதாயத்தின் எதிரியே இவருடைய நண்பர்கள் தான்.
பள்ளர்,முஸ்லீம்,கிருஸ்தவர் போன்ற சாதி,மத அமைப்பினரை இவர் அழைப்பது ஏன்?
சாதி-மதக் கலப்பை அறவே எதிர்க்கிறேன் என்று இவரால் சொல்ல முடியுமா?
நாடக நடிகரின்வேசம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெர்யும்.
யாதவர் சக்தியை உணரவைப்போம்.ராமாதாசின் நாடக அரசியல் எங்கள் தேசியத் தலைவர்
நேதாஜி முலாயம் சிங் யாதவ்ஜி யிடம் எடுபடாது என்பதை மட்டும் இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்.யாதவர் களின் தயவில் தான் வன்னியர் ராமதாஸ் வாழ்வே ஒழிய வன்னியர் ராமதாஸ் தயவு யாதவர்களுக்கு எப்போதும் தேவையில்லை.எந்த யாதவனும் எங்கள் எதிரி வன்னியன் ராமதாஸ் காலில் விழ மாட்டான்.அப்படி விழுபவன் உண்மையான யாதவனாக இருக்க மாட்டான்.தேவர்,நாடார்,கொங்கு வேளாளர்,யாதவர் ,முத்தரையர்,நாயுடு,முதலியார்,செட்டியார்,உள்ளிட்ட எல்லாச் சமுதாயங்களும் ஆளனும்,எல்லோரும் ஒற்றுமையாக வாழனும் என்பதே எங்கள் நோக்கம்.
''வன்னியர் ஆளனும்''மற்றவனெல்லாம் வேடிக்கை பார்க்கணும்,
''வன்னியர் ஆளப் பிறந்தவன்'' மற்றவனெல்லாம் சாகப் பிறந்தவன் இது வன்னியர் ராமதாசின் கோசம்.மிக எச்சரிக்கையாக இருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக