கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் வெளியிடும் இணையச் செய்தி:
''பாரத நாட்டின் பழம் பெருமையே பண்பாடு,கலாசாரம்,பாரம்பரியத்தின்
சிறப்பில் தான் இருக்கிறது என்பதை நாம் அல்ல இந்தியா தவிர்த்த உலகம் முழுவதும்
மிக வியக்கும் நமது பெரும் சொத்து.
அந்த பெருமையை சமீப கால மேற்கத்தியக் கலாச்சாரப் புகுத்தளினால் பாரதம் இழந்து வருகிறது என்பதும் வேதனைக்குரிய விஷயம்.
பாரத நாட்டில் வாழும் மக்கள் என்று சொல்வதில் நமக்கு பெருமை இருப்பதற்கு காரணம்
இங்கு வாழும் 4000 க்கும் மேற்பட்ட சமுதாயக் குழுக்களின் கட்டமைப்பும்,ஒழுங்கும் தான்.
அவரவர் உறவு முறைகளை சங்கிலிபோல உருவாக்கிக் கொண்டு தனக்கும் தனது குடும்பத்திற்கும்,தனது உறவுகளுக்கும் முழுமையான பாதுகாப்பையும்,நலனையும் உருவாக்கிக் கொண்டு மிக நீண்ட காலமாக ஒரு நம்பிக்கை அடிப்படையில் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.ஆதி மனித குலப் பரிணாமத்தில் ஒவ்வொரு படியாக வளர வளர
ஆண்,பெண் பாகுபாடு மனிதன் தானாக ஏற்படுத்திக் கொண்டதல்ல என்பதால் தங்களின் தேவையை நிறைவு செய்து கொள்ள பெண்ணுக்கும் ஆணுக்கும் துணை தேவைப் பட்டது.அந்தத் தேவை மூலம் பெண்ணுக்கு மட்டும் பாதிப்பு வரக்கூடாது என்பதால் முறையான திருமண முறையை வகுத்து அதற்குரிய கட்டுபாடுகளை உருவாக்கி பெண்ணுக்கு இல்லற வாழ்வுக்குரிய முழுச் சுதந்திரத்தையும் ,அதன் மூலம் உருவாகும் சந்ததிக்கு ஒரு பாதுகாப்பையும் வழங்கினார்கள்.
அதன் தொடர்ச்சியில் அன்பும்,பாசமும்,பற்றும் கூடக் கூட உருவான ஒழுங்கமைப்பே பெற்றோர்கள்.
தங்கள் குடும்பத்தின் உறவுகளை பேணிக்காக்கும் பண்பாடு,கலாசாரம்,பாரம்பரியப் பின்னணிகளை ஒட்டி வாழும் சமுதாய முறை ஆகும்.
இதை ஒட்டியே ஆட்சி முறைகளும் ,விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு செயல் படுத்தப் படுகிறது.
ஆதி காலத்தில் ஜாதி இல்லை,மதம் இல்லை,மொழி இல்லை,இனம்இல்லை ,ஆட்சி இல்லை, அதிகாரமில்லை,பணமில்லை,படிப்பு இல்லை,இன்றைய உணவில்லை, உடையில்லை,கோவில் இல்லை,தெய்வமில்லை, நாடுமில்லை,எந்த எல்லையுமில்லை இன்னும் சொல்லப் போனால் எதுவுமே இல்லை.
இதை எல்லாம் இப்போதும் வேண்டாம் என்று சொன்னால் நாங்கள் ஏற்க தயார்.
ஆனால் ஜாதியை மட்டும் வேண்டாம் என்று சொல்வது ஏன்?
"முற்போக்குகள்" என்ற பெயரில் ''காதலும் சாதியமும்''தலைப்பில் விஜய் டி.வி யில் 31.3.2013 இரவு ஒளிபரப்பான .நீயா?நானா? நிகழ்ச்சியில் திரு.கோபிநாத் இயக்குனர்கள் சேரன்,பாலாஜி சக்திவேல்,நடிகர் பிரகாஷ்ராஜ் போன்றோர் மிகத் திட்டமிட்ட சமுதாய
சண்டைகளுக்கு வித்திட்டுள்ளார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.
அந்நிகழ்ச்சியில் சாதி மத கலப்புத் திருமணத்தை தடுக்க கவுரக் கொலைகள் செய்வதாக
குற்றச்சாட்டும், ஏதோ நாங்களெல்லாம் மிகவும் கற்காலத்தை நோக்கி நடப்பது போலவும்,
இனிமேல் புதிய பாதையை உருவாக்குவது போலவும் நன்றாக நடித்து
சினிமாவில் வேஷம் போட்டு நிஜ வாழ்க்கையில் ஏமாற்றும் பிரகாஷ்ராஜ் போன்றோரை
மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மக்களுக்கு நல்வழி காட்டும் எந்த தகுதியும் இல்லாத பிரகாஷ்ராஜ் முதலில் தன் மனைவியை வைத்து குடும்பம் நடத்தும் வழியை பார்க்காமல்
கொங்கு வேளாளர்,
வன்னியர்,தேவர்,நாடார், முதலியார்,யாதவர்,முத்தரையர்,நாயுடு,உடையார்,செட்டியார் உள்ளிட்ட தலித் அல்லாத 60கும் மேற்பட்ட சமுதாய மக்களின் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
முற்போக்கு வேஷம் போட்டுகொண்டு ''பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள ''கௌரவம்''திரைப்படம்
ட்ரைலர் காட்சிகளைப் பார்த்தோம்.தீண்டாமை,இரட்டை டம்ளர் முறை,கலப்புத் திருமணத்தால் கவுரவக் கொலைகள்,உள்ளிட்டவைகளையும்,சாதி மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும், பெரும்பான்மை மக்களை மிகவும் கேவலப் படுத்தியும்,தலித் அல்லாத சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறையை தூண்டியும்,தலித் மக்களுக்கு வன்முறையை கற்றுக் கொடுக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
தீண்டாமை என்பதே அறவே இல்லாத இந்த நவீன உலகத்தில் எந்த சமூகமும் தீண்டாமையை கடைபிடிப்பதில்லை.தீண்டாமையை நாங்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம்.எல்லா சமூதாயமும் அடிப்படை வசதி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதில் நாங்கள் திட்டவட்டமாக இருக்கிறோம்.ஆனால் இத்திரைப்படம் சாதி மதங்களிடையே நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
''கவுரம்" என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கொடுத்து எங்கள் சமூகங்களை இழிவு படுத்தியும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் திட்டமிட்ட கலப்புத் திருமணத்தை ஊக்கப் படுத்தும் வகையிலும்,அதற்கு மலிவான விளம்பரத்தை தேடும் வகையிலும்,நீண்ட கால சமுதாய நம்பிக்கையோடு வாழும் மக்களின் மனம் புண்படும் வகையிலும்,சாதி மோதலை தூண்டி வன்முறையை உருவாக்கி அதன் மூலம் படத்தை வெற்றி பெறச் செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் எடுக்கப் பட்டுள்ளது.எனவே .''பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள ''கௌரவம்''திரைப்படம் வெளியானால் வன்முறை
வெடிக்கலாம்'' என்று இப்போதே எச்சரிக்கை செய்கிறேன்.
தலித் அல்லாத பெரும்பாண்மை சமூக மக்களை இழிவாகவும்,மனிதநேயமற்றவர்களாகவும்,வன்முறையாளர்களாகவும் சித்தரித்து பாரதத்தின் ஒட்டுமொத்த சமூகத்தின் மத நம்பிக்கைகளையும் அடையாளங்களையும் இழிவுபடுத்தி தயாரிக்கபட்டிருக்கும் இந்த திரைபடத்தை வெளியிட தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.இல்லாவிட்டால்
இப்படத்தினை தலித் அல்லாத பெரும்பாண்மை சமூக மக்கள் திரையரங்குகளில் ஓட விடமாட்டோம் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக