வியாழன், 30 மே, 2013
புதன், 29 மே, 2013
மாவட்ட அளவிலான காபாடிப் போட்டி
மாவட்ட அளவிலான காபாடிப் போட்டி
உறவுகளே பள்ளிகொண்டானில் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் ஆலங்குடி A .வெங்கடாசலம் மற்றும் பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றிய பெரும் தலைவர் தொக்காலிக்காடு ஜெயபால் இவர்களின் நினைவாக மாநில அளவினால கபாடி போட்டி சிறப்பாக நடைபெற்றது அதே போன்றே இந்த ஆண்டும் நடத்த திட்டமிட்டு அறிவித்து இருந்தோம் ஆனால் எங்களுக்கு போதிய காலத்தில் தமிழ்நாடு கபாடி சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டனர் .இந்த ஆண்டு அந்த கபாடி போட்டியை மாவட்ட அளவில் நடத்த திட்டமிட்டு வருகின்ற 01.06.2013 அன்று நடைபெற உள்ளது . உறவுகளே அணைவரும் கலந்து கொண்டு அதரவு தருமாறு பள்ளிகொண்டான் கிராமவாசிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்
செவ்வாய், 28 மே, 2013
நன்றி....!!
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொன்ன எனது அருமை உறவுகளுக்கும் ...!! நட்புகளுக்கும்....!!! என்றென்றும் நன்றியுடன்... உங்களில் ஒருவனாய்... சஞ்சய் காந்தி அம்பலகாரர்
ஏழை மாணவர்களுக்கு உதவ முடிவு - முத்தரையர் சங்கம் முடிவு
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது என பொன்னமராவதியில் நடைபெற்ற
தமிழ்நாடு முத்தரையர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர்
கே. செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். ராமச்சந்திரன் முன்னிலை
வகித்தார். மாவட்டச் செயலர் பூ.சி. தமிழரசன், மாவட்டச் செயலர் இரா. திருமலைநம்பி,
பொருளாளர் சத்தியமூர்த்தி, அமைப்பாளர் வஞ்சித்தேவன் ஆகியோர் சங்கத்தின் வளர்ச்சி
குறித்து பேசினர். கூட்டத்தில், கிராமங்கள்தோறும் சங்க கிளைகள் அமைத்து
கொடியேற்றுவது, ஏழை மாணவர்கள் பள்ளிப் படிப்பை தொடர உதவுவது, நாடாளுமன்ற தேர்தலில்
முத்தரையர் சமுதாயத்திற்கு போதிய இடங்களை அனைத்து கட்சிகளும் வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய துணைச் செயலர் வி. மணி, ஒன்றியக் குழு
உறுப்பினர் சிவசாமி, ஊராட்சித் தலைவர்கள் மாணிக்கம், குமார், நிர்வாகிகள் பரமன்,
பழனிச்சாமி, ராஜா, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் எ. மாணிக்கம்
நன்றி கூறினார்.
NEWS FROM : DINAMANI
திங்கள், 27 மே, 2013
"ராமேஸ்வரம் முத்தரையர் அறக்கட்டளையின்" இரத்ததான முகாம்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1338- வது சதய விழாவினை முன்னிட்டு "ராமேஸ்வரம் முத்தரையர் அறக்கட்டளையின்" இரத்ததான முகாம்
படங்கள் உதவி : ராமன் முத்தரையர்
படங்கள் உதவி : ராமன் முத்தரையர்
சனி, 25 மே, 2013
1,338வது சதய விழா முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு
திருச்சி, : திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,338வது சதய விழாவையொட்டி அரசு தரப்பு மற்றும் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தலைமையிலும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கைக்குடி சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
News From : DINAKARAN