பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 100% தேர்ச்சி முத்தரையர் உயர் நிலைப் பள்ளி சாதனை....!!!
நேற்று முன்தினம் வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் நமது "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உயர் நிலைப் பள்ளி" 100 % தேர்ச்சியும், அத்தோடு நில்லாமல் 12 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 400 க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றிப் பெற்று உள்ளனர், முதல் மதிப்பெண் 477/500 பெற்று எம் இனத்தின் பெயர் தாங்கி நிற்கும் உயர் நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளிக் குறித்து நாம் ஏற்கனவே ஒரு பதிவினை செய்திருந்தோம், அதனை மீண்டும் நம் உறவுகளுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
அந்த கட்டுரை :
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் கல்வி அறக்கட்டளை
"கல்வி" இல்லாமல் இனி நம் சமூகம் முன்னேற வேறு புதிய வழிகள் கிடையாது... நமது சக சமூகங்களின் வெற்றியே கல்வியில் அவர்கள் பெற்ற வெற்றிதான், நமது எதிர்கால சந்ததியும் இந்த போட்டி நிறைந்த உலகில் வெற்றிப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதற்க்கு நாம் என்ன செய்ய முடியும் ? என்ற கேள்வி நமது சமூகத்தின் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்து அதற்க்கு செயல்வடிவம் கொடுத்து இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலத்தில் “பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் கல்வி அறக்கட்டளை" தொடங்கி அதன் மூலம்"பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உயர் நிலைப் பள்ளியாகி" (PPM HIGH SCHOOL) நிற்கிறது, இன்னும் நாம் அடைய வேண்டிய தூரம் அதிகம் என்றாலும், அதற்க்கான துவக்கப் புள்ளி இன்று கீரமங்கலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிலையம் துவங்கப்பட்டு 7 ஆண்டுகளே ஆன போதும் இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 முறை 100% தேர்ச்சியை பெற்று தமிழக அரசால் கெளரவிக்கப் பட்டுள்ளது உண்மையிலேயே நாம் பெருமைபடதக்க செய்திதான்.
இதில் மேலும் ஆச்சரியமான செய்தி இது எந்த தனி நபரின் அல்லது சிலரின் உடமையும் அல்ல.... உலகம் முழுவதும் பரந்து வாழும் முத்தரையர்களை பங்குதாரர்களாக கொண்டு, தனித்து இல்லாமல் சமுதாயத்திற்க்காக வேண்டி இயங்கி வரும் ஒரு உன்னதமான கல்வி நிறுவனம் இது.. இதில் பங்குதாரர் ஆக முதல் தகுதி நீங்கள் "முத்தரையராக" இருக்க வேண்டும், ரூபாய் 10,000/- பங்குதொகை செலுத்தினால் நீங்களும் பங்குதாரர் ஆக முடியும் (இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 20,000/- க்கும் மேல்... ஆனாலும் பங்கு தொகை உயர்த்தப்படவில்லை), இதுவரை சுமார் 500 க்கும் மேற்பட்ட நமது உறவினர்கள் இதில் பங்குதாரர்களாகி உள்ளனர்.
மேலும் சுமார் 1000 பேர் இதுவரை பங்குதாரர் ஆக முன்பணம் செலுத்தி உள்ளார்கள், இதில் மற்றும் ஒரு சிறப்பு ஒரு நபர் ஒரு பங்கினை மட்டுமே வாங்க முடியும், இதன் மூலம் தனி நபர்களின் கைகளுக்கு செல்லாமல் இனத்திற்க்காகவே தொடர்ந்து இயங்கும் இந்த கல்வி நிறுவனம் நமது பங்களிப்புடன் மிகப் பெரிய வளர்ச்சியினை அடையும் சாத்தியங்கள் அதிகம்.
தற்சமயம் இந்த பள்ளி சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பட்டுக்கோட்டை - அறந்தாங்கி பிரதான சாலையில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் அடுத்தக் கட்டமாக "மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி" துவங்க ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது, அதற்க்காக புதிய கட்டிடம் கட்ட நிதி போதாமையினால் பணிகள் சுணக்கமாக நடந்து கொண்டு இருக்கிறது, மேலும் இந்த பள்ளிக்கு அருகில் உள்ள நிலங்களையும் வாங்கினால் எதிர்காலத்தில் இந்த கல்வி நிறுவனத்தினை கல்லூரியாக மாற்ற வசதியாக இருக்கும்,
ரூபாய் 10,000 / - (பத்தாயிரம் ரூபாய்) ற்க்கும் மேலாக நீங்கள் செய்யும் எந்த நிதியும் " நன்கொடை" யாக கருதப்படும் இந்த கல்வி
நிறுவனத்தினை நல்லாசிரியர் விருதினைப் பெற்ற, இந்த பள்ளியின் முதல் " தலைமை
ஆசிரியர்" மரியாதைக்குறிய அய்யா திரு. சண்முகம் அவர்களுடன் நமது நண்பர்கள்
திரு. காந்தி, திரு. வசந்த், திரு. கண்ணன் நாதன் திரு.அன்பரசன் உள்ளிட்டோருடன் நேரில்
சென்று காணும் வாய்ப்பு கிடைத்தது,
அருமையான அமைவிடத்தில்
பசுமையான சூழ் நிலையில், பிரதான சாலையினை ஒட்டி இந்த கல்வி நிறுவனம் சிறப்பான,
ஈடுபாடான ஆசிரியர்களை கொண்டு வியக்கும் வண்ணம் இயங்கி வருகிறது. 5000 த்திற்க்கும்
மேற்பட்ட அறிய நூல்களை கொண்ட நூலகமும், பரந்து விரிந்த விளையாட்டு மைதானமும், இந்த
கல்வி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டினை கண்டு வியந்த "LITTLE DROP
CHARITY TRUST SCOTLAND, UNITED KINGDOM " என்ற தொண்டு நிறுவனம் எந்த
பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நன்கொடையாக ஒரு ஆய்வகத்தினை 10 லட்ச ரூபாய்
மதிப்பில் கட்டி கொடுத்துள்ளது, இதே போன்று ஆர்வமான நம் இனத்தினர் பலர் ஆய்வகக்
கருவிகள், புத்தகங்கள், கணிப்பொறிகள் போன்றவற்றினை நன்கொடையாக அளித்து இந்த கல்வி
நிறுவனத்தினை உயிர்ப்புடன் வைத்து இருக்கிறார்கள், மிகவும் ஆர்வமாக இந்தப் கல்வி
நிறுவனத்தினை தனது முழு நேரத்தினையும் செலவிட்டு நிர்வகித்து வரும் திரு.
இந்திரன், திரு. காசிலிங்கம் போன்ற எண்ணற்ற சமூகப் பெரியவர்களுக்கு இந்த நேரத்தில்
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த கல்வி நிறுவனத்தில் பங்குதாரர்களாக (அல்லது) நன்கொடையாக எதேனும் உதவிகள் செய்ய விரும்பும் எனதருமை உறவினர்கள் திரு. இந்திரன் (Mobil: +91-9566514893 Email
t_indran@yahoo.com )அவர்களை தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கட்டூரையின் நோக்கம் நல்ல சிந்தனையாளர்களால் உருவாக்கப் பட்டு, சிறப்பாக நிர்வகிக்கப் படும் நமது கல்வி நிறுவனம், இன்னும் சமூகத்திற்க்காக எதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன், யாருக்கு எப்படியான உதவிகளை செய்யலாம் ? என்று காத்திருக்கும் நமது சமூக நண்பர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை தெரியப்படுத்த மட்டுமே...!! உங்களால் முடியும் என்றால் பங்குதாரராக இருங்கள் அல்லது வாய்ப்பிருக்கும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள், இதையும் ஒரு சமூகப் பணியாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்...
என்றும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் புகழ்பாடும்....!
சமூகப் பணியில்....
சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.
தகவல் உதவி : வாசுதேவன் சின்னப்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக