கலப்பு திருமணங்கள் மாற்றத்தை நோக்கி செல்லுமா ? என்ற ஒரு விவாத நிகழ்ச்சி "புதிய தலைமுறை தொலைக்காட்சியில்" இரு தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது, அதில் கலந்து கொண்டு "கலப்பு திருமணங்களினால்” ஏற்படும் இன்னல்களை விளக்கி கொங்கு வேளாளர் பேரவை தலைவர் பொங்காலூர் மணிகண்டன் பேசினார்,
அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. பாலபாரதி, அண்ணன் மணிகண்டனை சட்டத்தை காட்டி மிரட்டுகிறார், கலப்பு திருமணத்திற்க்கு எதிராக பேசுவது சட்டத்தை மீறுவதாம், சட்டம் சொல்வதை மீறி இவர் பொது இடத்தில் பேசலாமா ? என்கிறார், ஆங்கிலேயர் சட்டங்களை எதிர்த்து பேசிய மகாத்மா காந்தி இன்று இவர்களுக்கு "தேசதந்தை" எனும்போது இன்றைய சட்டங்களில் இருக்கும் குறைகளை சொன்னால் அவர்கள் குற்றவாளியா ?
நான் கேட்கிறேன் நீங்கள் எல்லா விசயத்திற்க்காகவும், ரயிலை மறித்தும், சாலையை மறித்தும் போராட்டம் நடத்துகிறீர்களே எந்த சட்டம் உங்களை இப்படி போராட அனுமதித்து இருக்கிறது, கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு சட்டம், கவுண்டர்களுக்கு ஒரு சட்டமா ?
சட்டம் சொன்னால் ஏற்றுக் கொண்டு சென்று விட வேண்டும் என்றால் நீங்கள் ஏன் "தடா""பொடா" சட்டங்களை எதிர்த்தீர்கள் சட்டமாக்கிய பிறகு ஏற்றுக் கொண்டு இருக்க வேண்டியது தானே..? சாதியை பேசுபவர்களுக்கு எதிரானதாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அப்படியானால் திருமதி. பாலாபாரதியிடம் சவாலாக கேட்கிறேன், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் இருக்கும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு அதே தொகுதியில் ஒரே ஒரு வார்த்தை "சாதியை ஆதரிப்பவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்" என்று சொல்ல தயாரா ? ஒருவேளை அது போல நடந்தால் ஆயிரத்திற்க்கும் குறைவான ஓட்டுக்களை மட்டும்தான் நீங்கள் பெறுவீர்கள் அதுவும் உங்கள் சாதியை சேர்த்தவர்கள் இட்டதாக இருக்கும். சட்டங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை அதில் தவறுகளும் இருக்கலாம், அதை பேசக் கூடாது என்று பூச்சாண்டி காட்டி மிரட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அதே விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய இன்னொருவர் பத்திரிக்கையாளர் (!) கவின்மலர், மிகுந்த அறிவோடு தான் பேசுவதாக அவருக்கு எண்ணம் அவரிடம் அண்ணன் மணிகண்டன்
கேட்கிறார் சாதி மாறி காதல் திருமணம் செய்து எதோ காரணத்தால் அந்த பெண் ஆறு
மாதத்திலோ, ஒரு வருடத்திலோ தாய்வீடு திரும்பினால் அதற்க்கு யார் பொறுப்பு
எனும்போது "பெண்ணியம்" பேசி திரியும் கவின்மலர் பொறுப்பான பதில் ஏதும் சொல்லவில்லையே
ஏன் ?
கவின்மலர்
மேலும் சொல்கிறார் "காதல் என்பது அறிவியல்" அதனை நீங்கள் எப்படி
எதிர்க்க முடியும் என்று ? காதல் என்பது அறிவியல் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்,
நாங்கள் கேட்கிறோம் "திருமணம்" என்பது அறிவியலா ? மத, சாதியத்தின்
சடங்குதானே "திருமணம்" அதற்க்கு ஏன் நீங்கள் வக்காலத்து
வாங்குகிறீர்கள், அறிவியல் ஆணும் பெண்ணும் இணைவது (SEX) என்றால் அதையே நீங்களும்
வலியுறுத்தலாமே... யாரும் யாருடனும் என்று இருந்துவிடலாமே ஏன் மதத்தின்
அடயாளமாகவும், சாதியத்தின் அடையாளமுமாக இருக்கும் "திருமணத்தை" நீங்கள்
வலியுறுத்துகிறீர்கள் ? காதல் என்பது அறிவியலாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்,
"அணுகுண்டும், அணு உலையும்" கூடத்தான் அறிவியல் ஏற்றுக் கொள்கிறீர்களா ?
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட
இருவருமே தலித்திய நிழலில் நின்றுக் கொண்டு "சாதியை" எதிர்க்கும்
புரட்சியாளர்கள், தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையான நதி நீர் (குறிப்பாக முல்லைப்
பெரியாறு) பிரச்சனை குறித்து கருத்து சொல்ல மறுக்கும் மார்க்ச்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்
போன்ற கட்சிகள் அமைதியான தமிழ் சமூகத்தில் சில சமூக இளைஞர்களை தூண்டிவிட்டு சாதிய
கலவரத்திற்க்கு வித்திட்டு அங்கு நடக்கும் கலவரத்தில் இருந்து ரத்தம் குடிக்க
காத்திருக்கின்றனர். இதைதான் நீண்டகாலமாக சமூக சீர்திருத்தவாதிகள் செய்து
தமிழர்களின் அடையாளத்தை மறைக்க முயற்ச்சிக்கிறார்கள்,
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு
இன்றைய சமூகத்தின் உண்மை நிலையை எடுத்துரைத்த அண்ணன் பொங்காலூர் மணிகண்டன் அவர்களுக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
விவாதத்தினை காண.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக