ஒரு விசயம்....!!
தமிழகத்தில் சாதியை ஒழிக்கப் போவதாக ஒரு கும்பலும், கடவுள் இல்லை என்று மற்றோர் கும்பலும்நீண்ட காலமாக அரசியம் செய்து வருகின்றது, அவர்களுக்கு நன்றாக தெரியும் "சாதியையும், கடவுள்நம்பிக்கையையும்" என்றும் மக்கள் மனதில் இருந்து மாறாது என்று..!! பிறகு ஏன் இதையே சொல்லிஅரசியல் செய்கிறார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் வாழ் நாள் முழுவதும் அரசியலில் இருக்கமுடியும் அவர்கள் சந்ததியும் இதையே சொல்லி பிழைக்க முடியும் இதுதான் விசயம்…!!! சரி இவர்களையார் ஆதரிப்பார்கள் என்றால் யாரெல்லாம் ஊரை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அவர்களுக்கு இவர்கள்தான் கடவுள், இதில் வேடிக்கையான வேறு ஒரு விசயம் "சாதியையும், கடவுளையும்" நம்பும் மக்கள்தான் இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் எல்லாம் தாராளமாக தருகின்றார்கள், சரி வேறு என்னதான் செய்வது அரசியலும் நடக்க வேண்டுமே என்றால் அதற்க்கான காரணங்களும், பிரச்சனைகளும் கொட்டி கிடக்கின்றன அதனை எந்த அரசியல்வாதியும் சீண்ட மாட்டான்… எத்தனையோ பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் கிடப்பில் இருக்கின்றது அதை யாரும் தொடக் கூட மாட்டார்கள், தீர்ந்துவிடும் என்று கருதக் கூடிய பிரச்சனைகளை தங்கள் அரசியலுக்காக தீராமல் பார்த்துக் கொள்வதும் உண்டு, உதாரணம் "சேது சமுத்திர திட்டம்" அது என்றோ தீர்ந்து இன்று சேதுக் கடலில் கப்பல்கள் சென்றிருக்க வேண்டும் ஆனால் அது நடக்கவில்லை காரணம் "ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் ?" என்ற கேள்வி அதுவரை யாரோ ஒரு சுப்ரமணிய சுவாமி மட்டும் பினாற்றிய ஒரு பிரச்சனை ஒரு மதப் பிரச்சனையாக மாறுதல் பெற்றது, அது வரை சேது சமுத்திர திட்டம் என்றால் என்ன என்றுகூட அறியாதவன் எல்லாம் அந்த திட்டத்தினை எதிர்த்துக் கொண்டு இருக்கின்றான் அதுதானே நம் அரசியல்வாதிகளுக்கும் வேண்டி இருந்தது ஒருவேளை அந்த திட்டம் நிறைவேறி விட்டால் அரசியல் செய்வது எப்படி... ? இதே நிலைதான் காவிரியிலும் மத்தியில் ஆட்சி அதிகாரமெல்லாம் இருக்கும், தன் கட்டளைபடிதான் நாட்டின் அரசாங்கமே நடக்கும் ஆனாலும் அந்த பிரச்சனையும் தீர்ந்து விட்டால் ஆண்டுதோரும் எதை வைத்து அரசியல் செய்வது ?
காவேரி பிரச்சனை கிடக்கட்டும் வெறும் 200 TMC தண்ணீர், ஆண்டுதோறும் மழை மூலம் கிடைக்கும்1000 TMC தண்ணீர் வீணாய் கடலில் கலந்து கொண்டு இருக்கிறது, இந்த நீரை சேகரிக்க உருப்படியானஒரு திட்டமும் இல்லை, கால்கடுக்க வெயிலில் நிற்க்கவும், வாய்ப்பு கிடைத்தால் அடுத்தவர்களைப்பற்றி போட்டுக் கொடுக்கவும் மட்டுமே தெரிந்த அமைச்சர்கள், ஒரே ஒரு முதலமைச்சர், அவரேஅமைச்சர், அரசு, அதிகாரம் எல்லாம் கருத்து சொல்லும் அளவிற்க்கு அமைச்சர்களுக்கு அறிவும் குறைவு,ஆற்றலும் இல்லை..!!! இதில் இவர்கள் எங்கே திட்டமிடுவது..! செயல்படுத்துவது ? சரிதான்அரசியல்வாதிகள் எல்லோரும் இவ்வளவு மோசமானவர்களாக இருக்கின்றார்களே... என்றுநினைக்கின்றீர்களா ?
சற்று பொறுங்கள் "தமிழக மக்கள்" பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டி இருக்கின்றது, தேர்தல்வரும், ஏன் வருகிறது ? எதற்க்கு வருகிறது ? என்பதல்ல இங்கே கேள்வி யார் எவ்வளவு தருவார்கள் ?எவ்வளவு குடிக்க முடியும் ? சரி எப்போதாவது வரும் தேர்தல், அன்று தரும் பணத்தை அதுவும் ஊழல்செய்த பணத்தை வாங்கினால் என்ன தவறு ? என்கிறீர்களா ? சரி வாங்கி தொலையுங்கள், பணம்கொடுத்தாலும் ஒரு நல்லவனை தேர்ந்தெடுக்க வேண்டாமா ? ஊரில் எவன் ஒருவன் "அயோக்கியன்" "பொம்பளை பொருக்கி" "ரவுடி" "கட்டபஞ்சாயத்துக்காரன்" "கந்துவட்டிக்கு பணம்தருபவன்""கொலைபலிக்கு அஞ்சாதவன்" இவன் தான் நம் மக்களின் எகோபித்த ஆதரவுடன் நாடாளவும்,மாநிலங்கள் ஆளவும் சிறப்பு தகுதிகளோடு தேர்ந்தெடுக்கப் படுபவர்கள்.
இதில் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்வது எப்படி சரியாக இருக்கும் ? இனியேனும் சாதியைஒழிக்கிறேன், சடங்ககை ஒழிக்கிறேன், மதத்தை மாற்றுகிறேன், கடவுளை இல்லாமல் ஆக்குகிறேன்என்று வெற்று பிதற்றல்களை சொல்லி வருபவர்களை ஒதுக்கிவிட்டு, இருக்கும் பிரச்சனைகளை, வரப்போகும் பிரச்சனைகளை தீர்க்கும் தகுதியும், திறனும், திட்டமும் யாரிடம் இருக்கிறது என்று பார்த்துதேர்ந்தெடுங்கள்.
- சஞ்சய் காந்தி அம்பலகாரர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக