வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

நீலகிரி மாவட்ட முத்தரையர் நல சங்கம் கல்வி கொள்ளையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டம்

 நீலகிரி மாவட்ட முத்தரையர் நல சங்கம் கல்வி கொள்ளையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டம்


புகைப்பட உதவி : எழில்ராஜா அரசன்

முத்தரையர் சமுதாயத்திற்க்கு சொந்தமான கோவில் கும்பாபிஷேகத்திற்க்கு தடை.. பதற்றம்..!!!

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் உள்ள நாகமலை சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

 மல்லாங்கிணறில் முத்தரையர் சமுதாயத்தினருக்குச் சொந்தமான நாகமலை சுவாமி திருக்கோயில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் தற்போது புணரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்ற 8ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த முதலில் அனுமதி வழங்கிய காவல்துறை தற்போது கும்பாபிஷேகம் நடைபெற தடை விதித்துள்ளது.
   கும்பாபிஷேகம் நடைபெற்றால் இருபிரிவினரிடையே பிரச்னை ஏற்படும் என்பதால் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

  இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கும்பாபிஷேகம் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 News Source : DINAMANI

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

தொட்டியம்பட்டியில் கபடிப் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டியில் அழகுநாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிறுக்கிழமை கபடிப்போட்டி நடைபெற்றது.
தொட்டியம்பட்டி ஏஎஸ்கே கபடிக்குழுவும்,ஊர்பொதுமக்களும் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் கபடிக்கழக அனுமதியுடன் நடத்திய இப்போட்டிக்கு ஊர் முக்கியஸ்தர் அ. அடைக்கன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் ஜெயந்திவிஜயகுமார்,சி. ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில் தஞ்சை எம்ஜே பிரதர்ஸ், சீகம்பட்டி வெண்புறா,மதுரை இடையபட்டி சில்வர் மவுண்டைன், சிங்கம்புணரி கூத்தாடி அம்மன், தமிழ்நாடு முத்தரையர் சங்கம் பூசாரிபட்டி, நத்தம் வேலாயுதம்பட்டி என்ஐபி அணி உள்ளிட்ட 24 அணியினர் பங்கேற்றனர்.
இதில் முதல்பரிசை பெருமாநாடு இணைந்த கைகள் அணியினரும், இரண்டாம் பரிசை டி. புதுப்பட்டி தேவேந்திரர் வளர்பிறை அணியினரும், மூன்றாம் பரிசை தொட்டியம்பட்டி அழகியநாச்சியம்மன் அணியினரும், நான்காம் பரிசை காளாப்பூர் விவிஎஸ் அணியினரும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பையை திமுக ஒன்றிய செயலர் சி. ராஜூ, மேலைச்சிவபுரி பாரதி கலை மன்ற நிர்வாகிகள், வலையபட்டி அழகு அய்யப்பன், பொன்னமராவதி டி. ஆனந்த் உள்ளிட்டோர் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஏஎஸ்கே கபடிக்குழு தலைவர் எஎல். ராஜேந்திரன், எஎல். கருத்தான்,எ. ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

 News Source : DINAMANI

15% இட ஒதுக்கீடு வேண்டும் முத்தரையர் சங்கம் வலியுறுத்தல்





கரூர், : 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முத்தரையர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட அமைப்புக் குழு ஆலோ சனைக் கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. சங்க பொதுசெயலாளர் மரு.பாஸ்கரன் தலைமை வகித்தார். வெங்கட், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, காத்தவராயன், வக்கீல் சீனிவாசன், தீரன்அறிவழகன், ராமமூர்த்தி, ரமேஷ், விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். அமைப்புக்குழு தலைவராக வெங்கட், செயலாளராக சபரீசுவரன் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். முத்தரையர்கள் உட்பிரிவினரை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்ப்பதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண் டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அக்டோபரில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது, டிசம்பரில் இட ஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மாவட்ட மாநாட்டை நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News Source : DINAKARAN

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் கல்வி பரிசளிப்பு விழா



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த திருவரங்குளத்தில் முத்தரையர் இன மாணவ மாணவியரில் மாவட்ட அளவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 4 பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 275-பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 21-ஆண்டுகளாக நடந்து வந்த நிகழ்ச்சி 22-ஆம் ஆண்டாக நேற்று நடத்தப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முத்தரையர் சங்க மாவட்டத் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். 


ஓய்வு பெற்ற ஆணையர் திருமலைநம்பி, வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ராஜசேகரதங்கமணி, புதுகை மாமன்னர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் சுந்தரம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் விருது பெற்ற சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.


இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் சாந்தி சிறப்புரையாற்றினார்.. 
அப்போது அவர் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோதெல்லாம் குறுநில மன்னர்களாக இருந்து தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டு வந்தவர்கள் முத்தரைய மன்னர்கள்தான். அதேபோல் அவர்கள் கட்டிய கோயில்களில் பலவற்றை சோழ மன்னர்கள் கட்டியதாகச் சொல்லப் படுகிறது. கல்வெட்டுகளை சரியாக ஆய்வு மேற்கொள்ளும்போது முத்தரையர்கள்தான் கட்டியிருக்கிறார்கள் என்பதற்கான அந்த ஆவணங்கள் கிடைக்கப் பெறுகின்றன. உதாரணத்திற்கு நார்த்தாமலைக் கோயில்.
நாடாண்ட இனம் இப்போது கல்வியில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. பழங்காலத்தில் ஆண் புலவர்களுக்கு இணையாக பெண்பாற்புலவர் பெருமக்கள் இருந்து பாடல்களை இயற்றியிருக்கிறார்கள். காவியங்கள் படைத்திருக்கிறார்கள். இலக்கியப் பணிகளில் தீவிரமாக இருந்து சாதனைகள் உருவாக்கியிருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப் பட்டு ஆண்கள் மட்டுமே கல்வி கற்கும் நிலை வந்ததால் பெண்கள் மிகவும் பின்னுக்கு வந்து விட்டார்கள். அதில் முத்தரையர் மட்டுமல்ல நாட்டு மக்களே கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னர்களும் மன்னர்களின் வாரிசுகளும் படைத்தளபதிகளின் வாரிசுகளும் மற்றும் கல்வி கேள்வியில் சிறந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. மற்றவர்கள் நாடு செழிக்கவும் பாதுகாக்கவும் உழைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துலெட்சுமி கல்வி கற்பதற்கும் மருத்துவராவதற்கும் என்ன பாடுபட்டார் என்பது கடந்த நூற்றாண்டு வரலாறு பேசுகிறது. பெண்களைவிடவும் கல்வி மறுக்கப் பட்ட நிலையில் முத்தரையர் இனம் இருந்ததால்தான் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள். இங்கு 275-பேர் மாவட்ட அளவில் வந்து பரிசு பெறுகிறார்கள். ஆனால் பத்தாம் வகுப்பில் 492-மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவர் இங்கு கல்வியில் முன்னேற்றமடைந்தவர்களுக்கு மேலும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்குவதையும் அதைப் பெறவேண்டும் என்பதையும் அறியாமலயே இருந்திருக்கிறார் என்ற அளவிற்கு சமூகத்தில் பின் தங்கியே வந்திருக்கிறார்கள். 
அந்த நிலையை மாற்றுவதற்கும் அரசின் கல்விக் கொள்கையை முழுமையாக அடைந்து நல்ல உயர் கல்வி கற்று சமூகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் முதலில் கல்வியில் உயர வேண்டும். அதற்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான். இலக்கிய காலங்களிலும் முத்தரைய ஆட்சிக் காலத்திலும் முன்னேறியிருந்த நிலைக்கு மீண்டும் கல்வியில் உயர வேண்டும் என்று பேசினார்



இந்நிகழ்ச்சியில் மேலும் டாக்டர்கள் லோகநாதன், மதுரை சண்முகப்பிரியா, ஆடிட்டர் வைத்திலிங்கம், சங்க அமைப்புச்செயலாளர் நத்தம் முரசுவீரையா, பாமக மாவட்டச் செயலாளர் வெள்ளைச்சாமி, சந்திரமோகன், கறம்பக்குடி முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராமன், சேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள். முத்தரையர் மண்டகப்படிக் குழுத் தலைவர் முத்துச்சாமி நன்றி கூறினார்

- சுரேஷ் வடகாடு
புகைப்பட உதவி : சிங்கதமிழன் முத்துராஜா