- களப்பிரர்கள் என்பவர்கள் தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்கள். அவர்கள் தான் பிறகு ஒன்று சேர்ந்து படை திரட்டி தமிழகத்தைக் கைப்பற்றி முன்னூறு வருடங்கள் ஆண்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
- களப்பிரர்கள் என்பவர்கள் கலப்பை கொண்டு உழுத விவசாயப் பெருகுடி மக்கள். கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பர் என்று மறுவி பின்னர் களப்பறையர் என மாறியது. களப்பரையர் என்ற பெயர் தான் பிறகு களப்பிரர் என்று மருவியது என்றும் கூறுகின்றனர். தம்முடைய சொந்த நிலத்தில் பயிர் செய்யும் வேளாளர்களை உழுதுண்பர், ஏரின்வளனர், வெள்ளாளர், கரலர், கலமர் என்ற பெயர்களில் அழைத்தனர்.
- களப்பிரர்கள் என்ற களப்பாளர்கள் பண்டைய தமிழ்க் குடிகளைச் சேர்ந்த சைவ மரபைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
- கர்னாடக மாநிலத்தைச் சார்ந்த நந்தி மலையில் வாழ்ந்த முரட்டுக் குடியைச் சேர்ந்த மக்கள் தான் இந்த களப்பிரர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இவர்கள் அந்த மலைப்பகுதிகளில் வாழ்ந்த கள்வர்கள் என்ற வாதமும் ஆராய்ச்சியாளர்களிடையே உள்ளது.
மைசூரில் கிடைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் கர்நாடகத்தின் மலைக் காட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் அதில் உள்ளதாக கூறுகின்றனர்.
- சோழ நாட்டில் களப்பாள் என்ற இனக்குழுவினர் தான் இந்த களப்பிரர்கள் என்ற வாதமும் ஆராய்ச்சியாளர்களிடையே உள்ளது.
- களப்பிரர்கள் தமிழ் அல்லாத நாட்டிலிருந்து வந்து தமிழகத்தை கைப்பற்றி மூன்று நூற்றாண்டுகள் ஆண்டனர் என்றும் கூறுகின்றனர்.
- களப்பிரர்கள் புதுக்கோட்டைப் பகுதியை ஆண்ட முத்தரையர் என்ற கருத்தும் வழங்கி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக