கலவரம்...!!!
நண்பர்களே
இந்தியாவில்
என்ன நடக்கிறது
என்று கவனிக்கின்றீர்களா
?
உத்திரபிரதேசத்தின்
முசாஃபர்நகர்
மாவட்டத்தில்
நடந்து வரும் கலவரங்களையும்
கவனித்து
இருப்பீர்கள்,
அவ்வளவு
விரிவாக
இல்லாவிட்டாலும்
அதில் நாம் கவனிக்க
வேண்டிய
ஒரு விசயம் இருக்கிறது,
நடக்கும்
கலவரம் இந்து-முஸ்லீம்
கலவரமாக
அடையாளப்படுத்தப்பட்டாலும்,
உண்மையில்
கலவரம் "ஜாட் சாதியினருக்கும்
- முஸ்லீம்களுக்கும்
இடையில்தான்
நடக்கிறது,
இதில் இருதரப்பிலும்
இருக்கும்
சரி தவறுகள் நிறைய, மீண்டும் அங்கு
அமைதி திரும்ப வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள், இதில் நான்
குறிப்பிட வந்த விசயம் "ஜாட்"களில் ஒற்றுமை, ஆம் ஆச்சரியபடதக்க
அவர்களின் "பஞ்சாயத்து அமைப்புகள்" இது அரசு சார்ந்ததோ, அரசாங்கம்
சார்ந்ததோ இல்லை.., அதற்க்கு நிகராக சுமார் ஆறு மாநிலங்களில் (உத்திரபிரதேசம்,
ஹரியானா, டெல்லி,
பஞ்சாப் உள்ளிட்ட) எட்டுக் கோடி மக்கள்தொகை கொண்ட "ஜாட்"களின்
பஞ்சாயத்து அமைப்பு முறை அவர்கள் இருக்கும் மாவட்ட அல்லது மாநில எல்லைகளுக்குள்
கூட்டினால் அது "பஞ்சாயத்து" என்றும் அனைத்து மாநில பிரதிநிதிகளும்
கலந்து கொண்டால் அது " மெகா பஞ்சாயத்து" என்றும் அழைக்கப்படுகிறது, இந்த
சாதியை சேர்ந்தவர்தான் முன்னாள் இந்திய பிரதமர் திரு. சரன்சிங் (அவர் மகன் இன்றைய
மத்திய அமைச்சர் அஜித்சிங்) ஆவார்.
இந்த சாதியில்
பிரதமராக
இருந்தாலும்,
மத்தியஅமைச்சராக
இருந்தாலும்,
மாநில முதலமைச்சராக
இருந்தாலும்,
தொழில்அதிபராக
இருந்தாலும்
அனைவருமே
இந்த "பஞ்சாயத்திற்க்கு"
கட்டுப்பட்டவர்கள்தான்,
தமிழகத்தை
போல போலி திராவிட,
சாதி மறுப்பாளர்கள்
அங்கும்
இருக்கலாம்
ஆனாலும்
அது "ஜாட்"களையோ அவர்களின்
"பஞ்சாயத்தையோ"
எப்போதும்
பாதிக்காது.
அது போலவே எந்த அரசியல்
கட்சியில்
இருந்தாலும்,
வேறு எந்த அமைப்பில்
இருந்தாலும்,
அரசப்பதவியில்
இருந்தாலும்
இவர்களுக்கு
முதலில்
"சாதி" பின்னர்தான்
சட்டம், அரசாங்கம்,
தீர்ப்பு
எல்லாம்,
இவர்களுக்கு
எதிராக செயல்படும்
அளவிற்க்கு
இந்த மாநிலத்தின்
அரசாங்கங்கள்
இன்னும்
திறன் பெற்றுவிடவில்லை,
காவல்துறையும்
கூட குற்றப்பத்திரிக்கை
எழுதுவதற்க்கு
முன்பாக
இவ்ர்களின்
பஞ்சாயத்து
தீர்ப்பிற்க்கு
காத்திருந்தது
கூட நடந்து இருக்கிறது
இது கொலை, கற்பழிப்பு
வழக்குகளுக்கும்
கூட பொருந்தும்,
இப்போது
புரிந்திருக்கும்
இவர்களின்
"பஞ்சாயத்தின்"
வலிமை...!!!
இவர்கள்தான்
இன்று நடக்கும்
கலவரத்திற்க்கு
காரணமானவர்கள்
இதுவரை எதிர்தரப்பில்
(முஸ்லீம்கள்)
சுமார் 40 பேர் இறந்தும்
கூட இவர்கள்
கட்டுப்படுத்த
அரசாங்கம்
திணறி வருகிறது.
அல்லது இவர்களிடம்
நெருங்க
அச்சம் கொண்டுள்ளது.
இன்னும்
மத்திய அரசின் உளவுதுறை
இந்த கலவரம் மேலும் ஆறு மாநிலங்களுக்கு
பரவக் கூடும் என்று எச்சரிக்கிறது
(அந்த ஆறு மாநிலத்திலும்
ஜாட் மக்கள் பரவி இருக்கின்றார்கள்)
தற்போதைய தாக்குதல்களில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எனவே
மாவட்ட அளவில் துப்பாக்கி உரிமங்கள் 1700-க்கும்
மேல் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 366 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர். பலரிடமிருந்து துப்பாக்கி, வாள்,
இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
இதுதான் அரசாங்கத்தின் அதிகபட்ச நடவடிக்கை..!!
இங்கு ஜாட்களுக்கு நான் வக்காலத்து
வாங்குவதற்க்காக இதனை எழுதவில்லை என்னை ஆச்சரிப்படுத்திய அவர்களின் ஒற்றுமையை
எம்மக்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது எழுத்தின் நோக்கம்..,
கலவரம் செய்வதற்க்காக ஒன்று கூடுங்கள் என்பதல்ல எனது வேண்டுகோள் அமைப்பாக
திரளுங்கள் என்பதுதான். நமக்கான உரிமைகளை பெறவும், இட
ஒதுக்கீடு போன்றவற்றில் எம்மினம் புறக்கணிக்கப்படுவதை தவிர்க்கவும் இதுதான் சரியான
வழிமுறை அமைப்பாக திரள அரசியலோ, பதவியோ இங்கு பிரச்சனையாக கருதாமல் அவரவர்
இருக்கும் இடங்களில் "முத்தரையர் உறவின் முறை சங்கம்" அமைத்து அதில்
கட்சி, சங்கம், வசதி, ஏழை, உட்பிரிவு என்று என்ற பேதமில்லாமல் குடியிருக்கும் தெரு
வாரியாக, கிராமம் வாரியாக இணைத்து அதன் பிரதிநிதிகள் ஆண்டுக்காண்டு
தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக எளிய பிரச்சனைகளை செலவில்லாமல் தீர்த்துக்
கொள்ள எம்மினம் முன்வர வேண்டும், செய்வார்களா ? இதற்க்காக நாம் தலைவர்களை சார்ந்து
இருக்க வேண்டியதில்ல இதற்க்காக பெரிய அளவிற்க்கு பொருள் செலவும் செய்ய
வேண்டியதில்லை ஆனால் நம்முடைய ஒற்றுமையை நிலை நிறுத்த முடியும் என்பது எனது யோசனை,
இதற்க்கு
நம்மிடையே உதாரணங்களாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் இருக்கின்றன,
இது போன்ற நம் சமூகம் சார்ந்த அமைப்புகள் அங்கெல்லாம் இருக்கின்றன, இதனை
ஒருங்கிணைப்பதில் நம் மாநில சங்கங்கள் தோல்வியை சந்தித்து இருக்கின்றது, காரணம்
மாநில சங்கங்கள் சில ஆதாயத்திற்க்காகவும், சில கெளரவத்திற்காகவும்
நடத்தப்படுகின்றனவே தவிர சமூகத்தின் தேவைக்காக நடத்தப்படவில்லை..!! இந்த தவறு
திருத்தப்பட்டு உண்மையான அர்பணிப்போடு இந்த செயல்களை நாம் முன்னெடுக்க வேண்டும்,
நம் தலைவர்களை வலியுறுத்த வேண்டும்..!!!
எல்லா நேரங்களிலும் வாய்ப்பு வரும்
என்று காத்திருப்பதைவிட " நம்மால் எதாவது செய்ய முடியுமா ? " என்று
நம்மை நாமே கேட்டுக் கொண்டால் இதற்க்கு தீர்வு வெகு விரைவில் கிடைத்து விடும்.
சிந்திப்போமா
.... சிங்கங்களே...?!!!
சமூகபணியில்...
உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்.
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக