இதற்கு தலைமை தாங்கிய டாக்டர் ராமதாஸ் பேசியபோது, ’’சமுதாயங்களுக்குள் ஏற்படும் பிரச்சினை களுக்கு குரல் கொடுப்பதற்காக அனைத்து சமுதாய பேரியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சார்பில் 32 மாவட்டங்களுக்கும் சென்று கூட்டம் நடத்தினோம். இதற்கு கிடைத்த வரவேற்பு மனநிறைவு தருவதாக உள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாய பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் போராடுவோம். தேர்தல் வரும் போகும். இந்த இயக்கத்தில் இருக்கின்ற தலைவர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் தான்.
ஆனால் சமூக பிரச்சினை என்று வரும்போது எல்லோரும் ஓர் அணியில் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த நோக்கத்துக்காகத்தான் இந்த அமைப்பு தொடங்கி செயலாற்றி வருகிறது’’என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
இரு மனங்கள் ஒன்றுபடும் காதல் புனிதமானது. அது போன்ற காதல் திருமணங்களுக்கோ, கலப்பு திரும ணங்களுக்கோ தடை போடுவது நாகரீக சமுதாயத்தில் சரியானது அல்ல.
என்றாலும் காதல் என்ற பெயரில் நடைபெறும் மோசடி நாடகங்களை தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். அதற்கு முன்பாக இது போன்ற திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயம் ஆக்க வேண்டும். இல்லையென்றால் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வரும்படி, ஜனாதிபதி, மற்றும் பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்தி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும். தேவர் குருபூஜைக்கு 144 தடை உத்தரவு போடக்கூடாது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
2 கருத்துகள்:
அனைத்து சமுதாய பேரியக்க கூட்டத்ல் கலந்துகொண்டு பங்குபெற்றதர்கு மிக்க நன்றி அண்னா அவர்கலுக்கு.
ஆணால் நமது சமுதாயத்திர்கு பயன் படும் வகயில் தீர்மானங்கல் ஏதேனும் நிரைவேற்றபட்டதா....?
கருத்துரையிடுக