ஈரோடு சூரம்பட்டிவலசு சுயம்பு மாரியம்மன் கோவில் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
சுயம்பு மாரியம்மன் கோவில்
ஈரோடு சூரம்பட்டிவலசில் பிரசித்திப்பெற்ற சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 24–ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கம்பம் நடும் விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
தீர்த்தக்குட ஊர்வலம்
இந்த நிலையில் தமிழ்நாடு முத்தரையர் நல சங்கத்தின் சூரம்பட்டிவலசு கிளையின் சார்பாக முதலாம் ஆண்டு தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதற்காக ஏராளமான பக்தர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்றனர்.
அங்கு புனித நீராடினர். பின்னர் தீர்த்தக்குடத்தை தலையில் வைத்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஓம் சக்தி தாயே, பராசக்தி தாயே, சுயம்பு தாயே‘ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
News Source : DINATHANTHI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக