முத்தரையர் உறவின்முறை சங்கம்
மாற்றம்,
முன்னேற்றம்,
ஒற்றுமை
என்று
தொடர்ந்து
நாம்
பேசியும்,
எழுதியும்
வருகிறோம்
இதற்க்காக
ஆக்கப்பூர்வமான
எதாவது
செய்ததுண்டா... ?
ஒரு
வகையில்
நம்முடைய
பொறுப்புகளில்
இருந்து
தப்பித்துக்கொள்ள,
நம்முடைய கடமையை செய்யாமல் இருக்க இனத்தின் மூத்த தலைவர்களை குறை
கூறிக்கொண்டே இருக்கிறோம் ஆனால் நாம் செய்யவேண்டிய குறைந்த
பட்ச பணிகளைக் கூட செய்வதில்லை...!.... நான் சில ஆண்டுகளுக்கு முன்னால்
உங்கள் முன் வைத்த ஒரு விசயத்தை கடந்த வாரம் மீண்டும் உங்களுக்கு
நினைவுப்படுத்தினேன் இருந்தாலும் வழக்கம்போல சகோதரர் சிங்கதமிழன், மற்றும்
தம்பி மகேஷ் தவிர மற்றவர்கள் ஒரு லைக் கொடுத்துவிட்டு
போய்விட்டீர்கள்,
மாற்றம்
வேண்டும் என்றால் ஒரே நாளில் நம்முடைய எந்த முயற்சியும் இல்லாமல்
ஏற்பட்டுவிடாது
என்பது நீங்கள் அறியாதது அல்ல, ஆனால் துரதிஷ்டவசமாக அப்படியான மாற்றத்தை
மட்டுமே நாம் எதிர்பார்க்கிறோம், இது வழக்கமாக தமிழ் சினிமாவில் கதாநாயகன்
இரண்டு மணி நேரத்தில் அடையும் வளர்ச்சியைப்போன்றதாக இருக்கவே நம்மில்
பலரும் நினைக்கிறோம், நூற்றுக்கணக்கான இனங்கள் இங்கே
நம்மோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள், அதில் பலரிடமிருந்தும் நாம்
கற்றுக் கொள்ள வேண்டிய ஒராயிரம் விசயங்கள் இருக்கிறது, உதாரணத்திற்க்கு
இங்கு இரண்டு, மூன்று சமூகங்களை எடுத்துக்கொள்கிறேன், முதலில்
கள்ளர் சமூகம்
ஒற்றுமை
என்பதற்க்கு அடையாளமாக இருக்கிறது, நல்லவர்களா..? கெட்டவர்களா ?? என்ற
ஆராய்ச்சியைவிட அவர்கள் அமைப்புமுறையை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும்,
அவர்களிடம் பெரும்பாலும் பங்காளி சண்டைகள் அதிகம் என்றாலும் அவர்களிடம்
இருக்கும் அமைப்பு வலுவானது. (இதுபோன்ற அமைப்பு முறையை
கொண்ட வடமாநில ஜாட் இனத்தை பற்றி ஏற்கனவே ஒரு பதிவிட்டு இருக்கிறேன்
தேடிப் பாருங்கள்)
கள்ளர்கள் வாழும் பல
ஊர்கள்
இணைந்தது
ஒரு
நாடு
எனவும்,
பல
நாடுகள்
இணைந்தது
ஒரு
கோட்டம் (அ)
வளநாடு
என்றும்,
பல
கோட்டம் (அ)
வளநாடு
இணைந்தது
ஒரு
மண்டலம்
என்றும்
அமைப்பு
இருக்கிறது,
இதில்
பல
ஊர்கள்
இணைந்த
நாட்டுக்கூட்டத்திற்க்கு
தலைவரையே "அம்பலம்"
என்கிறார்கள்.
பெரும்பாலான
நாடுகளுக்கிடையேயான
பிரச்சனைகளை
நாட்டுக்கூட்டத்தின்
தலைவர்கள்
கூடி
பேசி
தீர்வினை
காணுகின்றார்கள்,
இதில்
பெரும்பாலும்
பிரச்சனைகளை
தீர்ப்பதும்,
பிரச்சனை
வராமல்
தடுப்பதும்தான்
இந்த
அமைப்பின்
பலன், இந்த அமைப்பு முறையை இவர்கள் நீண்டகாலம் வைத்துள்ளதால் ஒட்டுமொத்தமாக இனத்திற்க்கு வரும் பிரச்சனைகளை எளிதான கையாள முடிகிறது.
ஆனால்
இதைவிட
சிறப்பான, வலுவான அமைப்புமுறைதான் "
நாடார் உறவின் முறை சங்கம்"
என்பது, கடந்த நூறு வருடங்களுக்குள்ளாக ஒரு அமைப்பாக திரளவும், யாருமே
எதிர்பாராத அளவிற்க்கு இந்த சமூகம் அசூர வளர்ச்சியடையவும் இவர்கள் அமைத்த
"உறவின் முறை சங்கங்கள்" தான் காரணம், இன்னும் நாம் நம்மிடையே இருக்கும்
குறைகளைப் பற்றி, உட்பிரிவுகளின் உயர்வுதாழ்வு பற்றி
பேசிக் கொண்டு திரிகிறோம். இதே நிலை நீடித்தால் இன்னும் நூறு
வருடங்களுக்கு நாம் வெறும் வாய்சொல் வீரர்களாய்தான் இருப்போமே தவிர வளர்ந்த
சமூகமாக இருக்க மாட்டோம். வளர்ச்சியை எப்படி ஏற்படுத்துவது என்பதை
நாம்தான் சிந்திக்க வேண்டுமே தவிர நமக்காக யாரோ சிந்தித்து நம்மை
வளர்த்துவிட வர மாட்டார்கள், இந்த
உறவின்
முறை
சங்கங்கள்
தோற்றிவித்ததுதான்
இன்று
தமிழகம்
மட்டுமல்ல
இந்தியா
முழுவதும்
கிளை
பரப்பி
நிற்க்கும் "தமிழ்நாடு
மெர்கண்டைல்
வங்கி"
அந்த
சமூகத்திற்க்கு
மட்டுமே
உரியதாக
இருக்கிறது
அந்த
வங்கியின்
இன்றைய
சந்தை
மதிப்பு
ரூபாய் பணப்பரிவர்த்தனை 13 ஆயிரம் கோடி ஆகும்.
இது
வெறும்
வாய்ப்பேச்சால்
வந்ததல்ல…..
உழைப்பு,
ஒருங்கிணைப்பு,
ஒற்றுமை
இவற்றிற்க்கு
கிடைத்த
வெற்றி..!
இதே
போன்றே
வெறும்
பத்து
கிராமங்களில்
வசிக்கும்
நம்
மக்களின்
எண்ணிக்கையின்
அளவுகூட இல்லாத ஒரு சமூகம்
" நாட்டுக்கோட்டை செட்டியார்கள்",
ஆம் நாட்டுக்கோட்டை (அ) செட்டிநாட்டின் வெரும் 76 கிராமத்திலிருந்து
புறப்பட்ட ஒரு இனம்தான் இன்று தமிழகத்தின் பெரும் நிலங்களை தங்கள் வசம்
வைத்துள்ளது அதுமட்டுமா..? இந்திய நிதித்துறையே (ப.சிதம்பரம்)
அவர்களிடம்தான் இருக்கிறது, இவர்களைப்பற்றி சொல்ல வேண்டுமானால்
இந்த கட்டூரை போதாது, உதாரணத்திற்க்கு அண்ணாமலை பல்கலைக் கழகம்
தோற்றிவித்தவர்கள் இவர்கள்தான், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானமும்
இவர்கள் உருவாக்கியதுதான். நம்முடைய சரித்திரத்திலிருந்துதான் நாம் எதுவும்
கற்கவில்லை, சரி சக சமூகங்களில் இருந்து எதை நாம் கற்றோம்
?
பெருமைக்காக
வாழ்வது
வேறு,
பெருமைப்பட
வாழ்வது
என்பது
வேறு,
நேரடியாகவே
கேட்கிறேன் "
நீங்கள்
யார்?"
யாரிடமாவது
பதில்
இருக்கிறதா...?
இதற்க்கு
பதிலை
நாம்
இன்னும்
ஆயிரத்தி
முன்னூறு
வருடங்களுக்கு
முன்பான
நம்
வரலாற்றை
சொல்லிக்கொண்டு
வாழ்கிறோம்,
"வரலாறு
என்பது
கடந்தகால
அரசியல்,
அரசியல்
என்பது
தற்போதைய
வரலாறு"
என
பிரிமென்
என்ற
அரசியல்
அறிஞர்
சொல்கிறார் ஆக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயங்கக்கூடாது, இன்றைய செயல்கள்தான் நாளைய வரலாறு.
நம்மால்
என்ன முடியுமோ அதைதான் நான் செய்யச் சொல்கிறேனே தவிர, முடியாத விசயத்தை
அல்ல
நீங்கள் வசிக்கும் தெருவிலோ, கிராமத்திலோ இணைய முடியாமல் உலகம் முழுவதும்
இணைந்து செயலாற்ற நினைப்பது எவ்வளவு சரி என்பதை நீங்களே முடிவு செய்துக்
கொள்ளுங்கள்.
எப்படி
இதனை கட்டமைப்பது என்பதைப்பற்றி விரிவான ஒரு பதிவினை தனியே பதிவிடுகிறேன்,
அதில் இருக்கும் நிறைகளை எடுத்துக்கொண்டு குறைகளை சொல்லுங்கள்,
நாமும் ஜெயிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்...
என்றும் உங்கள்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக