புதன், 19 மார்ச், 2014

விழித்துக்கொள்ளுங்கள் தஞ்சை மண்ணின் மைந்தர்களே...



எம் பாட்டன் தனஞ்சய முத்தரையன் உருவாக்கிய தஞ்சாவூர் நகரம் இன்று தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது, இவர்கள்தான் இன்று ஒட்டுமொத்தமாக தஞ்சாவூர் மாவட்டத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள், இவர்களின் கண் அசைவில்தான் இங்கிருக்கும் அத்தனை மக்கள் பிரதிநிதிகளும், இன்னும் சில இடங்களில் இவர்களே மக்கள் பிரதிநிதிகளாகவும் (!?) இருக்கிறார்கள் இந்த கல்வி நிறுவனங்கள் எதுவும் தஞ்சை மக்களின் நலத்திற்க்காக நடத்தப்படுபவை இல்லை, இன்னும் சொல்லப்போனால் இந்த கல்வி  நிறுவனங்களில் தஞ்சை மாவட்டத்திலிருந்து கல்வி பயிலும் மாணவர்கள் வெறும் 20 முதல் 25 % மட்டுமே...! 
முன்பெல்லாம் யாரேனும் புதிதாக தஞ்சை மாவட்டத்தின் எந்த பகுதியில் நுழைந்தாலும், பசுமை போர்த்திய தஞ்சையின் அழகில் மயங்கிதான் போவார்கள், ஆனால் இன்றோ...? தஞ்சை மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும் இருந்த (!?) வயல்வெளிகள் மொத்தமும் வளைக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன....! இப்படியே போனால் இன்னும் சொச்சம் இருக்கும் விவசாயபூமியும் இந்த கலவாணிகளால் கைப்பற்றப்பட்டு, விவசாயம் என்பதை பாடத்தில் படிக்கும் நிலைக்கு தஞ்சை மாவட்ட மக்கள் தள்ளப்படுவார்கள்..

விழித்துக்கொள்ளுங்கள் தஞ்சை மண்ணின் மைந்தர்களே...

மக்கள் சேவையில்.... இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக