செவ்வாய், 11 மார்ச், 2014

திராவிட கட்சிகளின் சாமர்த்தியம்..!

திராவிட கட்சிகளின் சாமர்த்தியம்..!

    திராவிடகட்சிகள் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தி இருக்கிறார்கள், மிகுந்த போராட்டத்திற்க்கு பிறகு ஒரெ ஒரு தொகுதியை இருபெரும் கட்சிகளும் "முத்தரையர்" சமுகத்திற்க்கு ஒதுக்கி இருக்கிறது, தோற்றாலும் ஜெயித்தாலும் நீங்களே என்பதுதான் இந்த நிலைப்பாட்டின் நோக்கம், இதில் நிச்சயமாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி முத்தரையர் மக்களுக்கு கிடைத்திருப்பது ஒரு நல்ல வாய்ப்பாகவே நான் கருதுகிறேன், ஒரெ ஒரு வாய்ப்பாக இல்லாமல் இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது, இதில் சிறந்ததை தேர்ந்தெடுப்பது அவர்களின் விருப்பம் சார்ந்தது,  அதே நேரத்தில் கட்சி சார்பானவர்கள் ஒருவரை பற்றி ஒருவர் தவறான பிரச்சாரத்தை முன்னெடுப்பதை முடிந்த அளவிற்க்கு தவிர்த்துவிடுங்கள், இதில் யாரை நாம் ஆதரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை இருவருமே நமது உறவினர்கள்தான், யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சிதான்... !

     ஆகவே சரி தவறை எடைபோடும் வாய்ப்பை அந்த தொகுதியில் இருக்கும் மக்களே முடிவு செய்துக்கொள்ளட்டும், அதே நேரத்தில் வாய்பளிக்கவில்லை, வாய்பளிக்கவில்லை என்று கூப்பாடு போட்டுவிட்டு கிடைத்த வாய்ப்பை கோட்டைவிடும் வழக்கத்தை எனதருமை சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நம்சமூகம் பெரும்பாண்மையாக வாழும் தொகுதிகளில் இதே போன்று அனைத்துகட்சிகளும் அனைத்து தேர்தல்களிலும் வாய்பளிக்க வேண்டும், அதற்க்கு இப்போது நாம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர வேண்டும், முடிந்த அளவு பெரம்பலூரை ஒட்டி இருக்கும் திருச்சி, கரூர், நாமக்கல், அரியலூர் மாவட்ட உறவுகள் களப்பணிக்கு செல்ல வேண்டும், திமுக சார்பில் போட்டியிடும் சகோதரர் சீமானூர் பிரபு அவர்களுக்கும், அதிமுக சார்பில் போட்டியிடும் திரு. மருதைராஜா அவர்களுக்கும் "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

வாழ்த்துக்களுடன்...
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக