ஊர்வலத்திற்கு தடை
பாலமேடு : பாலமேடு அருகே சரந்தாங்கியில்,
முத்தரையர் ஜெயந்தி விழா ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்தனர். அலங்காநல்லுார் கேட்
கடையில் இருந்து முத்தரையர் அமைப்பினர், ஊர்வலமாக சென்று சரந்தாங்கி பெரும்பிடுகு சிலைக்கு
மாலை அணிவிப்பது வழக்கம். இந்தாண்டு சமுதாய பிரச்னை எழும் அபாயம் இருப்பதால், போலீசார்
அனுமதி வழங்க மறுத்து விட்டனர். பல நிபந்தனைகளையும் விதித்தனர். இந்த அமைப்பினர் ஊர்
எல்லையில் இருந்து சென்று சிலைக்கு மாலை அணிவித்தனர். டி.எஸ்.பி., காந்த சொரூபன் தலைமையில்
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
News Source : DINAMALAR
முத்தரையர்
பதிலளிநீக்குமுத்தரையர் என்னும் பெயர் வாய்ந்த பண்டைக் குலம்
ஒன்று பழந் தமிழ் நூல்களிலே பேசப்படுகின்றது.
அவரும் சிறந்த படைவீரராக விளங்கினார். அக்குலத்தைச்
சேர்ந்த வள்ளல்களின் பெருமையை நாலடியார்
என்னும் பழைய நீதி நூல் பாராட்டுகின்றது. அன்னார்
குணநலங்களை வியந்து, “முத்தரையர் கோவை” என்ற
நூலும் இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது. சாசனங்களில்
சத்துரு பயங்கர முத்தரையன், பெரும் பிடுகு
முத்தரையன் முதலியோரின் வீரச் செயல்கள்
குறிக்கப்படுகின்றன.
இராமநாதபுரத்திலுள்ள முத்தரசன் என்னும் ஊரும்,
தஞ்சை நாட்டிலுள்ள முத்தரசபுரமும்
திருச்சி நாட்டிலுள்ள முத்தரச நல்லூரும்
நமது பெருமையை காட்டுகிறது . காூட்டுகிறது.வாழ்க மன்னர்