திங்கள், 26 மே, 2014

ராமேசுவரத்தில் இலவச ரத்த தான முகாம்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1339 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு முத்தரையர் கல்வி மேம்பாட்டு இயக்கம் மற்றும் மதுரை ராஜாஜி மருத்துமனை ரத்த வங்கி குழு சார்பில் இலவச ரத்த தான முகாம் ராமேசுவரம் அரசு மருத்துமனையில் நடைபெற்றது.

முகாமை ராமேசுவரம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி அங்காரெட்டி துவங்கி வைத்தார். முகாமில் 9 பெண்கள் உள்பட 75 மீனவர்கள், கட்டடத் தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் பிரபா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், ராமேசுவரம் அரசு மருத்துவமனை மருத்துவர் வருண்பிரசாத், முத்தரையர் கல்வி மேம்பாட்டு இயக்கத்தின் நிர்வாகிகள் சுந்தர்ராஜன், இளமுருகு, காளிதாஸ், பிரேம்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

News Source : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக