புதன், 25 ஜூன், 2014

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சதி..!!



தமிழக அரசு தனி அரசாணை வெளியிட்டு 29 உட்பிரிவுகளையும் இணைத்து ஒரே சாதியாக "முத்தரையர்" என்று அறிவித்திருக்கும்போது சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி பெயராக "முத்தரையர்" என்று பதிவு செய்திருந்ததை கணக்கெடுப்பிற்க்கு பிறகு அரசு அதிகாரிகள் திருத்தம் செய்து "உட்பிரிவுகளின்" பெயர்களையே சாதியாக பதிவு செய்திருக்கிறார்கள், இது யாரால் திட்டமிடப்பட்டது ? என்பது புரியவில்லை...! ஒரே பெயரில் நாங்கள் இணைவதால் யாருக்கெல்லாம் சங்கட்டம் வரும் என்பது ஆய்விற்க்குறியது.., இப்போதும் திருத்தியவர்கள் நமது உட்பிரிவைதான் எழுதினார்களா..? அல்லது வேறு சாதிகளாக பதிவு செய்திருக்கிறார்களா ? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்..

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு இதர அனைத்து தகவல்களையும் வெளியிடும் அரசு, சாதிவாரியான கணக்கை வெளியிடாமல் இருக்கும் மர்மத்திற்க்கும் இப்போது முத்தரையர் சமூகத்தை ஒரே பெயரால் பதிவு செய்யாமல் தவிர்த்ததிற்க்கும் எதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் வருகிறது.

- சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக