அய்யா பழ. நெடுமாறனுக்கு ஒரு கடிதம்...!
"தமிழர் தேசிய முன்னணி" என்ற புதிய அரசியல் கட்சி
துவங்கி அதன் தலைவராக பொருப்பேற்க்கும் தங்களுக்கு "இளம் சிங்கங்களின் எழுச்சி
இயக்கத்தின்" சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதன் துவக்கவிழாவில் "சாதிசங்கங்களில்" இருப்பவர்களையும்,அது
தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களையும், தமது பெயரோடு சாதிய பட்டங்களை இணைத்தவர்களையும்,
இந்த இயக்கத்தில் இணைத்துக்கொள்வதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள் நல்ல விசயம், இந்த
நிலைபாட்டை நீங்கள் இன்று "சாதியாளர்களிடமிருந்து" நிதிபெற்று துவங்கி இருக்கும்
கட்சியில் இருந்து சொல்லுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது,
60 க்கும் மேற்பட்ட இயக்கங்களை இணைத்து துவங்கி இருக்கும்
இந்த பயணம் எதை நோக்கியது ? வழக்கம்போல இங்கு போலி திராவிட சித்தாந்தம் தாங்கிய
"சாதி மறுப்பு" எனும் பொய்யான வேசம்தான், நீங்கள் ஈழப்பிரச்சனைகளுக்கு பிறகு
அரசியலில் தங்கி இருக்க கிடைத்திருக்கும் ஆயுதமா..?
நீங்கள் எடுக்கவிரும்பும் இந்த ஆயுதம் துருபிடித்த திராவிட
சிந்தாந்த பிதாமகன் "இராமசாமி நாயக்கர்" தொடங்கி பலராலும் கையாளப்பட்டு
"தமிழனின்" கலாச்சாரத்தை மட்டும் பதம்பார்த்துவிட்டு, அவரவர் சார்ந்த சாதியை
வழப்படுத்திவிட்டு ஒழிந்துகொண்டுவிடுகிறது, அதன் தொடர்ச்சியைதான் இன்று நீங்கள் கையிலெடுத்து
இருக்கிறீர்கள் அதே மறைமுகமான "சாதிபற்றாளர்களின்" துணையுடன்.
உங்களுக்கு உண்மையில்
துணிவிருந்தால், உங்களோடு இணைந்திருப்பவர்கள் அனைவரும் நீங்கள் சொல்லியிருக்கும் இந்த
கருத்தில் உடன்பட்டவர்களாக இருந்தால், அவரவர் குடும்பத்தாரின் கைகளில் இருக்கும்
" சாதி சான்றிதழ்களை" கொண்டுவர செய்து பத்திரிக்கையாளர்கள், பொதுவானவர்கள்
முன்னிலையில் அதனை அழித்துவிடுங்கள் உங்களை நேர்மையாளராக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
எல்லாவற்றிற்க்கும் மேலாக "சாதிமறுப்பு திருமணங்களை
ஊக்குவிக்க போவதாகவும்" சொல்லியிருக்கிறீர்கள் நாங்களும் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறோம்,
உங்களோடு இணைந்து இந்த இயக்கத்தில் பயணிப்பவர்களின் குடும்பத்தாரின் பட்டியலை, பொதுவில்
வெளியிடுங்கள், சாதிமறுப்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அந்த பட்டியலில் இருப்பவர்கள்
குடும்பத்தில் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ ஆயிரமாயிரமானவர்களை "சாதியை" மறுக்கவைத்து
நாங்கள் கொண்டுவந்து உங்கள் முன்னால் நிறுத்துகிறோம்...
முடிவாக வீழ்ந்துவிட்ட திராவிடத்தின் உப்புசப்பற்ற ஒரு விசயத்தை
கையிலெடுத்து அரசியலில் உங்கள் நிலை நிறுத்திக்கொள்ளலாம் என்று பகல்கனவில் திளைக்கவேண்டாம்
என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
தங்கள்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக