சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதிதுவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்கிட வலியுறுத்தி வழக்கறிஞர் போராட்டம் : முத்தரையர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திட முன்வர வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 60 நீதிபதிகளில் காலியாகவுள்ள 18 நீதிபதிகளை இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு "முன்னுரிமை" கொடுத்து நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த வாரம் தொடங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மையில் போராட வேண்டிய, சென்னை உயர் நீதிமன்றத்தின் கடந்த 150 ஆண்டு கால வரலாற்றில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, ஒரு முறைகூட வாய்பளிக்கப்படாத சமூகமான "முத்தரையர்" சமூகத்தில் இருந்து போராடவோ, போராட்டத்திற்க்கு துணை நிற்கவோ இதுவரை எந்த சங்கமோ, தனி நபர்களோ முன்வராதது கவலை தரக்கூடிய விசயம். அந்த வழக்கறிஞர்கள் யாருக்காக போராடுகிறார்கள்..? நமக்காக இல்லையா..? அவர்களின் போராட்டத்திற்க்கு எந்தவகையில் நாம் உதவியிருக்கிறோம்..?
இது வழக்கறிஞர்களுக்கான போராட்டமோ, வேறு யாருக்கான போராட்டமோ கிடையாது, வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டமான மாறிட வேண்டும், குறிப்பாக "முத்தரையர்கள்" மற்றும் முத்தரையர் சமூக சங்கங்களின் போராட்டாமாக மாறிட வேண்டும், கடந்தமுறை 12 நீதிபதிகள் நியமனத்தின்போது "தினமணி" நாளிதழ்கூட நமக்காக எழுதி இருந்தது, அப்போதும் நாம் விழித்துக்கொள்ளவில்லை, இப்போது 18 நீதிபதிகள் நியமனத்திலாவது நாம் பெற முடியாமலே இருக்கும் உரிமையை பெற்றிட போராட முன்வர வேண்டும், சங்கம் என்றால் ஊருக்கு ஊர் கொடி ஏற்றுவதும், வீரவசனம் பேசிடுவதும், தேர்தலுக்கு தேர்தல் தலைகாட்டுவதும், வெற்றுபெருமை பேசுவதுமாக இல்லாமல், இழந்த உரிமையை போராடி பெற்றிட முன்வர வேண்டும். இதுதொடர்பாக எந்த சங்கம் எங்கே போராட்டம் நடத்தினாலும் நான் கலந்துகொள்ள தயாராகவே இருக்கிறேன், விரைவில் நான் சார்ந்த பகுதியில் போராட்டத்தை முன்னெடுக்கவும் முயற்சி செய்வேன்.
அதேபோல சமூக நீதிக்காக போராடும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எனது/எங்களது முழுமையான ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது நமக்கான போராட்டம்..!!
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக