வினவு எனும் புரட்டு புரட்சியாளர்களே..! இங்கே அரசியல் கட்சிகளின் மீதான உங்கள் குற்றசாட்டுகளை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும் அதே நேரம் பொய்யையும், புரட்டையும் "புரட்சி" என்ற பெயரில் மக்களிடையே வன்மத்தையும், துவேசத்தையும் தூண்டிவிடுவதை வழக்கமாக கொண்ட நீங்கள், எதோ எழுத வேண்டும் என்பதற்காக ஒடுக்கப்பட்டு, அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டு வாழும் ஒரே சமூகமாக இருக்கும் "முத்தரையர்கள்" மீது நீங்கள் வைக்கும் அபாண்டமான குற்றசாட்டு "தலித் மக்கள் வாழும் கிராமங்களில் தனிசுடுகாடு, தனிபாதை, ஊருக்குள் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது போன்ற சாதிக் கட்டுப்பாடுகளை வன்மமான முறையில் அமல்படுத்துவதும், எதிர்த்து கேட்டால் கலவரம் செய்வதும்" என்று எழுதி இருக்கிறீர்கள், இது உண்மை என்று நீங்கள் நிரூபிக்க முடியுமா..? பகிரங்கமாகவே சவால் விடுக்கிறோம், ஒரு பொய்யை, உங்களுடைய உண்டியல் வருமானத்திற்க்காக பரப்பும் "வினவு" ஸ்ரீரங்கத்தின் எந்த கிராமத்தில் இப்படி ஒரு நிலை இருக்கிறது ? என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க முன்வர வேண்டும், நீங்கள் ஏழை மக்களை சுரண்டி பிழைக்க கடைநிலை மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்காமல், நீங்கள் பிழைப்பு நடத்த வேறு தளங்களை தேர்வு செய்துக்கொள்வது நலம்.
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
http://www.vinavu.com/2015/02/13/srirangam-by-elections-campaign-exposing-pseudo-democracy/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக