நன்றி..! நன்றி..!! நன்றி..!!!! எத்தனைமுறை சொன்னாலும் போதாது எனதருமை திருவரங்கம் மக்களுக்கு..
இந்த தேர்தலைப் பொருத்தவரை என்னஎன்னவோ பிரச்சனைகளை முன்னிருத்தி பலரும் பிரச்சாரம் மேற்கொண்டனர் ஆனாலும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் குறிப்பாக "முத்தரையர்" மக்கள் தெளிவான சிந்தனையோடு, ஒற்றை நோக்கோடு இன்று மாபெரும் வெற்றியினை அதிமுக வேட்பாளர் திருமதி. வளர்மதிக்கு வழங்கி இருக்கிறார்கள், அந்த வகையில் ஸ்ரீரங்கம் தொகுதி முத்தரையர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அறிவித்தவுடன் திமுகவின் வேட்பாளராக அண்ணன் திரு.ஆனந்தை அறிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் அதிமுக வேட்பாளராக இருந்து இன்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கக்கூடிய சகோதரி திருமதி.வளர்மதிக்கு வாழ்த்துக்களையும், இவரை வேட்பாளராக அறிவித்திட்ட அதிமுக பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதாவுக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் மக்கள் யாரை விரும்புகிறார்கள் அல்லது அவர்கள் மனநிலை என்ன ? என்பதை அறியாமல் தேர்தல் களத்திற்க்கு வந்தால் இன்று டெபாஸிட் இழந்து மண்ணை கவ்விய பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் நிலைதான் ஏற்படும் என்பதை தெளிவாக எடுத்துரைத்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதுமானதாக இருக்காது.
முதலிடம் பிடித்தவரும், இரண்டாம் இடத்தை பெற்றவரும் "முத்தரையர்" மட்டுமே, இதன்பொருள் எந்த கட்சியாக இருந்தாலும் வேட்பாளர் எங்கள் சமூகத்தவரா ? என்பதை மட்டும் கவனித்து இரண்டு கட்சிகளுக்கு மட்டும் வாக்குகளை செலுத்தி தமிழகம் முழுவதும் பரந்துபட்டு வாழும் "முத்தரையர்" மக்களுக்கு ஒரு செய்தியை உறுதியாக, உறைக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள், "எனதருமை முத்தரையர் பேரினமே ஸ்ரீரங்கத்தில் இருக்கும் நமது உறவினர்கள் சொல்லி இருக்கும் செய்தி உங்களுக்கு புரிகிறதா..? புரிந்துக்கொண்டால் அடுத்த 2016 சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 40 உறுப்பினர்கள் சட்டமன்றம் செல்லமுடியும், உறங்காதே முத்தரையா..! விழித்துக்கொள்" இதுதான் நம் ஸ்ரீரங்கம் உறவுகள் நமக்கு சொல்லி இருக்கும் செய்தி..!
இன்று டெபாஸிட் என்ன..? ஐந்து இலக்கத்திலோ, நான்கு இலக்கத்திலோ வாக்குகளை பெற தகுதியற்ற "அரசியல் அநாதைகள்" பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களும் தெரிந்தே அந்த தொகுதியின் பெரும்பாண்மை இனத்தை உதாசினப்படுத்தி, "முகவரி இல்லாதவர்களை" வேட்பாளராக அறிவித்து மறக்கமுடியாத துரோகத்தை எளிதாக செய்தார்கள், அவர்களுக்கு சம்மட்டியாலும், சாட்டையாலும் அடித்து சுய உணர்வு வரவைத்தமைக்காக திருவரங்கம் முத்தரையர் மக்களுக்கு ஒரு "ராயல் சல்யூட்"
தமிழ், தமிழர் பிரச்சனைகளில் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் துரோகத்தை மட்டுமே செய்த, செய்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று ஒரு ஆயிரம் ஓட்டுகள்கூட பெற முடியாமைக்கு, இவர்கள் முல்லைப்பெரியார், நியூட்ரினோ, கூடங்குளம் அணுஉலை, ஈழத்தமிழர் பிரச்சனைகளோடு பெரும்பாண்மை சமூகத்திற்க்கு அவர்கள் செய்ய முயன்ற துரோகமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது, இவர்களின் போலி முகத்தை எளிதாக அடையாளம் கண்டுகொண்ட திருவரங்கம் மக்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி..!
அதேபோல எவனோ ஒரு பினாமியை வேட்பாளராக அறிவித்து பெரும்பாண்மை மக்களுக்கு துணிந்து துரோகம் செய்திட முனைந்த பாரதிய ஜனதா கட்சிக்கு "முகத்தில் கரி" பூசிவிட்டிருக்கிறார்கள் திருவரங்கம் மக்கள், அந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க ஒரு முத்தரையர் கூடவா கிடைக்கவில்லை இந்த காவிகளுக்கு..? எவ்வளவு நெஞ்சலுத்தம்..? எவ்வளவு கீழ்தரமாக எமது மக்களை எடைபோட்டார்கள்..? நீங்கள் மத்தியில் அல்ல, உலகையே ஆண்டாலும் பெரும்பாண்மை இனமான "முத்தரையர்களை" புறக்கணித்தால் மண்ணை கவ்வுவது உறுதி அதுவும் மிகவும் மலிவான எண்ணிக்கையிலேயே வாக்குகளை பெற முடியும் இனியும் பெரும்பாண்மை மக்களுக்கு துரோகம் செய்ய நினைத்தால், புல்லையும், பூண்டையும் போல அழிந்துபோவீர்கள் என்றே இந்த நேரத்தில் எச்சரித்து இருக்கிறார்கள்.
வாருங்கள் முத்தரையர்களே..! பெருமையோடு கொண்டாடுவோம் நமது சகோதரியின் வெற்றியை..!! அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், நமக்கு அவர் உறவினர் அதைவிட வேறு எதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை இன்று ஐந்தாவது முத்தரையராக சட்டமன்றம் செல்லும் திருமதி. வளர்மதிக்கு வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்...!!!
வாழ்த்துக்களுடன்..
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக