புதன், 25 மார்ச், 2015

சதீஷ் சிவலிங்கம்

எனதருமை முத்தரையர் உறவுகளே..!

சதீஷ் சிவலிங்கம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தபோது அவர் "முத்தரையர்" என்று எல்லோருமே பெருமிதம் கொண்டோம், அத்தோடு நமது கடமை முடிந்து விடவில்லை அந்த பெருமைமிகு முத்தரையனுக்கு நம்முடைய ஆதரவினை தொடர்ந்து தெரிவித்திட வேண்டியது அவசியம் என்பதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதல்ல.. ! எந்த வகையில் நாம் ஆதரவளிக்க முடியும் என்பதை தெரிவிக்கவே இந்த பதிவு.

 டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் 2015 ஆம் ஆண்டிற்க்கான "விளையாட்டு விருதுகளுக்கான" வாக்கெடுப்பினை நடத்துகிறது இதில் நாம் நமது வீரனுக்கு வாக்களிக்க வேண்டும்  http://m.timesofindia.com/sports-awards/toisa_home.cms/   இந்த லிங்கில் உள்ளே சென்று Select a Category  என்பதில் Weightlifting என்பதை தேர்வு செய்து Sathish Sivalingam என்ற பெயருக்கு முன்பு உள்ள VOTE என்ற பட்டனை அழுத்தி வாக்களிக்க வேண்டும்.

இந்த தகவலை பேஸ்புக், வாட்ஸ் ஆப் என்று எல்லா தளங்களிலும் உள்ள முத்தரையர்களிடம் கொண்டு செல்ல வேண்டும், நாம் செய்யாமல் நமது வீட்டு பிள்ளைக்கு வேறு யார் செய்வார்.. ?

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

ஞாயிறு, 22 மார்ச், 2015

சிங்கப்பூரின் தந்தை லி குவான் யூ"

வாழ்வில் ஒருமுறையாவது அந்த நாட்டிற்க்கு சென்றுவிட வேண்டும் என்று உழைப்பவர் தொடங்கி, ஊர் சுற்றி பார்ப்பவர்கள்வரை அத்தனை பேருக்கும் கனவு தேசமாக சிங்கப்பூரை மாற்றியவர் "சிங்கப்பூரின் தந்தை லி குவான் யூ" அந்த மாமனிதரின் மனதில் தமிழ் மக்களுக்கு என்று நிறைய இடங்களை வைத்திருந்தார் என்பது கூடுதல் சிறப்பு..!

உடலால் மறைந்தாலும் அவரின் புகழ் வையகமெங்கும் உயிராய் நிறைந்து நிற்க்கும் சிங்கப்பூர் தேசத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.. :(

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

சனி, 21 மார்ச், 2015

சாதியும் நீதியும


// இதில் வேடிக்கை என்னவென்றால் இதில் இருக்கும் 2343 சாதிகளில் 1993 முதல் முத்தரையர் சமூகத்தின் "அம்பலக்காரர், முத்துராஜா, வலையர்களும்" இடம்பெற்று உள்ளனர், ஆனால் அந்த பட்டியலில் இருக்கிறோம், அதில் இருக்கும் வாய்ப்புகளை நாமும் பயன்படுத்தலாம் என்ற விவரம்கூட முத்தரையர்களில் 99% பேருக்கு தெரியாது.

அதே பட்டியலில் தமிழகத்தில் அரசியல், பொருளாதாரம், வேலை என்று அனைத்து துறைகளிலும் முன்னேறிய (இந்த பட்டியல் மூலம் அதிகமான பலன்கள் பெற்றவர்கள்) சாதிகள் இன்னமும் அந்த பட்டியலில் இருப்பதும், பலன்களை முழுவதுமாக அனுபவிப்பதும் கண்கூடு...

#தேவை மறுபரிசீலனை...!

சஞ்சய்காந்தி அம்பலக்காரர் //

சாதியும் நீதியும்

ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்த மார்ச் 4, 2014 அறிவிப்பாணையை உச்சநீதிமன்றம் இரு நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது. பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தனது அறிக்கையில், "ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோராகக் கருத முடியாது' என்று தெரிவித்திருந்தும், அதைப் புறக்கணித்து அறிவிப்பாணை வெளியிட்ட மத்திய அரசின் முடிவு தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பாணை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால், மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ரக்ஷா சமிதி, "இது அரசியல் ஆதாய முடிவு' என்று கூறி உச்சநீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், இந்த அறிவிப்பாணை அரசியல்தனமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணை தொடர்பாக நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபோது, புதிதாகப் பொறுப்புக்கு வந்துள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ஆதரவு தெரிவித்தது. சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் தெரிவித்திருந்த முடிவின் அடிப்படையில், இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது என்று கூறியிருந்தது. எந்த அரசியல் கட்சியும் ஜாட் சமூகத்தினரின் வாக்கு வங்கியை இழக்கத் தயாராக இல்லை.

ஒரு சமூகத்தை பிற்படுத்தப்பட்ட சமூகமாக அறிவிக்க சாதி மட்டுமே போதுமானது அல்ல என்று நீதிமன்றம் கூறியிருப்பதும், பிற்படுத்தப்பட்டது என அரசியல் தலைமை முடிவெடுப்பதாலேயே ஒரு சமூகத்தை பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்க முடியாது என்று நீதிமன்றம் வழிகாட்டியிருப்பதும் இந்த விவகாரத்தில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளன.

மண்டல் குழு அறிக்கை மீதான போராட்டங்கள் 1989-இல் இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்றன. பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்வதில் இந்தப் போராட்டங்கள் அடிப்படையாக அமைந்தன. மண்டல் குழுவின் பரிந்துரையில் இந்திய மக்கள் தொகையில் 52% பிற்படுத்தப்பட்டோர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான், புதிய சாதி அமைப்புகள், புதிய கட்சிகள் தோன்றக் காரணமாகின.

அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு சாதி அமைப்புகள், கட்சிகள் தோன்றி, தங்களைத் தலித்துகளாக, பிற்படுத்தப்பட்டவராக, மிகவும் பிற்படுத்தப்பட்டவராக அறிவிக்க வேண்டும் என்று போராடும் நிலைமை, கடந்த 30 ஆண்டுகளாக அதிகரித்து விட்டிருக்கிறது. இந்த சாதி அமைப்புகள் அல்லது கட்சிகளுக்குத் தனித்து நிற்கும் பலமில்லாதபோதும் இவை குறிப்பிட்ட பகுதியில் தனக்கான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளன. ஆகவே, இந்த அமைப்புகளின் கூட்டணி அல்லது ஆதரவைப் பெற, அரசியல் கட்சிகளும் இவர்களுக்கு ஆதரவாக வாக்குறுதிகளை அளிக்கின்றன.

ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டதாக அறிவிக்கும் அறிவிப்பாணை வெளியாவதற்கு முன்பாகவே, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் பரிந்துரைப்படி, 13 மாநிலங்களைச் சேர்ந்த 115 சாதிகள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டன. பிப்ரவரி 2014-இல் வெளியான இந்தப் பட்டியலில் ஜாட் சமூகம் இடம் பெறாததால் அவர்கள் போராட்டம் நடத்தினர். அதன் பிறகே அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

தேசிய ஆணையத்தின் பரிந்துரைப்படி சேர்க்கப்பட்ட 115 சாதிகளையும் நுட்பமாக ஆய்வு செய்தால் அவற்றில் பெரும்பாலானவை அதற்கான தகுதி உள்ளவை அல்ல என்பதை அறியலாம். அவை அரசியல் காரணங்களுக்காகப் பட்டியலில் சேர்க்கப்பட்டவையாக இருக்கும்.

ஒரு சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதால் அந்தச் சமூகம் அடையும் பலனைவிட, அந்தச் சமூகத்தை வைத்துத் தன்னை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதியும் அவருக்குத் துணை நிற்போரும் மட்டுமே பயன் அடைகின்றனர். சமூகத்தில் இவர்களுக்கு ஆதரவாக நிற்போர் சிலருக்கு பதவி உயர்வு, புதிய பதவியைப் பெற்றுத் தரவும் முடிகிறது. அந்தச் சமூகம் அடையும் பயன் மிகக் குறைவே.

கடந்த ஆண்டு 115 சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த பிறகு, இந்தப் பட்டியலில் இடம் பெறும் சாதிகளின் எண்ணிக்கை 2,343 ஆக உயர்ந்துள்ளது. தற்போதும்கூட, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், சில கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்திலும்கூட, அசாம் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையக் கூட்டம், புதிய சாதிகளை சேர்ப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தியது. இந்த ஆணையம் புதிய சாதிகளை சேர்ப்பதற்கு மட்டும்தானா? பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்து முன்னேறிவிட்டது குறித்து ஆய்வு செய்யாதா?

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், ஒவ்வொரு சமூகமும் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இவர்கள் தொடர்ந்து அதே நிலைமையில்தான் இருக்கிறார்களா? கல்வி வேலைவாய்ப்புகளால் முன்னேறியிருக்கிறார்களா? இவர்களின் சமூக வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டு அளவை அதற்கேற்ப மாற்றியமைப்பதும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கான பட்டியலை திருத்துவதும் காலத்தின் கட்டாயம்.

இல்லையெனில், பயனடைந்த சிலர் மட்டுமே தொடர்ந்து பயனடைவதும், உரிய தகுதி இல்லாதபோதும் அரசியல் காரணங்களுக்காகப் பட்டியலில் சேர்க்கப்படுவதும் தொடரும்!

News source : http://www.dinamani.com/editorial/2015/03/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article2721877.ece

வியாழன், 19 மார்ச், 2015

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டி.எஸ்.பி.,இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகளை மாற்றம் செய்யவேண்டும்


//வெளிமாவட்டங்களில் இருந்து குறிப்பாக வன்னியர், முத்தரையர், கவுண்டர் என தென்மாவட்டங்களுக்கு சம்பந்தமில்லாத அதிகாரிகளை நியமிக்கவேண்டு//

திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டி.எஸ்.பி.,இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகளை மாற்றம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை தாமிரபரணி ஆறு மட்டும் ஒன்றிணைக்கவில்லை. ஜாதிய சிந்தனைகளும், வெட்டுக்குத்துகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் நடக்கிறது. 1986ல் நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டது. 1995ல் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தில் துவங்கிய கலவரம், நெல்லை மாவட்டம் வீரசிகாமணியில் துவங்கிய கலவரம் இன்றளவும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.
ஜாதிய சிந்தனைகள் பெரியவர்களை மட்டுமின்றி பள்ளி மாணவர்களையும் தற்போது ஆட்டிவிக்கிறது. மாணவர்கள் கைளில் ஜாதிக்கலர் கயிறு கட்டுவது துவங்கி, ஊர்எல்லையில் இருக்கும் எரியாத மின்விளக்கு கம்பத்திற்கு பெயிண்ட் அடிப்பது, ஊர்த்திருவிழா கச்சேரியில் ஜாதிப்பாட்டு வரையிலும் ஜாதிபுரையோடிப்போய்விட்டது. 95 கலவரம் அ.தி.மு.க.,ஆட்சியின்போதுதான் ஏற்பட்டது. தற்போதும் அ.தி.மு.க.,ஆட்சியில்தான் கலவரம் எட்டிப்பார்க்கிறது. இரண்டு கலவர காலங்களும் ஏதேச்சையாக ஒரே காலகட்டத்தில் நடந்தாலும் ஜாதிஅரசியலும் ஒரு காரணமாக இருக்கிறது.
அரசாங்கம் என்னவோ ஜாதியை ஓட்டுக்களாக பார்க்கிறது. ஜாதித்தலைவர்களோ கொலைகளின் எண்ணிக்கையை தங்களுக்கு கிடைக்கும் அரசியல் அங்கீகாரமாக பார்க்கிறார்கள். 95ல் ஏற்பட்ட ஜாதிக்கலவரத்திற்கு பிறகு நடவடிக்கை எடுத்த அரசு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றிய டி.எஸ்.பி.,இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகளில் குறிப்பிட்ட நாடார், தேவர்,பட்டியல் இனத்தவர் என முக்கிய மூன்று ஜாதியினரையும் வெளிமாவட்டத்திற்கு அனுப்பிவைத்தனர். இதற்காக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்து நடவடிக்கை எடுத்தது. அப்போது வெளியேறிய நெல்லை, தூத்துக்குடி அதிகாரிகள் தற்போதும் தர்மபுரி, வேலூர்,சென்னை, தஞ்சை என வெளிமாவட்டங்களில் நிம்மதியாக பணியாற்றுகிறார்கள்.
தற்போதும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்று ஜாதியினருக்குள்தான் அதிக எண்ணிக்கையில் மோதல்கள் நடக்கின்றன. எனவே ஒவ்வொரு முறை ஜாதிக்கொலை நடக்கும்போதும் சம்பந்தப்பட்ட அதிகாரியை அனுப்பித்தான் குடும்பத்தை சமாதானப்படுத்துகின்றனர். குற்றவாளிகளை பிடிக்கவும் சம்பந்தப்பட்ட ஜாதி அதிகாரிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் குற்றவாளிகளுக்கு பயம்இல்லாமல் போய்விட்டது. எனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 96ல் அமல்படுத்தியதைப்போல மீண்டும் இரண்டு மாவட்டங்களிலும் கோலோச்சும் ஜாதிஅதிகாரிகளை நியமிப்பதை நிறுத்தவேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து குறிப்பாக வன்னியர், முத்தரையர், கவுண்டர் என தென்மாவட்டங்களுக்கு சம்பந்தமில்லாத அதிகாரிகளை நியமிக்கவேண்டும். இவ்வாறு அமல்படுத்திப்பார்த்தாலே சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். ஐகோர்ட் <உத்தரவின்பேரில் "மனித உரிமை' என பெயர் வைத்த தன்னார்வ அமைப்புகள் மீது போலீசார் வழக்குப்போட்டு கைது செய்தனர். நெல்லையில் அதிலும் ஜாதிப்பார்த்துதான் கைது நடவடிக்கை பாய்ந்தது. ஒரு சிலர் ஜாதிஆதிக்கத்தால் தப்பிக்கொண்டனர். நெல்லையில் எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கும் ஸ்பெஷல் பிராஞ்ச் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களுக்கு கீழாக தங்களின் ஜாதிஆட்களை அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்து நியமித்துக்கொள்கிறார்கள். அவர்களோ உண்மையான தகவல்களை தெரிவிப்பதில்லை. இதனால் எஸ்.பி.,டிஐஜி உள்ளிட்டோருக்கு தேவையான தகவல்கள் கிடைப்பதில்லை. நெல்லையில் உளவுப்பிரிவிலும் கூட ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே நுண்ணறிவுப்பிரிவு(ஐ.எஸ்.,) சிறப்பு பிரிவு(எஸ்.பி.,) உளவுப்பிரிவு (எஸ்பிசிஐடி) என அனைத்து முக்கிய பிரிவுகளிலும் வெளிமாவட்ட அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே 24 மணிநேரமும் கண்காணிப்பும் கவனிப்பும் செலுத்த வாய்ப்புள்ளது.

News source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1209857

கல்லூர் அருகே சமுதாய கொடியேற்ற முயற்சி பொதுமக்கள் சாலை மறியல்

ஆலங்குடி, :  புதுக் கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லூர் அருகே சமுதாய கொடி யேற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமத்தில் கல்லூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட் பட்ட சுதந்திராபுரம் பகுதி யில் காலனி ஒன்று 1973ம் ஆண்டில் உருவாக்கப்பட் டது.  இங்கு இந்தியாவை வம்சாவழியாகக் கொண்டு இலங்கை சென்று வந்தவர்களுக்கு விவசாயத்துக்கும், வீடு கட்டவும் 400 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட் டது. ஒவ்வொரு குடும் பத்தினருக்கும் தலா 3 ஏக் கர் நிலமும், வீடு கட்ட 5 சென்ட் நிலமும் அரசு வழங்கியது. இதையடுத்து, இந்த இடத்தில் இலங்கையில் இருந்து வந்த 135 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். 

இவர்களில் சிலர் இங்கிருந்து பிழைப்புக்காகச் சென் றுள்ள நிலையில் புதி தாக பல்வேறு சமூ கத்தை சேர்ந்தவர்கள் குடி யேறி வசித்து வருகின்ற னர். இந்நிலையில்,  மிகவும் பின்தங் கிய நிலையில் உள்ள மக் களை ஒன்றிணைக்கும் பொருட்டு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங் கக் கிளை யைத் துவக்கிவைக்கவும், கொடியேற்ற வும் நேற்று காலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறிய லில் ஈடுபட்டனர்.இதையடுத்து, கொடி யேற்ற வந்த அச்சங்கத்தை சேர்ந்த நடிகர் ஆர்வி பர தன் கொடியேற்றாமல் அப்பகுதியில் உள்ள நிர்வாகிகளிடம் கலந்துரை யாடி விட்டு சென்றார். இதனால் அங்கு ஏற் பட்ட பரபரப்பை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.


News Source : DINAKARAN

சனி, 14 மார்ச், 2015

முத்தரையர் மேல்நிலைப்பள்ளியில் கல்வி கண்காட்சி


வில்லியனூர், : புதுச்சேரி முத்தரையர்பாளையம் முத்தரையர்மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கல்விக்கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் முத்துராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைமுதல்வர் அனந்தசயனம், தாளாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, டவுன் பிளானிங் சேர்மன் கேஎஸ்பி ரமேஷ் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.  கண்காட்சியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளை வைத்திருந்தனர். இதனை மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு பார்வையிட்டனர். பள்ளி நிர்வாக அதிகாரி நாராயணசாமி நன்றி கூறினார்.

News Source : DINAKARAN

வியாழன், 12 மார்ச், 2015

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியைப் பறிக்காதே!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வற்புறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 25..2.2015 மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால். கனகராஜ், முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எ°. ரஜினிகாந்த், சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு, ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர் பேரவையைச் சார்ந்த செ. விஜயகுமார், அகில இந்திய எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க செயலாளர் கு. கமலக்கண்ணன், சிறுபான்மையினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஜைனூல் ஆபீதீன், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வா. நளினி, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கினி லீயோ மேனுவேல், சி.பி.அய்.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் செல்வி, மனித நேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் மொய்தின் உலவி, வருமான வரித் துறை பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க பொதுச் செயலாளர் கி. குமார், இளந்தமிழர் இயக்கம் சார்பில் செந்தில், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். வழக்கறிஞர் துரை. அருண் தொகுத்து வழங்கினார். மாவட்ட தலைவர் ஜான் மண்டேலா, செயலாளர் உமாபதி, அன்பு தனசேகரன், அய்யனார், ஏசு உள்ளிட்ட மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர். 3.30 மணிக்கு தொடங்கிய ஆர்ப்hபட்டம் 7 மணி வரை தொடர்ந்தது.
தற்போது உயர்நீதிமன்றத்தில் 18 பதவிகள் காலியாக உள்ளன. ஏற்கனவே தலைமை நீதிபதி, இரண்டாவது நிலையில் உள்ள நீதிபதி உள்பட 7 பார்ப்பன நீதிபதிகள் உள்ளனர். இப்போது புதிதாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலும், பார்ப்பனர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் 50 வயதுக்குட்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை எட்டுவதற்கான கால வாய்ப்பை உருவாக்கித் தருகிறார்கள். அதே நேரத்தில், பிற சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தேர்வு செய்யும் போது 50 வயதுக்கும் மேற்பட்டவர்களாக தேர்வு செய்கிறார்கள். ஒரே பட்டியலாக அனுப்பினால் பார்ப்பனர்கள் இடம் பெறுவது பளிச்சென்று அம்பலமாகிவிடும் என்பதால், இரண்டு பட்டியலாக அனுப்பும் தந்திரமான முடிவை தலைமை நீதிபதி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுவரை பழங்குடி சமூகத்தைச் சார்ந்த எவரும் நீதிபதியாக வந்தது இல்லை. அருந்ததியர், மீனவர், யாதவர், பொற் கொல்லர், குயவர், வண்ணார், நாவிதர், பழங்குடியினர், முத்தரையர், சிறுபான்மையினர் போன்ற எத்தனையோ சமூகப் பிரிவினர் நீதிபதி களாக வந்ததில்லை. பெண்களுக்கான பிரதிநிதித் துவம் இல்லை. இந்த நிலையில், முதல் பட்டியலை தலைமை நீதிபதி அனுப்பி வைத்துள்ளார். இந்தப் பட்டியலை ஏற்கக் கூடாது என்று வழக்கறிஞர் சங்கப் பிரதிநிதிகள் டெல்லியில் சட்ட அமைச் சரவை சந்தித்து நேரில் வற்புறுத்தியுள்ளனர். காஷ்மீர் பார்ப்பனரான தலைமை நீதிபதி, தான் தயாரித்த முதல் பட்டியல் ‘தகுதி’ அடிப்படையிலானது என்றும் இரண்டாவது பட்டியல் ‘இடஒதுக்கீடு அடிப்படையிலானது’ என்றம் கூறும் சமாதானம் திறமை வாய்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பதாகும் என்று கண்டனக் கூட்டத்தில் பேசியவர்கள் சுட்டிக் காட்டினர். நீதிபதி நியமனங்களில் இதுவரை பிரதிநிதித்துவம் கிடைக்காத சமூகத்தினருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் (ஆர். காந்தி - எதிர் இந்திய அரசு வழக்கில்) எடுத்துக் கூறி அனைத்து உயர்நீதிமன்றங் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத் தக்கது. பார்ப்பன தலைமை நீதிபதிக்கு எதிராக வெளிப்படையாக வழக்கறிஞர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்திருப்பது - பெரியார் ஊட்டிய உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி!

News Source : கீற்று