எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம்..!
தமிழகத்தை பொருத்தவரை எத்தனையோ முத்தரையர் சங்கங்கள் இருந்தாலும் பெரும்பாலான சங்கங்களின் தலைமை என்னவோ மத்திய மாவட்டத்தை சேர்ந்ததாகதான் இருக்கிறது. அதீத சாதிப்பற்றும், சிந்தனையுமுடைய தென்தமிழ்நாட்டில் இருந்து சாதியை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைவர் இல்லையே..? ஏன்..?? என்பது நீண்ட நாள்களாக எனக்கு குறையாக தோன்றிய ஒரு விசயம்.
ஆனால் உண்மையில் அப்படியில்லை சுயநலம் சிறிதுமின்றி, எந்த ஆடம்பரமும் இல்லாமல் தென்தமிழக மாவட்டங்களான சிவகங்கை தொடங்கி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி என்று பெரிய பெரிய சங்கம் நடத்துபவர்களின் கால்தடம் படாத இடங்களில் இருக்கும் ஏழை முத்தரையனையும் ஒருங்கிணைக்கும் அரும்பணியை சத்தமில்லாமல் செய்துக்கொண்டுதான் இருக்கிறார் ஒரு தலைவர் என்பது தாமதமாகதான் எனக்கே தெரிந்தது.
மதுரை மாவட்டம் வலையங்குலத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட முத்தரையர் மக்களுக்காக ஊண் உறக்கமின்றி சுற்றி திரிந்து மாற்று சட்டைக்கூட அணியாமல் நான்கு நாள்கள் சென்னையையே சுற்றிவந்து அன்றைக்கு அந்த பிரச்சனை சட்டமன்றத்தில் ஒலித்துட தன்னலமின்றி உழைத்திட்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்பதும் எனக்கு தாமதமாகதான் தெரிந்தது. இன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் "முத்தரையர்" சமூகத்திற்க்காக இவர் தொடுத்த வழக்குகள்தான் அதிகம். அங்கிருக்கும் பெரும்பாலான முத்தரையர் சமுதாய வழக்கறிஞர்களோடு நல்லதொரு இணக்கத்தோடு இருக்கும் தலைவரும் அவர்தான்.
எத்தனையோ சங்கங்கள் இருந்தாலும் மருத்துவர் ராமதாஸ் அனைத்து சமூக தலைவர்களையும் அழைத்து சென்னையில் கூட்டம் போட்டபோது அழைத்த ஒரே ஒரு முத்தரையர் சங்க தலைவர் திரு. வெள்ளைத்துரை அவர்கள் மட்டும்தான்.
தலைவர்களை தேடிதேடி காலம்காலமாக அழைவது மட்டும்தான் "மதுரை உள்ளிட்ட" தென்மாவட்ட முத்தரையர்களுக்கு இன்றுவரை வழக்கமாக இருக்கிறது, இது எப்படி இருக்கிறது என்றால் "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யுக்கு அழைவது" என்ற பழமொழியை போன்று உள்ளது, உண்மையில் மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரு தலைவரை வைத்துக் கொண்டு இன்னமும் தலைவரை தேடி அழையும் கூட்டமாக இருக்கிறது தென் தமிழக முத்தரையர்கள் கூட்டம்.
முத்தரையர் சமூகத்தினை மையப்படுத்தி பத்திற்க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும் "பதிவு செய்த" ஒரே ஒரு அரசியல் கட்சி "எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம்" மட்டும்தான், அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு வருகின்ற 28.06.2015 ஞாயிற்றுக்கிழமை தென் தமிழகம் அதிர மதுரை ஒத்தகடையில் நடைபெற இருக்கிறது.
அப்படி என்னதான் அந்த கட்சியின் கொள்கை..? எதை நோக்கி அந்த கட்சி பயணப்பட போகிறது..? அந்த கட்சியின் எதிர்காலம் என்ன..? முத்தரையர்களுக்கு அந்த கட்சி எப்படி உதவப்போகிறது..? இதையெல்லாம் அறிந்துக்கொள்ள மாநாட்டிற்க்கு தென் தமிழக முத்தரையர் பேரிணமே திரண்டு வர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
அந்த கட்சியோடு இணைந்து செயல்படவே விரும்பினாலும் சூழ்நிலைகளால் நாங்கள் தனித்து நிற்கிறோமே தவிர எங்களின் பூரண ஒத்துழைப்பினை எப்போதும் எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகத்திற்க்கும், அதன் தலைவர் திரு. வெள்ளைத்துரை அவர்களுக்கு வழங்குவோம் என்ற உறுதியோடு மாநாட்டில் உங்களோடு நானும் கலந்து கொள்வேன் என்ற உறுதியோடு...
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A.,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக