செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருச்சி பன்னாட்டு விமான நிலையமாக்குவோம்








     நேற்று முந்தினம்  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் வைக்ககோரி பாமக நிறுவனர் மதிப்பிற்க்குறிய மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் நன்றியினை உரித்தாக்குகிறோம்.

       1978 ஆம் ஆண்டு புதுக்கோட்டை முத்தரையர் மாநாட்டில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் முத்தரையர் சமுதாயத்திற்க்கு அமைச்சரவையில் பிரதிநிதிதுவம் தருவோம் என்ற அறிவிப்புக்கு பிறகு (அந்த அறிவிப்புக்காக இன்றுவரை வேறு எந்த பிரதிபலனும் இல்லாமல் அஇஅதிமுகவை ஆதரித்து வருவது அனைவரும் அறிந்ததுதான்) முத்தரையர் சமூகத்திற்க்கு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அரசியல் கட்சியாக பாமக கொடுத்திருத்திருக்கும் இந்த அறிக்கையைதான் சொல்ல வேண்டும்.

     இந்த கோரிக்கையை இத்தோடு விடாமல் இதனை தங்களால் இயன்ற அளவு முழுமைப்பெற செய்ய பணிவுடன் பாமகவை வேண்டுகிறோம். இந்த ஒரே ஒரு கோரிக்கையின் மூலம் உறங்கி கிடந்த முத்தரையர் மக்கள் மனதில் புதிய எழுச்சியை ஏற்படுத்திவிட்டீர்கள், இதற்க்கு நேரடியாக நன்றி என்று ஒரு வார்த்தையில் நான் சொல்வதைவிட இந்த ஒரு அறிக்கைக்கான பலனை பாமக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மத்திய மாவட்டங்களில் அதுபெறப்போகும் வெற்றியை சமர்பிப்பதில் பெருமிதம் கொள்வோம்,

    எங்கள் சமூகத்திற்காகவென எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் பொதுவெளில் அதிகம் அறியப்பட்ட, அதுவும் அறிவுசார்ந்து நடக்கும் ஒரே கட்சியான பாமக இந்த கோரிக்கையினை வைத்ததன் மூலம் இனி ஆக்கப்பூர்வமாக இந்த கோரிக்கை வலுப்பெறும் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

    இந்த கோரிக்கை மீது உடனடியாக தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா உரிய கவனத்தை செலுத்தி தமிழக சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரிலேயே உரிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அது ஏற்கனவே இருக்கும் ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்ள அதிமுகவுக்கு உதவும் இல்லாதபட்சத்தில் அதன் பிரதிபலிப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தெரியும்.

   இந்த கோரிக்கையை பாமக வைத்ததன் மூலம் அந்த கட்சிக்கு ஆதாயம் (?!) என்று சில விசமிகள் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடும் அந்த கட்சி ஆதாயமே அடையட்டுமே..? அதனால் என்ன இதை செய்பவர்களால் நமக்கு என்ன கிடைத்தது ? பிரச்சாரம் செய்பவர்களின் பிண்ணனியை பாருங்கள் அவர்கள் திராவிடத்தின் அடியொற்றி நடப்பவர்களாக இருப்பார்கள், ஆகவே இந்த விமர்சனங்களை புறந்தள்ளுவோம்.

   உறங்கி கிடந்த நமக்கு கிடைத்த ஊக்கமருந்தாக இந்த அறிக்கையை எடுத்துக்கொள்வோம், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் தனிப்பிரிவிற்க்கு அனுப்புங்கள், கோரிக்கை நிறைவேறும்வரை போராடவும் தயாராக இருங்கள்.

     முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தாய்லாந்து நாட்டில் நடந்ததுபோன்று "மஞ்சள் ஆடை உள்ளிருப்பு போராட்டம்" ஒரு லட்சம் இளைஞர்களை திரட்டி கோரிக்கை நிறைவேறும்வரை விமான நிலையத்தின் அனைத்து வழிகளையும் அடைத்து போராட எங்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்வோம், கோரிக்கையின் வலிமையை புரிய வைப்போம், தமிழக அரசுக்கு தெரியும், ஒரு லட்சம் முத்தரையரை திருச்சியில் திரட்டுவது கடினமான பணியல்ல என்பது எங்களை அந்த நிலைக்கு மாற்றமாட்டார்கள் என்று நம்புகிறோம்.

   ஒரு கோரிக்கையையாவது வென்று எடுப்பது மட்டுமே சமூக விடுதலைக்கு வழிவகுக்கும், இந்த நெருப்பை அணையாமல் காக்க வேண்டிய பெரும்பொருப்பினை "முத்தரையர்" அனைவரும் ஏற்க வேண்டும்,

விரைவில்

"பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருச்சி பன்னாட்டு விமான நிலையமாக்குவோம்"

உணர்வோடு....

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்  

திங்கள், 28 செப்டம்பர், 2015

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சர்வதேச விமான நிலையம்

"பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சர்வதேச விமான நிலையம்" என்று பெயர் சூட்ட மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை பற்றிய செய்திகள் பல்வேறு செய்திதாள்களில் வந்திருந்தது அவற்றின் தொகுப்பு :

தமிழ் ஹிந்து

தினதந்தி

தமிழ்மித்ரன்

மாலைமலர்

தினகரன்

நியூஸ்டிக்

நக்கீரன்

தின இதழ்

Times Of India 


திருச்சி விமான நிலையத்திற்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட ராமதாஸ் வலியுறுத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட பெரும்பிடுகு முத்தரையர் பெயரை திருச்சி விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

நாட்டிற்கு சேவை செய்த தலைவர்கள் மற்றும் நாட்டுக்கு பெருமை சேர்த்த தலைவர்களை பெருமைப் படுத்தும் வகையில் அவர்களின் பெயர்களை வானூர்தி நிலையங்களுக்கும், பிற அமைப்புகளுக்கும் சூட்டுவது வழக்கமாக உள்ளது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும் சூட்டப் பட்டிருக்கிறது. இதன்மூலம் அந்த தலைவர்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டிருப்பதுடன், சென்னை விமான நிலையத்தின் முனையங்களுக்கு சிறந்த அடையாளமும் கிடைத்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களுக்கும் இதேபோல் பெயர் சூட்ட மத்திய&மாநில அரசுகள் முன்வர வேண்டும். ஆனால், இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது நல்வாய்ப்புக்கேடானது.

திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். வீரத்தின் விளைநிலமாக விளங்கியவர்; அண்டை நாட்டு மன்னர்களுடன் நல்லுறவைப் பேணியதுடன், போர்க்களங்களில் அவர்களுக்கு உதவியவர்; சேர, சோழ, பாண்டியர்கள் என மூவேந்தர்களின் ஆளுகைக்குள் இருந்த தரைப்பகுதிகளை பெரும்பிடுகு மன்னரும், அவரது வம்சாவளியினரும் ஆட்சி செய்ததாக அவர்களின் தலைநகராக விளங்கிய செந்தலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.

1300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர். இத்தகைய சிறப்பு மிக்க பெரும்பிடுகு மாமன்னரின் பெயரை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சூட்டுவது தான் அனைத்து வகைகளிலும் பொருத்தமானதாகும்.

ஏற்கனவே, திருச்சி மாவட்டத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்ட போது, திருச்சி மாவட்டத்தின் பெயரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பெயர் நீக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசரின் பெயர் சூட்டப்படுவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதை மதிக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.

News Source : http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7694583.ece

வியாழன், 24 செப்டம்பர், 2015

காரைக்குடியில் மயானத்தை அகற்ற முயற்சி: பொதுமக்கள் முற்றுகை

காரைக்குடி கழனிவாசல் பகுதியிலுள்ள மயானத்தை வியாழக்கிழமை அகற்ற முயன்ற ஊராட்சி நிர்வாகத்தினரை, அப்பகுதியினர் முற்றுகையிட்டனர்.
காரைக்குடி கழனிவாசல் பகுதியிலுள்ள மயானத்தை வியாழக்கிழமை அகற்ற முயன்ற ஊராட்சி நிர்வாகத்தினரை, அப்பகுதியினர் முற்றுகையிட்டனர்.

  கழனிவாசல் பகுதியில் முத்தரையர் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியினர் பயன்படுத்தி வரும் மயான இடத்தை, சங்கராபுரம் ஊராட்சிக்குச் சொந்தமானது எனக் கூறி, நிர்வாகத்தினர் அப்பகுதியை சுத்தம் செய்துள்ளனர். இதையறிந்ததும், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

  தகவலறிந்ததும், காரைக்குடி வட்டாட்சியர் ராஜேந்திரன், காரைக்குடி வடக்குக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமரசப்படுத்தினர். அதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

News Source : DINAMANI

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

சொல்லரசு திரு.செல்லையா

கீரமங்கலத்தில் கடந்த வாரம் முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருந்த, முத்தரையர் சமூகத்தில் இருந்து சுயேட்சையாக முதன்முதலில் சட்டமன்றம் சென்ற அய்யா சொல்லரசு திரு.செல்லையா அவர்களுக்கு 81 வது பிறந்த நாள் விழா நடத்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

செய்தி : வருண்ராஜ், சிரமேல்குடி



காடக முத்தரையர் நாடகம்

தஞ்சாவூரில் கடந்த வாரம் நடந்த "காடக முத்தரையர்" நாடக விழாவில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க தோழர்களோடு...













முத்தரையர் எழுச்சிச் சங்க கூட்டம்

கடந்த 20.09.2015 அன்று சென்னையில் முத்தரையர் எழுச்சிச் சங்க மாதாந்திர கூட்டத்தில் தொட்டியம் தமிழ், நீடாமங்கலம் ராஜா உள்ளிட்ட உறவுகளோடு கலந்து கொண்டு "முத்தரையர் முன்னேற வழிகள்" என்ற தலைப்பில் பேசினோம்.
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்






வியாழன், 17 செப்டம்பர், 2015

அருப்புக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு ரோடு மறியல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு ரோடு மறியல் செய்த பெண்கள், ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சியை சேர்ந்தது முத்தரையர் நகர். இங்கு குடிநீர் வந்து 20 நாட்கள் ஆகி விட்டது. இப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். எந்தவித நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பெண்கள் குடத்துடன் மதுரை ரோட்டில் குடிநீர் கேட்டு மறியல் செய்தனர். தாசில்தார் ரெங்கசாமி மற்றும் டவுன் போலீசார் சமாதானம் செய்தனர். மீண்டும் பெண்கள் காலி குடத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று அங்கும் முற்றுகையிட்டனர். தாசில்தார், பிடி.ஒ. ஜான்சிராணி, ஊராட்சி தலைவர் பழனி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்." வைகை ஆறு வறண்டு உள்ளதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. கிராம பகுதிகளுக்கு என உள்ள தாமிரபரணி குடிநீர் திட்டம் தற்போது சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகிறது. முழுமை அடைந்தவுடன் அனைத்து பகுதிகளுக்கும் சீராக கிடைக்கும்' என கூறியதின் படி கலைந்து சென்றனர்.

News source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1342860

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

முத்தரையரும் மீனவரும்

நேற்று (13.09.2015) சென்னை இக்சா மையத்தில் நடந்த "முத்தரையரும் மீனவரும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பாக கலந்து கொண்டு நான் பேசியதன் எழுத்து வடிவம்.

"முத்தரையர் மீனவர் கூட்டமைப்பு" ஏற்பாட்டில் "முத்தரையரும் மீனவரும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் என்னை கருத்துரை வழங்க அழைத்த அனவருக்கும் எனது முதல்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் பங்கேற்று இருக்கக்கூடிய பெரியவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் நன்றியினை உரித்தாக்கி..

இது "முத்தரையரும் மீனவரும்" என்ற கருத்தரங்கம் இதில் எனக்கு முன்பு பேசிய அனைத்து தலைவர்களும் இருவரும் ஒருவரே என்று பல்வேறு வரலாற்று செய்திகள் மூலம் நிறுபித்தார்கள், ஆக நான் வரலாற்றையே தொடர விரும்பவில்லை, சொல்லியிருக்கும் வரலாறே போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். நாம் நடைமுறையை கொஞ்சம், அரசியலை கொஞ்சம் பேசுவோம்.

இன்றைக்கு பட்டினவர், பரதவர், முக்குவர், கரையர், கடையர், வலையர், மரக்காயர் என்று 20 சாதிகளாக 13 மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாக்குமரி நீராடிவரையுள்ள 1096 கி.மீட்டர் கடற்கரையில் 608 கிராமங்களில் வாழ்ந்தாலும் இவர்கள் அனைவருக்கும் ஒரே பொதுப்பெயர் "மீனவர்" என்பதே..

இந்தியாவின் வரலாற்றை எப்போது எழுதினாலும், குறிப்பாக தமிழகத்தின் வரலாற்றை எழுதும்போது "பூர்வீககுடிகள்" என்று குறிப்பிட வேண்டுமானால் அது இந்த 20 சாதியாய் பிரிந்து நிற்க்கும் மீனவர் சமூகத்தைதான் முதலில் குறிப்பிட வேண்டும்.

அவ்வளவு தொன்மையான ஒரு சமூகம் எங்கே தோற்றுபோனது..? எது அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது..? என்பதை நாம் ஆராய வேண்டும்.

20 சாதியாய் பிரிந்து நிற்கிறோம் என்று சொன்னேன் அல்லவா..? அங்கிருந்துதான் நம்முடைய அரசியல் தோல்விகள் தொடங்குகின்றது, 13 கடற்கரை மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சமூகமாக, அதேபோல சமவெளி பிரதேசங்களில் வாழும் இதர முத்தரையர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடிய தொகுதிகளின் எண்ணிக்கையும் 50 தாண்டும் ஆக ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்க்கு பெரும்பாண்மையை பெறக்கூடிய ஒரு சமூகம் பிளவுபட்டு நிற்பதால் ஒன்றும் இரண்டுமாய் "கடமைக்கு" சட்டமன்றத்துக்குள் சென்று கொண்டு இருக்கிறோம். இப்படி நாம் அரசியலில் நமக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க தவறியதில் இருந்துதான் நம்முடைய அரசியல் தோல்வி தொடங்குகின்றது.

இன்றுவரை 600 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றும், ஒரு சின்ன சலசலப்புக்கூட எழவில்லை என்றால் அதற்க்கு காரணமும் இந்த அரசியலை நாம் புரிந்துக்கொள்ள மறுப்பதுதான். நமக்கான அரசியலை எவனோ எதற்க்கு செய்ய வேண்டும்..? என்றாவது அவன் சுடும்போது மட்டும் "சும்மா" போராடி கலைந்து செல்பவர்களை நம்பி, நம்பி நாசமாய் போய்கொண்டு இருக்கிறோம்.

மீன் பிடிப்பது நாம், முத்துகுளிப்பது நாம், உப்பை விளைவிப்பது நாம்... ஆனால் இதையெல்லாம் சந்தைப்படுத்துபவன் எவன்..? உயிரை பணயம் வைத்துதானே கடலுக்கு போகிறோம், கடலுக்குள் போகும்போது உடலோடு உயிராய் போறவன், சில சமயம் வெறும் உடலாய் கரை திரும்புகிறானே..? அவன் நம்மில் ஒருவன் இல்லையா..? எனக்கு கடல்தாய் எப்போது எல்லை வகுத்தாள்..? எல்லைதாண்டினோமாம், சுட்டுக்கொல்வானாம்.., இந்தியா சுதந்திரம் அடைந்து 68 வருடமாகிறது, மீனவன் சுதந்திரத்தை இழந்தும் அதே 68 வருடங்கள்தான் ஆகிறது.

வருடத்திற்க்கு எத்தனையோ ஆயிரம் கோடி அன்னிய செலவானியை இந்த நாட்டுக்கு தருபவனுக்கு இவன் என்ன செய்தான்..? எதுவும் இல்லை, ஏன் சட்டமன்றத்திற்க்கோ, நாடாளுமன்றத்துக்கோ சிலரேனும் செல்ல ஒரு இடஒதுக்கீட்டை தந்தால் என்ன குடியா முழுகிவிடும்..? அவனாக கண்டிப்பாக தரமாட்டான், ஏன் தர வேண்டும்..? தராமலே நம்முடைய உரிமைகளை பறித்துக்கொடுக்க இங்கு ஆயிரம் தரகர்கள் இருக்கிறார்கள்.

நம்முடைய சமூகங்களோடு இணக்கமாய் இருப்பதாய் பாசங்கு காட்டுபவன் தான் நம்முடைய பொருளாதாரத்தை, உழைப்பை சுரண்டுகிறான், இன்னும் சிலர் நம்முடைய அரசியலை சுரண்டுகிறான், கடல்தாயின் மடியில் பிறந்த நமக்கு அவள் எப்போதும் குறைவற்ற வளங்களை அள்ளி அள்ளி தருவதுபோலவே நாமும் நம்முடைய உரிமைகளை, அரசியல் அதிகாரங்களை நம்மை வஞ்சித்து பிழைப்பவனிடம் தந்துவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

சமீபத்தில் ஒரு செய்தி ஒரு மீனவ சங்க தலைவரை தூத்துக்குடியில் வெட்டிக்கொன்றதாக செய்திதாள்களில் படித்தேன், வெட்டியவர்கள் வேறு யாரும் அல்ல அவர்களும் மீனவர்கள்தான், ஏன் வெட்டிக்கொன்றார்கள்..? படகு முதலாளிகளின் விருப்பத்திற்காக, அவர்களின் கெளரவத்திற்காக..? எப்படி மூளை மழுங்கடிக்கப்பட்டு இருக்கிறோம் புரிகிறதா..? நம்முடைய கையை வைத்தே நம்கண்ணை குத்தும் லாவகங்கள் அனைத்தையும் எதிரி மிகச் சரியாகவே செய்கிறான் நாம் புரிந்துக்கொள்ளவே மறுக்கிறோம்.

கடல்வளத்தை பெருமுதலாளிகள் எப்படி சுரண்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான், நாம் எப்படி கடலை நேசிக்கிறோம், அதனோடு எப்படியான உறவினை பேணுகிறோம் என்பதற்க்கு சமீபத்திய உதாரணம்தான் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் இயங்கும் கடல்சார் ஆய்வு மையம் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்தமைக்காக ராமேஷ்வரத்தை சேர்ந்த அக்கா லெட்சுமிக்கு விருது வழங்கி கெளரவித்து இருக்கிறது, அந்த விருதோடு 6 லட்ச ரூபாய் பணபரிசும் கொடுக்க இருக்கிறது. இப்படிதான் நாம் கடலை நேசிக்கிறோம்.

இப்போதெல்லாம் கடற்கரை காத்து வாங்க வருபவனுக்கும், நிலங்களை வளைத்துப்போட்டு ரிசார்ட்ஸ் நடத்துபவனுக்கும், நல்ல நிலங்களை தோண்டி இரால் வளர்ப்பவனுக்கும் சொந்தமாகிகொண்டு இருக்கிறது, பூர்வகுடியோ இப்போதும் எனக்கென்னவென்று கடலாடுகிறது..

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்


வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஏர்வாடியில் தர்காவில் 841-வது வருட உரூஸ

ஏர்வாடியில் தர்காவில் 841-வது வருட உரூஸ்

கீழக்கரை, செப் 9:

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள அல்-குத்புல் அக்தாப் சுல்த்தான் ஸைய்யிது இப்ராஹிம் ‘ஹீது வலியுல்லாஹ்(ரலி) அவர்களின் 841-வது வருட உரூஸ் என்ற சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அமைந்துள்ள முஸ்லிம்களின் புண்ணிய தலமான ஏர்வாடி தர்ஹாவில் நேற்று அதிகாலையில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. விழாவையொட்டி முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்த தண்ணீரால் தர்ஹா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. சந்தனக்கூட்டின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் செய்து கொடுத்தனர். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகியவற்றை யாதவர்களும் ஆதிதிராவிடர்களும் அலங்கரித்தனர்.

சலவைத் தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதிதிராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி தீப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட சந்தனக்கூடு ஏர்வாடி நல்ல இப்றாகிம் மகாலில் இருந்து தாரை தப்பட்டைகள் முழங்க வாணவேடிக்கையுடன் 12 குதிரைகள் , ஒரு யானைமுன் செல்ல ஊர்வலமாக சந்தனக்கூடு மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து தர்ஹாவை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளிப்பேழையில் வைத்து எடுத்து வரப்பட்ட புனிதசந்தனம் பாதூநாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் பூசப்பட்டது. மத நல்லிணகத்துக்கு எடுத்துக்காட்டான இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு பிரார்த்தித்தனர்.

விழா ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபைத் தலைவர் அம்ஜத் ஹூஸைன் லெவ்வை, செயலாளர் செய்யது ஃபாரூக் ஆலிம் அரூஸி, உப தலைவர் செய்யது சிராஜூதீன் லெவ்வை, மூத்த நிர்வாக சபை உறுப்பினர் துல் கருணை பாட்சா லெவ்வை மற்றும் உறுப்பினர்கள் செய்தனர். விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் அரசு சார்பில் குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவைகள் சிறப்பாக செய்து கொடுத்த தமிழக அரசுக்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்தவிழாவில் அனைத்து சமுதாய பக்தர்கள், பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு கொடியேற்றத்தின் போது சிறப்பு கோசங்களை எழுப்பி பிரார்த்தனை செய்தனர். இந்த சந்தனக்கூடு திருவிழாவை தொடர்ந்து 14 ந்தேதி கொடி இறக்கம் நிகழ்ச்சி மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெறும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

News Source : http://makkalkural.net/news/blog/2015/09/09/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-841-%E0%AE%B5/