உண்ணாவிரத அறப்போராட்டம்...!!
புதுகை புரட்சியின் இரண்டாவது அத்தியாயம் நேற்று புதுகை மாநகரில் எழுத்தப்பட்டது, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமையை மீட்டெடுக்கும் முயற்சியாக அரசும், அதிகார வர்க்கமும் அலறும் வண்ணம் இந்த சமூகத்திற்காக நடத்தப்படும் அத்தனை அரசியல் அமைப்புகள், சங்கங்கள், இயக்கங்களின் தலைவர்கள் ஒரே மேடையில் வீற்றிருந்தது ஒட்டுமொத்த நிகழ்விற்க்கும் முத்தாய்ப்பாய் அமைந்தது,
உழைத்து ஓய்ந்த தலைவர்கள் தொடங்கி நேற்று முளைத்த என்னைப் போன்றவர்கள் வரை அத்தனை அமைப்பின் தலைவர்களும் கலந்துகொண்ட இந்த உண்ணாவிரதத்தின் மூலம் ஆளும் வர்க்கத்திற்க்கு பல தலைமுறைகள் கடந்து இன்று அச்சத்தை தோற்றிவித்து இருக்கிறோம்.
இந்த நிகழ்வின் வெற்றியை சொல்ல வேண்டுமானால் ஆயிரமாயிராமாய் குவிந்த உறவுகளின் எண்ணிக்கையை, அவர்களின் உணர்வுகளை சொல்வதன் மூலமாகவோ, வழக்கம்போலவே குவிக்கப்பட்ட ஆயிரமாயிரம் காவல்துறையின் எண்ணிக்கையை சொல்வதன் மூலமாகவோ, கலவரத்தடுப்பிற்க்காக வந்த வஜ்ரா ஓரமாய் ஓய்வெடுத்ததை சொல்வதன் மூலமாகவோ, பந்தல் நிறைந்து வீதியெங்கும் பட்டினி கிடந்த உறவுகளின் எழுச்சியை சொல்வதன் மூலமாகவோ சொல்வதைவிட, முத்தரையர்களால் முத்தரையர் சமூகத்திற்காக / அவர்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு இன உணர்வை ஊட்டிச் சென்ற ஒரு யாதவர் சமூக தலைவரின் அனல் தெரிக்கும் ஆவேச பேச்சே இந்த நிகழ்வின் வெற்றியாக கொள்ளலாம்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நான் பேசியதன் எழுத்து வடிவம்... (வீடியோ பதிவு கிடைத்தவுடன் பதிவேற்றுகிறேன்)
முறுக்கிய மீசையோடு வீற்றிருக்கும் எனது பேரரசன் பெரும்பிடுகு முத்தரையரின் புகழ் பணிந்து, இங்கு அணிதிரண்டு நிற்க்கும் எனது இனமான அத்தனை தலைவர்களுக்கும் நன்றியை உரித்தாக்கி, ஆயிரமாயிமாய் திரண்டு நிற்கும் எனது இனமான உறவுகளை வணக்கி துவங்குகிறேன்.
இந்த நிகழ்வு எதிர்பாராமால் நடத்தப்படுகிறதா ? அல்லது இப்படி நடக்கும் என்று ஊகித்தார்களா ? என்று தெரியவில்லை கடந்த வாரம் பாரத பிரதமர் நரேந்திரமோடி கோவை கொடீசியா மைதானத்தில் பேசும்போது, அம்பேத்கார் என்ற பெயர் இருக்கும்வரை இடஒதுக்கீடு இருக்கும் என்று பேசி சென்றார், அப்படியானால் இந்தியாவில் எப்போதும் இடஒதுக்கீடு அமலிலேயே இருக்கும் என்ற எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சரியான தருணத்தில் பிரதமரின் பேச்சுக்கு பிறகு ஒரு சமூகம் தனக்கான இடஒதுக்கீட்டை கேட்டு ஒரு போராட்டம் நடத்துகிறது என்றால் அது முத்தரையர் சமூகமாகதான் இருக்கும். மிகச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு இந்த போராட்டம்.
அதேபோல இந்த "அற" வழியிலான உண்ணாவிரத நிகழ்விற்க்கு அரசும், காவல்துறையும் அனுமதி தரவில்லை, வழக்காடு மன்றம் சென்று அனுமதி பெற்றதாக நிகழ்வினை ஒருங்கிணைத்தவர்கள் சொன்னார்கள், அரசாங்கம் அனுமதிக்காது, அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பதே வேறு... என்னைகூட காவல்துறையில் பணியாற்றும் எனது தம்பி ஒருவர் நேற்று தொடர்பு கொண்டு கேட்டார், எதாவது தெருவில் நான்கு முத்தரையர்கள் கூடி நின்றாலே பெரிய நிகழ்வு போல சமூகவலைத்தளங்களின் எழுதுவீர்களே..! ஏன் இந்த உண்ணாவிரதம் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறீர்கள் ? என்று கேட்டார், அவருக்கும் சேர்த்துதான் இப்போது பதில் சொல்கிறேன், நான் அரசாங்கத்து ஆள், அதற்காக அதிமுககாரன் கிடையாது, அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதனை முழுமையாக ஏற்றுக்கொள்பவன், அரசாங்கம் நினைப்பதுபோலவே நடக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், அரசாங்கம் என்ன நினைக்கிறது தெரியுமா..?
கடந்த மாத இறுதியில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நாயுடு சமூகத்தின் ஒரு பிரிவான காப்பு சமூகம் ஒரு "அற" போராட்டம் நடத்தியது, ஒரு ரெயிலையும், சில வாகனங்களையும் கொளுத்தியது, அதேபோலதான் வட மாநிலத்தில் ஜாட் சமூகம் சில ரெயில்களை எறித்தும், பல வாகனங்களை கொளுத்தியும் "அற" போராட்டம் நடத்தியது, அதேபோலதான் குஜ்ஜார் சமூகம் வடபகுதியில் இருந்து தென்பகுதியை இணைக்கும் ரெயில் தடங்களை பெயர்த்தும், சாலைகளை, பாலங்களை உடைத்தும் "அற" வழியில் இடஒதுக்கீடு கோரியது, அதேபோலதான் பட்டேல் சமூகமும் செய்தது, ஆக அரசாங்கம் "வன்முறைகள்" நிறைந்த உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகளை கண்டு அஞ்சுவதும், ஜாட், குஜ்ஜார், பட்டேல்கள் போல "அற" வழியில் போராடுவதை ஆதரிப்பதையும் நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
SCயில் 76 சாதிகள், STயில் 40 சாதிகள், BCயில் 197 சாதிகள், BCMஎனப்படும் முஸ்லீம் உள்ளிட்ட 7 சாதிகள், MBCயில் 41 சாதிகள் அதன் உள்ளேயே DCஎன்ற பெயரின் 68 சாதிகள் ஆகக்கூடி 429 சாதிகளுக்கு தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு இருக்கிறது. மீதமிருக்கக்கூடிய 31% மட்டும்தான் பொதுப்போட்டிக்கு..
இதில் BCக்கு 30% MBCக்கு 20%, SCக்கு 18%, STக்கு 1% சதவீதம் என்ற முறையில் இடஒதுக்கீடு இருக்கிறது, ஒட்டுமொத்தமாக 29 பிரிவுகளாக இருக்கும் முத்தரையர் சாதியில் BCயில் இருக்ககூடிய முத்துராஜாக்களும், MBCயில் இருக்ககூடிய வலையர், அம்பலக்காரர்களும்தான் ஒட்டுமொத்தத்தில் 85% இந்த மக்களுக்குதான் இடஒதுக்கீட்டின் எந்த பலனும் இன்னும்போய் சேரவில்லை. போய் சேர வேண்டும் என்பதற்காகதான் இப்படி போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
1969-ல் அமைக்கபட்ட சட்டநாதன் கமிசனாகட்டும், 1980-ல் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் கமிசனாகட்டும் இரண்டுமே வலியுறுத்தும் ஒரே விசயம் கிரிமீலேயர் முறையை அமல்படுத்தி இடஒதுக்கீட்டின் பலனை முழுமையாக பெற்ற, வளர்ந்த சமூகங்களை அந்த பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான், அப்போதுதான் இதுவரை இடஒதுக்கீட்டு பலன் போய் சேராத முத்தரையர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் சென்றடையும்அதற்கு கிரிமீலேயர் முறையை அமல்படுத்த வேண்டும் என்று சொன்ன இரண்டு கமிசனின் அறிக்கையையும் அந்த கமிசனை நியமித்த கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பூட்டிய அறையில் இட்டு பாதுகாக்கிறார்களே தவிர சொல்லப்பட்ட விசயத்தை கவனத்தில் கொள்ளவே இல்லை.
அதேபோல இங்கு நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களில் கூடுதலாக முத்தரையர்களுக்கு சட்டமன்ற / நாடாளுமன்ற "தனி" தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இணைத்து தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
கடந்த வாரத்தில் TNPSC என்று சொல்லப்படக்கூடிய பணியாளர் தேர்வாணையத்திற்க்கு ஒரே ஒரு அரசாணை மூலம் 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் நியமித்து ஆணையிட்டு இருக்கிறார், அதில் 7 பேர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள், எந்த சமூகம் நம்முடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறதோ அந்த சமூகத்தின் ஆதிக்கத்தில் பணியாளர் தேர்வாணையம் போகுமென்றால் கக்கூஸ் கழுவும் பணி தொடங்கி கலெக்டர் பணி வரை அந்த சமூகத்தின் ஆதிக்கம்தான் இருக்கும், இது ஒட்டுமொத்த சமூகத்திற்க்கும் அச்சுருத்தலாக அமையும், பணியாளர் தேர்வாணையத்தில் முத்தரையர்களுக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதிதுவம் வேண்டும்.
இதைப்பற்றியெல்லாம் நாம் அக்கறையற்று நிற்கிறோம், சமீபத்தில் தலித் சமூகத்தின் ஒரு தலைவர் என்னிடம் சொன்னார், உங்கள் சமூக மக்கள் வாழும் தெருக்களில் மாலை 5 மணிக்கு மேல் செல்ல முடியாத நிலை இருக்கிறது, அந்த நிலை மாறும்போது உங்கள் சமூகம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என்றார் அவர் குறிப்பிட்டது டாஸ்மாக் எனும் அரக்கனை நாம் வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி உழைத்து அந்த காசை அரசாங்கத்திடம் கொடுத்து அரசை நடத்தும் சமூகமாக இருக்கிறோம் அந்த நிலை மாற வேண்டும். என் சமூகம் உரிய இடஒதுக்கீட்டினை பெற வேண்டும்.
என்று பேசினேன்.
இந்த நிகழ்வெல்லாம் முடிந்தபிறகு சமூக வலைத்தளத்தில் ஒரு பொடிபையன் கையில் முத்தரையர் கொடி தாங்கி போராட்ட களத்தில் ( அரங்கமும், திடலும் நிறைந்து இருந்ததால் அந்த காட்சியை நான் காண முடியவில்லை) வீறு நடைபோட்ட நிழற்படத்தை பார்த்து ஒருகணம் கண்ணில் நீர் கோர்த்துவிட்டது, இப்போது சொல்கிறேன், என் உயிர்போனால் இந்த சாதியை உயர்த்திவிட முடியும் என்றால் அந்த தருணத்திற்காக ஆவலோடு காத்து நிற்கிறேன்.
வாழ்க முத்தரையர் பேரினம்...!!
-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக