ஆதரித்தாகவே தெரிகின்றது.எனினும்,தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது.எம் மதமும் சம்மதம் என்ற தமிழர்களின் உன்னதமான மனப்பான்மை இப்படியான மாற்று கொள்கைகளுக்கும் பிற மதத்திற்கும் இடம் கொடுத்தன.மேலும் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படியும் இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதுடன் சமயம்,சமுதாயம் பண்பாட்டுத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களையும் தோற்றுவித்தது.உதாரணமாக,நல்ல நடத்தைக்குரியவை பற்றியும்,உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றியும் மற்றும் நீதிகளைப்பற்றியும் உரைக்கும் நூல்களான இன்ன நாற்பது,இனியவை நாற்பது,நாலடியார் போன்றவை தோன்றின.களப்பிரர்கள் கி பி ஆறாம் ஆண்டு வரை,முன்னூறு ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டார்கள்.என்றாலும் இவர்களைப்பற்றி அவ்வளவு பெரிதாக அறிய முடியவில்லை.இதனால் தான் இதை இருண்ட காலம் என பொதுவாக அழைக்கப்படுகிறது.தமது இறுதி காலத்தில் களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர்.எப்படியாயினும் இவர்கள் கொடுங்கன் பாண்டியனாலும் சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் தோற்கடிக்கப்பட்டு இவர்களின் ஆட்சி நிறைவுக்கு வந்தது.இவர்களின் இறுதி காலத்தில் பக்தி இயக்கம் தளைத்தோங்க தொடங்கியது.இந்த பக்தி இயக்கம் சைவம்,வைணவம் என்னும் இரு கிளைகளாக ஓங்கியது.
ணப்படுகிறது.எப்படியாயினும் நாளடைவில் உணவு பழக்கங்கள் மாற்றம் அடைந்து திணை இப்ப மெல்ல மெல்ல கிராமப்புறங்களில் இருந்தும் மறைய தொடங்குகின்றன.முருகனுக்கு தேனும்,தினை மாவும் உகந்த பிரசாதம் என்பார்கள்.அதனால் அவனுக்கு கொடுக்கும் வழிபாடு "தேனும் தினை மாவும்" என்ற அடிகளுடன் ஆரம்பிக்கின்றன.இது எமது மூதாதையர்கள் திணைக்கு கொடுத்த முக்கியத்தை கொடுக்கிறது.பண்டைய தமிழர்களின் பிரதான உணவாக திணை கஞ்சி இருந்தது.இதை களி,கூழ் என அழைத்தார்கள்.இது சங்க காலத்திலும் கூட உட்கொள்ளப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக