Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

திங்கள், 28 மார்ச், 2016

முத்தரையர் சாதிக்கு யார் தலைவர்...?

முத்தரையர் சாதிக்கு யார் தலைவர்...?


நீண்டநாளாகவே இந்த விசயத்தை எழுத நினைத்தேன், இருந்தாலும் என்னால் ஒரு பிரச்சனை/ பிரிவு முத்தரையர் சமூகத்தில் வந்துவிடக்கூடாது என்பதனால் முடிந்தளவு தவிர்த்து வந்தேன், அதுவும் இல்லாமல் நான் ஒரு அரசியல் கட்சியில் வேறு என்னை இணைத்துக்கொண்டிருப்பதால் இப்படியான தவறுகளை சுட்டிக்காட்ட கூடாது என்றும் கருதினேன் ஆனால் இன்று இந்த செய்தியை பார்த்தபிறகும் நான் அமைதியாக இருந்தால் என் சமூகத்திற்க்காக பேசும் தகுதியை இழந்துவிடுவேன் ஆகவே என்னுடைய கடமையை நான் செய்கிறேன்.

யார் இவர்கள்..?
தேர்தல் வந்தால் போதும் புற்றீசல்கள் போல புதிதுபுதிதாக நூற்றுக்கணக்கான சங்கங்கள் / அமைப்புகள் இந்த சாதியில் மட்டும் முளைத்துவருகிறது, வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும், வர வேண்டாம் என்று யாரையும் யாரும் தடுக்க முடியாது, ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் முளைத்துவருவதை எப்படி கண்டும் காணாமலும் போக முடியும் ?

அதேபோலவே சென்னையை சுற்றி இருக்க கூடிய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து தலைவர்களாக உதித்து வந்தவர்களின் மனசாட்சியிடம் கேட்கிறேன், எந்த அடிப்படையில்ஒட்டுமொத்த முத்தரையர் சமூகத்தின் பிரதிநிதியாக நீங்கள் தேர்தல் நேரத்தில் உதித்து வருகிறீர்கள்..? கடந்த பத்தாண்டுகளின் அதுகூட வேண்டாம் கடந்த ஐந்தாண்டுகளின் முத்தரையர் சமூகத்திற்காக நீங்கள் எத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கிறீர்கள் ? இந்த சமூகத்திற்க்கு பயனுள்ள வகையில் எந்த அரசியல் கட்சியிடம் என்ன மாதிரியான கோரிக்கையை வைத்து இதுவரை நிறைவேற்றி இருக்கிறீர்கள் ? இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் இந்த சாதிக்காக பேச வைத்திருக்கிறீர்கள் ? இது எதுவுமே செய்யாமல் என்ன தைரியத்தில் "முத்தரையர்" என்ற பெயரை பயன்படுத்தி அரசியல் கட்சிகளை ஆதரிக்கிறீர்கள் ?

திருச்சியில் இயங்கும் முத்தரையர் சங்கங்கள் குறிப்பாக அய்யா R.V. யின் முத்தரையர் முன்னேற்ற சங்கம், அண்ணன் K.K.S.ஸின் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கங்களை நான் பலமுறை விமர்சித்து இருக்கிறேன், காரணம் அவர்களின் செயல்பாடுகளில் இருக்கும் சிற்சில குறைகள், மற்றப்படி அவர்கள் மக்களோடு நேரடியாக தொடர்பினை வைத்திருக்கிறார்கள், அவர்கள் பிரச்சனைகளை முடிந்தளவு தீர்க்க முயற்சிக்கிறார்கள் அதனால் அவர்கள் செய்யும் பல செயல்களில் சில தவறுகள் நேருவது இயல்பு, அதை சுட்டிக்காட்ட வேண்டியது எனது பொருப்பு, ஒருவேளை இவர்களும் செயல்படாமல் இருந்தால் இவர்கள் மீது நான் உட்பட யாருமே விமர்சனங்களை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

உண்மையில் சென்னையை சுற்றி இருக்கக்கூடிய தலைவர்கள், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் எந்த அரசியல் கட்சியாவது உங்களை நாடி வந்தால், நீங்கள் செயல்பாட்டில் இருக்கும் சங்கங்களை சுட்டிக்காட்டிவிட்டு ஒதுங்கி இருந்திருக்க வேண்டும், ஆனால் சில லட்சங்களை வீசி எறிவார்கள் என்பதற்காக என் சாதியை அடமானம் வைக்கும் உங்களை போன்ற சமூகத்திற்க்கு எதிரானவர்களை என்ன செய்வது..?
யார் இந்த காடக முத்தரையர் ?

இதுவரை இந்த சாதிக்காக இவர் செய்தது என்ன ?

எந்த அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்கிறார் ?

2011 ம் ஆண்டும் இவர் அதிமுகவை ஆதரித்தாரே..., அப்போது ஏன் இந்த கோரிக்கைகளை வைக்கவில்லை ?

இந்த கோரிக்கையை 2011 ஆம் ஆண்டும் வைத்திருந்தால் ஏன் அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ?

அதிமுகவுக்கும் முத்தரையர் சமூகத்திற்க்குமான மிகப்பெரிய போராட்டம் புதுக்கோட்டையில் நடந்தபிறகும் இவர் யார் எனது சாதி பெயரை பயன்படுத்தி அதிமுகவை ஆதரிக்க ?

முத்தரையர் சமூக மக்களே புரிந்துக்கொள்ளுங்கள், இவர்கள் எல்லாம் இந்த சமூகத்தை தொடந்து விலைபேசி உயிர்வாழ்பவர்கள், இவர்களால் ஒருபோதும் இந்த சமூகத்திற்க்கு வரும் ஆபத்துகளில் இருந்தோ, அச்சுருத்தல்களில் இருந்தோ காக்க முடியாது, இவர்கள் நிச்சயமாக உங்களுக்கான தலைவர்கள் கிடையாது.

சரியான தலைமை எது என்பதை நீங்களே தீர்மானியுங்கள், தேர்தல் நேரத்தில் ஆதயத்திற்காக வருபவர்களை துரத்தியடியுங்கள்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

வெள்ளி, 25 மார்ச், 2016

கலப்பு மணம்...!

கலப்பு மணம்...!

(முத்தரையர்கள் கட்டாயம் படிக்கவும், பகிரவும், அனைத்து நம் வீட்டு பெண்களிடம் பிரிண்ட் எடுத்து கொடுக்கவும் வேண்டும்)

ஒரு விசயம் விவாதிக்கப்படாமல் மூடி மறைக்கும்வரை பெரும்பாலும் அது ஆபத்தாகவே அமைந்துவிடுகிறது, சமூக அவலமாகவும் ஆகி விடுகிறது, இந்த வாரத்தில் மட்டும் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் எனது கவனத்திற்க்கு வந்தது இரண்டும் சாதிமாறி காதல் கொண்டவை..!

சம்பவம் -  1

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலித் சமூகத்து மாணவனை காதலித்த பெண்ணை ஆணவகொலை செய்யப்போவதாகவும், அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று புரட்சியாளர்கள் எல்லாம் பொங்கி இருந்தார்கள் (https://www.facebook.com/manikandan.mapa/posts/173085043078125) அது என்னை பொருத்தவரை ஒரு செய்தி, அப்படியே நானும் கடந்து சென்றிருக்கலாம்

ஆனால் அந்த பதிவின் பின்னூட்டத்தில் இப்படி எழுதி இருந்தார்கள் // Anbu Selvaந் தோழர் திரு.தமிழ் இராசேந்திரன் அவர்கள் மூலம் அறிந்த செய்தி-

செய்தி பெருமளவு பரப்ப பட்டு விட்டது. மீடியாக்கள் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்துள்ளனர். காதலன் கொடுத்த புகார் பெறப்பட்டுவிட்டது. பெண்ணை தேடுதல் தொடங்கி உள்ளது. பெண் முத்தரையர் சாதி. பையன் எஸ்.சி. பெண்ணின் தந்தை கம்யூனிஸ்ட் என்பதே பெரும் ஆச்சரியம். //

இங்கு எங்கே சாதி வந்தது...? ஏன் "முத்தரையர்" சாதியாகவோ, எந்த சாதியாகவோ இருந்துவிட்டு போகட்டுமே..? காதலில் நீங்கள் ஏன் சாதி பார்கிறீர்கள்..? முத்தரையர் சமூகத்தின் வளர்ச்சிக்காக அமைப்பு நடத்தகூடியவர்கள் யாரேனும் இதனை எதிர்த்தார்களா..? இல்லையே...? பெண்ணின் குடும்பத்தார்கள் எதிர்த்தார்கள் அப்படிதானே..? முத்தரையர் என்ற பதம் பயன்படுத்துவதன் மூலம் அந்த சமூகத்தின் இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டி சாதி துவேசம் வளர்ப்பதுதான் இந்த புரட்சியாளர்களின் நோக்கமா..?   இது வழக்காகி காவல் நிலையம் சென்று அந்த பையனோடு செல்வேன் என்று அந்த பெண் சொல்லிவிட்டார், புரட்சியும் அமைதியாக நடந்து முடிந்துவிட்டது.

இதை படித்தவர்கள் இரண்டாவது சம்பவத்தை கட்டாயம் படிக்க வேண்டும்.

சம்பவம் - 2

தஞ்சை மாவட்டத்தில் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்த 19 வயது முத்தரையர் சமூகத்து மாணவியை காதலித்து அழைத்துக்கொண்டு செல்கிறார் ஒரு "தலித்" இளைஞர், இந்த வழக்கும் காவல் நிலையம் செல்கிறது, காவல்துறை அந்த இளைஞனோடு அந்த மாணவியை அனுப்பி வைக்கிறது. குடும்பத்தாரும் தலை முழுகி விட்டுவிடுகிறார்கள், நேற்று அந்த பெண்ணிடமிருந்து அவருடைய சகோதரருக்கு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, "அண்ணா..! என்னை அடித்து துண்புறுத்துகிறார்கள், கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள், என்னை எப்படியாவது காப்பாற்று" என்று அழுது புலம்புகிறாள், அந்த பெண் தன் சகோதரனோடு பேசியதை அறிந்த அந்த தலித் இளைஞர் பெண்ணின் சகோதரனை தொலைப்பேசியில் அழைத்து "உன் தங்கையை கொல்லதான் போகிறோம், என்னடா செய்வாய்..?" என்கிறார்.

இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்...?

புரட்சி பேசும் புண்ணாக்குக்களும், பெரியாரிசம் பேசும் பொறம்போக்குகளும், இந்த ஏழை வீட்டு பெண்ணுக்கு என்ன நீதியை சொல்லப்போகிறீர்கள்..?

 எனது இனமான உறவுகளே...! இந்த செய்தி நம் சமூகத்தின் அனைத்து பெண்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும், இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் நம் பெண்களை காப்பாற்றும் கடமை நமக்கு இருக்கிறது. புரியவையுங்கள் குடும்பத்தார் சம்மதத்தோடு, நல்ல வேலையில் இருக்கும் "எந்த" சாதியை சேர்ந்தவரையும் காதலித்து மணமுடித்துக் கொள்ளுங்கள், படிக்கும் வயதில் இனகவர்ச்சிக்காக உங்களை பலியிட்டுக்கொள்ளாதீர்கள், இன்று இந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி உங்களுக்கு நேர்ந்தால் எப்படி எதிர்கொள்வீர்கள் என்று சற்று சிந்தித்து பாருங்கள், நம் குடும்பம் மட்டும்தான் நமக்கு பாதுகாப்பு என்னதான் திட்டினாலும் அவர்கள் மட்டுமே உங்களை காப்பாற்றுவார்கள்.

இங்கு அடிக்க வேண்டும், கொல்ல வேண்டும், வெட்ட வேண்டும் என்ற வெட்டி பேச்சுக்கள் வேண்டாம், தவறு நேராமல் தன்னைதானே பாதுகாத்து கொள்ளும் பக்குவத்தை நம் சமூகம் அடைய என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள், படிக்க போகும் பெண்கள் மட்டுமல்ல, எல்லா பெண்களிடமும் எறிந்துவிழுவது, திட்டுவது, அனாவசியமாக அவர்களை குற்றப்படுத்துவது இவற்றை தவிர்த்து பக்குவமாக சமூகத்தை எப்படி அணுக வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்துங்கள், அது யாரேனும் ஒரு பெண் தவறாக போய்விடாமல் காப்பாற்ற உதவும்.

K. சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

செவ்வாய், 8 மார்ச், 2016

முத்தரையர் சங்கங்கள் அ.தி.மு.க., மீது அதிருப்தி

அ.தி.மு.க., 'பூத் கமிட்டி'க்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில், முத்தரையர் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது, அச்சமுதாய சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., சார்பில், தமிழக சட்டசபை தேர்தல் பணிக்காக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் ஜாதி வாரியாக உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை சேகரிக்க, அ.தி.மு.க., தலைமை சார்பில் பூத் கமிட்டிக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தில், தொகுதிக்குழு, பகுதிக்குழு ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய, நகர, பேரூராட்சி உறுப்பினர்கள் பெயர், முகவரி, கட்சிப் பதவி, மொபைல் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.

மேலும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பூத் கமிட்டியின் கட்டுப்பாட்டில் வரும் ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள், ஜாதி வாரியாக எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை சேகரித்து, அதில் குறிப்பிட வேண்டும். அதற்காக வன்னியர், நாயக்கர், கொங்கு வேளாளர், தேவர், பிராமணர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிகள் வரிசையாக, விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆனால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் ஜாதியின் பெயர் குறிப்பிடாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இது, முத்தரையர் சமுதாய மக்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. - நமது நிருபர் -

News Source : தினமலர்

திங்கள், 7 மார்ச், 2016

ஊடகங்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஊடகங்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்






















இன்று (07.03.2016) ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் எதிரில் ஜனநாயகத்தில் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிக்கைதுறை, முத்தரையர் மக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பு செய்தும், தஞ்சாவூர் மாவட்டத்தில் முத்தரையர்களே இல்லாததுபோலவும் சித்தரித்து தொடர்ந்து செய்தி வெளியிடுவதன் மூலம் உண்மையிலேயே பெரும்பாண்மை சமூகமாக இருக்கும் முத்தரையர்கள் அரசியல் அரங்கில் தொடந்து புறக்கணிக்க்பட்டு வருகிறார்கள்,

இந்த அவலத்தினை களையும் வண்ணம் பத்திரிக்கை நண்பர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது, தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அனுமதி மறுத்த காவல்துறை நூற்றுக்கணக்கில் தாலுகா அலுவலகம் எதிரில் குவிக்கப்பட்டு இருந்தது, தடையை மீறி ஆர்பாட்டம் செய்ய நினைத்த முத்தரையர் கூட்டமைப்பினரோடு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வேறு ஒருநாளில் அனுமதி பெற்று போராட்டத்தை நடத்திக்கொள்ள கேட்டுக்கொண்டற்க்கு இனங்க போராட்டத்தை நடத்தாமல் முத்தரையர் கூட்டமைப்பினர் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்திற்க்கு முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க தலைவர் எஸ்.எம்.மூர்த்தி, இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர், முத்தரையர் முன்னேற்ற சங்க டெல்டா மாவட்ட அமைப்பாளர் வீ.சுப்பிரமணியன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க ஏழுபட்டி தினகரன் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கலந்துகொள்ள திரண்டிருந்தனர்.

பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்ததினால் ஒரத்தநாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

வெள்ளி, 4 மார்ச், 2016

தமிழரின் உணவு பழக்கங்கள்

கி பி மூன்றாம் ஆண்டுடன் சங்க காலம் முடிவுற்றது.முடிவுறும் காலத்தை பிந்தைய சங்க காலமாக அடையாளப்படுத்தப்பட்டது.கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர,சோழ,பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர்.சேர நாடு,சோழ நாடு,பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்தும் கொண்டனர் என்பர்.பொதுவாக களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர்.இருப்பினும் இவர்களின் தோற்றம்,இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை.எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம்,பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது.இவர்கள் பாளி மொழியை
ஆதரித்தாகவே தெரிகின்றது.எனினும்,தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது.எம் மதமும் சம்மதம் என்ற தமிழர்களின் உன்னதமான மனப்பான்மை இப்படியான மாற்று கொள்கைகளுக்கும் பிற மதத்திற்கும் இடம் கொடுத்தன.மேலும் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படியும் இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதுடன் சமயம்,சமுதாயம் பண்பாட்டுத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களையும் தோற்றுவித்தது.உதாரணமாக,நல்ல நடத்தைக்குரியவை பற்றியும்,உலகத்தில் கூடாதவை என்னென்ன
என்பது பற்றியும் மற்றும் நீதிகளைப்பற்றியும் உரைக்கும் நூல்களான இன்ன நாற்பது,இனியவை நாற்பது,நாலடியார் போன்றவை தோன்றின.களப்பிரர்கள் கி பி ஆறாம் ஆண்டு வரை,முன்னூறு ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டார்கள்.என்றாலும் இவர்களைப்பற்றி அவ்வளவு பெரிதாக அறிய முடியவில்லை.இதனால் தான் இதை இருண்ட காலம் என பொதுவாக அழைக்கப்படுகிறது.தமது இறுதி காலத்தில் களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர்.எப்படியாயினும் இவர்கள் கொடுங்கன் பாண்டியனாலும் சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் தோற்கடிக்கப்பட்டு இவர்களின் ஆட்சி நிறைவுக்கு வந்தது.இவர்களின் இறுதி காலத்தில் பக்தி இயக்கம் தளைத்தோங்க தொடங்கியது.இந்த பக்தி இயக்கம் சைவம்,வைணவம் என்னும் இரு கிளைகளாக ஓங்கியது. 

காலப்போக்கில் உணவைப்பற்றிய சில சுவாரஸ்யமான கருத்துக்கள் தமிழகத்தில் தோன்றின.தமிழ் நாட்டிலோ அல்லது சங்க காலத்திலோ இல்லாத மரக்கறி உணவுக் கொள்கை அல்லது புலால் உண்ணாமை,சமணம்,பெளத்தம் போன்றவற்றின் செல்வாக்கால் அங்கு வெளிப்பட தொடங்கின.இது தமிழர்களின் உணவு பழக்கங்களில் மிகப் பெரிய மாற்றமாக அமைந்தது.மேலும் சுவைகளை ஆறு வகையாக,துவர்ப்பு,இனிப்பு,புளிப்பு,கார்ப்பு,கசப்பு,மற்றும் உவர்ப்பு என்ற அறுசுவையாக பிரித்தனர்.அத்துடன் எல்லா உணவுகளையும் இரண்டு பரந்த பிரிவுகளில்,சூடு,குளிர் சாப்பாடுகளாக வகுத்தார்கள்.இன்றும்
தமிழர் உணவுகள் இவைகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன. ஆயுர்வேதம்,சித்த மருத்துவம் போன்றவை உடலின் ஆறு முக்கிய
தாதுக்களுடன்[ இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,நரம்பு,உமிழ்நீர்] இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி,உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.அது மட்டு அல்ல களப்பிரர்கள் கால தமிழ் இலக்கியமான நாலடியார்:"அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண்டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின்,செல்வம் ஒன்று உண்டாக வைக்கற்பாற்றன்று." என்ற பாடலில் அறுசுவையை குறிப்பிடுகிறது. அதாவது,ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க,ஒரு கவளமே கொண்டு,மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியவராகி,வேறோர் இடம் போய்,எளிய கூழ் உணவை இரந்து உண்பர்.ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று என்கிறது.

மேலும் அங்கு கிராமப்புறங்களில் தினை முக்கிய உணவாக இருந்தன.அது அண்மைய காலம் வரை தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.உண்மையில் இப்பவும் தொலைதூர அல்லது பழைமையான தமிழ் நாட்டு கிராமங்களில் திணை அவர்களின் பிரதான உணவாக இருப்பதுடன்,அங்கு எப்போதாவது சிலவேளையே சோறு உண்ணப்படுகிறது.அதிகமாக கொண்டாட்ட நாட்களிலேயே இந்த நெல்லுச் சோறு உண்
ணப்படுகிறது.எப்படியாயினும் நாளடைவில் உணவு பழக்கங்கள் மாற்றம் அடைந்து திணை இப்ப மெல்ல மெல்ல கிராமப்புறங்களில் இருந்தும் மறைய தொடங்குகின்றன.முருகனுக்கு தேனும்,தினை மாவும் உகந்த பிரசாதம் என்பார்கள்.அதனால் அவனுக்கு கொடுக்கும் வழிபாடு "தேனும் தினை மாவும்" என்ற அடிகளுடன் ஆரம்பிக்கின்றன.இது எமது மூதாதையர்கள் திணைக்கு கொடுத்த முக்கியத்தை கொடுக்கிறது.பண்டைய தமிழர்களின் பிரதான உணவாக திணை கஞ்சி இருந்தது.இதை களி,கூழ் என அழைத்தார்கள்.இது சங்க காலத்திலும் கூட உட்கொள்ளப்பட்டது.

கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்பட்ட அப்பர்,தமது தேவாரத்தில் ஆமை உணவாக உட்கொள்ளப்பட்டத்தை தெரிவித்துள்ளார்.

"வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே."

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால்,எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க,அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன்.வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? என கேட்டு முறையிடும் இந்த தேவாரத்தில் ஆமையை நீரில் வேகவைப்பதை உதாரணமாக அவர் கையாளுவதன் மூலம் இந்த உணவு முறையையும் நாம் அறிகிறோம்.
 
News Source : தீபம்