இன்று (07.03.2016) ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் எதிரில் ஜனநாயகத்தில் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிக்கைதுறை, முத்தரையர் மக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பு செய்தும், தஞ்சாவூர் மாவட்டத்தில் முத்தரையர்களே இல்லாததுபோலவும் சித்தரித்து தொடர்ந்து செய்தி வெளியிடுவதன் மூலம் உண்மையிலேயே பெரும்பாண்மை சமூகமாக இருக்கும் முத்தரையர்கள் அரசியல் அரங்கில் தொடந்து புறக்கணிக்க்பட்டு வருகிறார்கள்,
இந்த அவலத்தினை களையும் வண்ணம் பத்திரிக்கை நண்பர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது, தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அனுமதி மறுத்த காவல்துறை நூற்றுக்கணக்கில் தாலுகா அலுவலகம் எதிரில் குவிக்கப்பட்டு இருந்தது, தடையை மீறி ஆர்பாட்டம் செய்ய நினைத்த முத்தரையர் கூட்டமைப்பினரோடு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வேறு ஒருநாளில் அனுமதி பெற்று போராட்டத்தை நடத்திக்கொள்ள கேட்டுக்கொண்டற்க்கு இனங்க போராட்டத்தை நடத்தாமல் முத்தரையர் கூட்டமைப்பினர் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்திற்க்கு முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க தலைவர் எஸ்.எம்.மூர்த்தி, இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர், முத்தரையர் முன்னேற்ற சங்க டெல்டா மாவட்ட அமைப்பாளர் வீ.சுப்பிரமணியன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க ஏழுபட்டி தினகரன் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கலந்துகொள்ள திரண்டிருந்தனர்.
பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்ததினால் ஒரத்தநாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக