மேலும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பூத் கமிட்டியின் கட்டுப்பாட்டில் வரும் ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள், ஜாதி வாரியாக எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை சேகரித்து, அதில் குறிப்பிட வேண்டும். அதற்காக வன்னியர், நாயக்கர், கொங்கு வேளாளர், தேவர், பிராமணர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிகள் வரிசையாக, விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆனால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் ஜாதியின் பெயர் குறிப்பிடாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இது, முத்தரையர் சமுதாய மக்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. - நமது நிருபர் -
News Source : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக