பட்டுக்கோட்டையும் முத்தரையரும்....
பெயருக்கும் ஊருக்கும் எந்த தொடர்பும் இல்லாத ஊர் பட்டுக்கோட்டை "இங்கு பட்டும் இல்லை, கோட்டையும் இல்லை" வேண்டுமானால் இப்படி அழைக்கலாம் "முத்தரையர் கோட்டை" என்று காரணம் இந்த ஊரினை சுற்றிலும் முத்தரையர் மக்கள் பெரும்பாண்மையாக ஆனால் அடிமைகளாக வாழ்ந்து வருகிறார்கள், அடிமைகள் என்று கூறியதன் பொருள் ஆள வேண்டிய இவர்கள் யாருக்கோ தமது இடத்தினை தமக்கே தெரியாமல் விட்டுக் கொடுத்துவிட்டு வாழ்கிறார்கள் என்பதாகும்.
முதலில் சட்டமன்ற உறுப்பினர்: - 1958 ம் ஆண்டிற்க்கு முன்பு அதிராம்பட்டினம் சட்டமன்ற தொகுதியாகவும், பின்னர் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியான பின்னும், பின்னர் தொகுதி சீரமைப்பில் பேராவுரணி தொகுதியின் சில இடங்கள் இணைந்த பின்னரும் கூட தொகுதியில் 52 % மக்கள் முத்தரையர்கள் என்பது அந்த தொகுதியில் வாழும் முத்தரையர்களுக்கு (கூட) தெரியாது ஆனால் இந்த உண்மை பிற சமுகத்தவர்களுக்கு நன்றாக தெரியும் அதனால் அவர்கள் கையாலும் முறை "பிரித்தால்வது" ஆமாம் அதுதான் உண்மை, அந்த தொகுதில் வாழும் தேவர், கள்ளர், வெள்ளாளர் இனதினர் எமது சமுகதினை கூறு போட்டு ஆண்டு வருகிறார்கள். 1991 - ம் ஆண்டு திரு.எட்டுப்புலிக்காடு ராமன் சுயேட்சையாக தனித்து நின்று (சிங்கம் சின்னத்தில்) 15000 ஓட்டுக்களைப் பெற்றார், சில ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார், இருந்தாலும் அன்று ஏற்ப்பட்ட எழுச்சி பின்னர் ஏனோ மழுங்கிவிட்டது (அ) மழுங்கடிக்கப் பட்டது, பின்னர் 1996 -ம் ஆண்டு தேர்தலில் மதிமுக சார்பில் திரு. ரெங்கனாதன் நின்ற போது சுமார் 18000 ஓட்டுக்களைப் பெற்றார், 2006 - ம் ஆண்டு தேர்தலில் திரு. ஜெயபால் (சுயேட்சை) நின்ற போது 12000+ ஓட்டுக்களையும், 2011 - ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் திரு. முரளிகணேஸ் சுமார் 13000 ஓட்டுக்களையும் பெற்றார். இவ்வாறு இன உணர்வோடு உள்ள சுமார் 10,000 - 20,000 மக்கள் என்றாவது முத்தரையர்கள் வெற்றிப் பெறுவார்கள் என்று காத்திருக்கிறார்கள் எனோ தெரியவில்லை மற்றவர்களுக்கு இந்த எண்ணம் வர மறுக்கிறது, அருகில் இருக்கும் பேராவுரணி, ஆலங்குடி தொகுதி முத்தரையர்களுக்கு இருக்கும் இன உணர்வில் 100% ல் 10% இருந்தாலும் நமது இனத்தவர்தான் சட்டமன்ற உறுப்பினர் ..! அன்னாலும் என்னாலோ...!!!
ஊராட்சி ஓன்றிய பெருந்தலைவர்: - பட்டுக்கோட்டை தொகுதியைப் பொருத்தவரை இரண்டு ஓன்றியங்கள் உள்ளடங்கியது (பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர்), இன்று அந்த இரண்டு இடங்களிலும் கள்ளர்களே ஓன்றிய பெருந்தலைவர்களாக உள்ளனர், உடனே அப்படியென்றால் ஓன்றிய குழு உறுப்பினர்கள் ( Councilor)அவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள், உண்மை கசப்பானது இரண்டு இடங்களிலும் நம்மவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் Councilor களாக இருக்கிறார்கள், இங்கு தான் நான் கூரிய பிரித்தாலும் கொள்கையை மற்றவர்கள் கையாள்கிறார்கள், ஆம் நம்மவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தும் இருப்பது ஓரே கட்சியில் இல்லை, எதிர் எதிர் கட்சிகளில் இருக்கிறார்கள், இதுதான் நான் முன்பே கூரிய மற்றவர்களின் பிரித்தாளும் தந்திரம், இதில் மிக எளிதாக நம்மவர்கள் பாகடைக்காய்களாக்கப் படுகின்றனர். இந்த பிரித்தாளும் சூட்சுமத்தில் இருந்து ஒரு முறை தப்பிய நாம் பட்டுக்கோட்டை ஓன்றியப் பெருந்தலைவராக வெற்றிப் பெற்றொம் (மறைந்த திரு.ஜெயபால்), பின்னர் சுதாரித்துக் கொண்ட மற்ற இனத்தவர் இதுவரை நம்மவர்களை போட்டியில் கூட அனுமதிப்பதில்லை.
ஊராட்சி மன்ற தலைவர்கள் : - இதில் மற்றவர்கள் அதிகம் தலையிடுவதில்லை காரணம் அவர்களுக்கே நன்றாக தெரியும், முத்தரையர்கள் இன்னும் தாண்டாத நிலை (இந்த பதவியையே நம்மவர்களைப் பொருத்தவரை பெரிய பதவியாக கருதுவதால் மற்ற பதவிகளுக்கு இவர்கள் போட்டியாக கூட இருக்க தயாரில்லை) இதில் போட்டிகள் கூட நம்மவர்களுக்குள் மட்டும்தான், இன்றும் பெரும்பாண்மை ஊராட்சி மன்ற தலைவர்கள், முத்தரையர்களே.
அரசியல் கட்சிகள் : - நான் முன்பே கூறியது போல பட்டுக்கோட்டையை பொருத்தவரை.. அதிமுக (கள்ளர்), திமுக (வெள்ளாளர்), காங்கிரஸ் (தேவர்), தேமுதிக (யாதவர்), இதில் முக்கியமாக அதிமுகவில் எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள் முத்தரையர்கள் ஆனால் பதவி ? முன்பு இந்த கட்சியில் பிரபலமாக இருந்தவர் திரு. அச்சகம் சந்திரசேகர் , அவரும் பல முறை முயற்சி செய்தும் ஒன்றும் நடக்காததால் கட்சி மாறி தேமுதிக சென்று பின்னர் சில வருடத்திற்கு முன்பு மறைந்தார். இப்பொழுது அந்த கட்சியில் சொல்லிக்கொள்ளும் படி இருப்பவர்கள், முத்துப்பேட்டை ரோடு ராஜேந்திரன், அ.ப.மோகன், கலைமணி போன்றவர்கள் மட்டுமே... திமுகவை பொருத்தவரை இங்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்த மறைந்த திரு. ஜெயபால் தவிர பெயர் சொல்லும் படி பெரிய தலைவர்களாக யரையும் வரவிடவில்லை இப்பொழுது இருப்பவர்களில் பெயர் சொல்லும்படி உள்ளவர்கள் மாளியக்காடு ரமேஷ், சேண்டாக்கோட்டை மனோகரன், மணிமாறன் என்று விரல் விட்டு என்னக்கூடியவர்களே உள்ளனர், காங்கிரஸை பொருத்தவரை திரு. வீ.மா.காசினாதன் (மாவட்ட தலைவர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு), பாரதிய ஜனதாவில் மாவட்ட தலைவர் திரு. முரளிகணேஸ், என்பதோடு தேசிய கட்சிகளில் நம்மவர்களின் ஆதிக்கம் குறைவு, ஒரே ஆறுதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் திரு. பக்கிரிசாமி உட்பட நம்மவர்களின் ஆதிக்கம் சற்று அதிகம், தேமுதிக இந்த பட்டியலில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை
முத்தரையர் சங்கங்கள் : முன்பு முத்தரையர் சங்க செயல்பாடு என்பது பட்டுக்கோட்டையில் அ.பா.மோகன், மதுக்கூரில் கலைமணி, என்று கட்டுக்கோட்பாக சென்றது, பின்னர் திரு. கு.ப.கிருஷ்ணன் தொடங்கிய "தமிழர்பூமி" கட்சியில் இணைந்து கொண்டது அந்த காலகட்டத்தில் முத்தரையர் சங்கம் செயல் இழந்து அனைவரும் "தமிழர்பூமி" யில் தங்களை இணைத்துக் கொன்டனர். பின்னர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் திரு. சூரப்பள்ளம் ராஜ்குமார், வேப்பங்குளம் ஆசிரியர் போன்றோர் முன்னெடுத்து சென்றனர் மேலும் சங்க செயல்பாடுகள் பாரட்டும் விதத்தில் அமைந்துள்ளது, சங்கம் சாராமல் செயல்படுவோரும் உண்டு அதில் குறிப்பிடதக்கவர்கள் பள்ளிக்கொண்டான் சசிகுமார் (ஊராட்சி மன்ற தலைவர்) , வீ.மா.வீரப்பன் (சர்வேயர்), முதல்சேரி கல்யாணசுந்தரம் (முன்னாள் அமைச்சர் கோவேந்தன் மருமகன்),
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
3 கருத்துகள்:
Namma oorukulla electionla ninnale ambalakaran vote poda mattan. appuram eppadi MLA kku nikkirathu?
Neenka venumna 2016 electionla PKT la ninnunka. appo ambalakaran palatha kattuvom. illana 2021 la naan nippen.
கண்டிப்பாக கார்த்திக் நாம புதிய முயற்சிகளில் ஈடுபடுவோம் ..!!!
கருத்துரையிடுக