சனி, 29 செப்டம்பர், 2012

முத்தரயர்களுக்கான அரசியல்...


100 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றால் தமிழக வரலாற்றிலே முழு அரசியல் அதிகாரமும் பார்பனர்களிடதிலே இருந்தது...அதன் பிறகு பெரியார் போன்ற சில தலைவர்களின் போராட்டத்தாலும் முயற்சியாலும் அந்த நிலை மாறி 1920 க்குபிறகு பார்பனர் விரட்டப்பட்டு பார்பனர் அல்லாதோர் அந்த இடங்களுக்கு சென்றுள்ளனர்...இது நம் அனைவருக்கும் தெரிந்ததே...இதில் நீதிக் கட்சி போன்ற சில அரசியல் கட்சிகளின் பங்குதான் அதிகம் இருந்தது,அனால் இதை பார்பனர் அல்லாதோர் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக நாம் கருத முடியாது,ஏனெனில் பார்பனர் விரட்டப்பட்டு அந்த இடத்திலே அமர்ந்தவர்கள் யாரென்று பார்த்தால் தாழ்த்தபட்ட மக்களோ,தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களோ அல்ல...அவர்கள் அனைவரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மக்கள்...அதாவது நாய்டு,நாயக்கர்,ரெட்டியார்,முதலியார் போன்ற மக்கள் தொகையிலே சிறுபான்மையினதவராக இருந்த தெலுங்கர்களே...இதைவுறுதிபடுத்த வேண்டும் என்றல் நீதிக்கட்சி முதலில் ஆட்சி அமைத்த போது அதன் அமைச்சரவையிலே ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை...இதை அப்போது ஒரு பத்திரிக்கை பார்பனர் அல்லாத தெலுங்கு மக்களின் அமைச்சரவை என்று விமர்சித்ததாக ஒரு முனைவர் எழுதி வுள்ளார்...இதனால் முக்குலத்தோர்,நாடார்,வன்னியர்,முத்தரையர் போன்ற தமிழ் சாதிகள் அரசியலில் ஈடுபடாமலே இருந்துள்ளது...

ஆனால் இதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் மேற்கண்ட தமிழ் சாதிகள் தங்களை அரசியலில் மிக விரைவாக ஈடுபடுத்தி கொண்டுள்ளன-நம்மை தவிர,காரணம் அந்த காலங்களில் நமக்கு பள்ளிக்கூடமே தெரியாமல் இருந்துள்ளோம்,ஆதாரம் சட்டநாதன் அறிக்கை 1974 -அதாவது 1920 வரை பார்பனரும்,அதன் பிறகு தெலுங்கரும்,1950 க்கு பிறகுதமிழ் சாதிகளிடையே போட்டி ஏற்படுகிறது...இதில் முதலில் வென்றவர்கள் வன்னியர்கள்...50 களிலே அவர்கள் உழைப்பாளர் கட்சி, உழைப்பாளர் பொதுநலக் கட்சி,என்று அந்த சமுதயதவர்களை அரசியல் ரீதியாக தயார் செய்து 25 சட்டமன்ற உறுப்பினர் வரை உருவாக்கினார்கள், அதன் பிறகும் திராவிடப் போர்வையில் தெலுங்கர்களில்ஆட்சி தொடர்ந்தது இருந்தாலும் தமிழர்களின் அரசியல் வளர்ச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை...குறிப்பாக முக்குலத்தோர் என்று சொல்லி கொண்டு ஒரு கும்பல் அரசியலை தன் வசப்படுத்தியது...எல்ல சாதிகளும் தமது மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்ப முயற்சிக்க இவர்கள் மட்டும் அதை விட அதிகமாக அனுப்பினர்...இதற்கு உதவியது அவர்களின் ஒற்றுமை,வீர வரலாறு படைத்தோர் என அந்த சமுதாய மக்கள் தங்களை நம்பியது...ஆனால் சில சாதிகள் எதுவுமே தெரியாமல் தமக்குள்ள தலைவர்களை உருவாக்காமல், தாமாக உருவாகினால் அவர்களை வளரவிடாமல் செய்தனர்,செய்துவருகின்றனர்...மேலும் சானார் என்று ஒடுக்கப்பட்டவர்கள் தான் இன்றைக்கு நாடார் ஆகி அரசியல் செய்கின்றனர்...

இப்பொழுது நாம் ஒரு விசயத்திற்கு வருவோம்...நமது மக்கள் தொகை எவ்வளவு? நமக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட சாதி எது?வன்னியர்...அவர்களுக்கு அனைத்து அரசியல் கட்சியையும் சேர்த்து சட்டமன்றத்திலே எத்தனை இடம் ? நமக்கு எத்தனை ? நாம் கேட்பதெல்லாம் சாதி அரசியல் பேசக்கூடாது என்று சொல்பவர்கள் உங்கள் தொகுதியில் ஒரே ஒருமுறை சாதி இல்லாமல் முத்தரையர்களை வேட்பாளர் என்று அனைத்து சாதியினரும் ஏற்று கொள்ளுங்கள் என்று மாற்று இனத்தவரிடம் சொல்ல முடியுமா? குறிப்பாக முக்குலத்தோரிடம் சொல்லி தொகுதியை பெற முடியுமா?சற்று சிந்தித்து பாருங்கள்...

ஆ.வெங்கடாசலம் என்ற தலைவனை வெட்டி கொன்றார்களே...ஒரு முக்குலதவனயோ,வன்னியனயோ கொன்றிருந்தால் அந்த கட்சி சும்மா இருந்திருக்குமா? இல்லை அந்த சமூகம்தான் சும்மா விட்டிருக்குமா? ஆனால் நாமோ அவருக்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி கொண்டாட தயாராகி வருகின்றோம்...ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவரது சாவின் உண்மை காரணம் தெரியும்? தெரிந்தவர்களும் சும்மா தானே இருக்கின்றோம்...என்றாவது சிந்தித்து உண்டா? சாதியின் பெயரை சொன்னாலே ஏதோ சொல்ல கூடததை சொன்னதை போன்று பார்க்கின்றோம் எப்படி இந்த சாதி முன்னேறும்? நம் சமுக இளைஞர்களால் ஒரு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ,முக்குலத்தவர்க்கும் நிகராக அரசியல் பேச முடியுமா?இந்தநிலை எப்பொழுது மாறுகிறதோ அப்போதுதான் சமுதாயம் முன்னேறும்...
 
- துரை ராஜகுமாரன்
 

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

வருந்துகிறோம்...!!!

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கிறது, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
 
 


வியாழன், 20 செப்டம்பர், 2012

உணர்ச்சி வசப்படும் இனமா முத்தரையர் சமுதாயம் ?

நம் சமுகம் மக்கள் தொகையல் அதிகமாகவும்,

அரசியல் மற்றும் பொருளாதார நிலையில்.அதிகம் தாக்கம் இல்லாமல் உள்ளோம்.தற்போது உள்ள அரசியல் கட்சிகளில் நமக்கு உள்ள செல்வாக்கு நாம் அறிந்ததே.
இந்த நிலையேல் தமிழகத்தில் செல்வாக்கு அதிகம் இல்லாத இந்து மத அமைப்பினர், தங்கள் அரசியல் வளர்சிக்கு.அதிக வாக்கு வங்கிகளை உடைய நம்மை குறிவைகிறார்கள்.இதற்காக ஒரு சில மாவட்ட பொறுப்புகளை நம் இனத்தவர்களுக்கு கொடுத்து நம்மை தன் வசபடுத்துகிறார்கள்.அதிகம் உணர்ச்சி களுக்கு தகுந்து, சிந்திக்காமல் முடிவு எடுக்கும் நாம் பல மதரீதியான பிரச்சனைகளில் மாட்டவைகபடுகிறோம்..

நாம் சிந்திக்கவேண்டிய பல வினாக்கள் நம் முன் உள்ளது.
 

1) நமக்கு உண்மையேல் எதிரி யார்? முஸ்லிமா,கிறிஸ்தவர்களா ?
 
 
 
 

2 ) அப்படி அவர்கள் தான் காரணம் எனில். எனில் நாம் இத்தனை ஆண்டுகளாக அணைத்து துறைகளிலும் பின் தங்கி ஒடுக்கப்பட்டு வாழ்வதற்கு காரணம் யார்?
 

3) நம் வளர்ச்சில் இந்த அமைபினற்கு உண்மையான கரிசனம் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
 

4) உள்ளூரில் சக இந்து (சாதி அமைப்புகளிடம்)அரசியல்,பொருளாதார நிலமையல் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாத நம்மால், இந்த மிகப்பெரிய அமைப்பு ரீதியான இவர்களிடம் வெற்றி பெறுவது எளிது என்று நம்புகிறீர்களா?

நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/1948)


5) நாம் சீரும் சிறப்பாக வாழ்ந்த நம் மன்னர்களின் காலத்தை, இருண்ட காலம் என்று ஒற்றை வரியல் சொல்லி.நம் இனத்தையே கல்வி அறிவு இல்லாமல் பல நூற்றாண்டுகள் விவசாய கூலிகளாக மாற்றிய இவர்களிடம், நாம் உண்மையான கரிசனத்தை எதிர்பார்க்க முடியுமா?

..நமக்கு எதிரி நம் அறியாமை தான்...மற்ற இனத்தவர்கள் அல்ல? .சிந்திப்போம். சிந்திப்போம், உண்மையான சுய சிந்தனையுடன்,கல்வி அறிவுடன் பொருளாதார அரசியல் வளர்ச்சியை அடைவோம்...நல்ல மரியாதையைஇகு உரிய இந்துவாக வாழும் வாய்பு கிடைக்குமா, அதற்கு மத்த சாதி அமைப்பிலிருந்து உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்று முதலில் போராடுவோம்.
வெறுமனே நம் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு, தங்கள் நிலையைத் தாழ்த்திக் கொள்வதை விட நம்முடைய நிலையை உயர்த்திக்கொள்ள நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வோம்.
இப்படிக்கு முத்தரையர் ஷேரிங் குரூப் நண்பர்கள் அமைப்பு
 

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

முத்தரையர் இனப் பெண்கள்...!!

முத்தரையர் இனப் பெண்கள்...!!

முத்தரையர் சமுதாயம் இன்று பெருமைப் படக்கூடிய ஒரே விசயம் நம் சமுகப் பெண்களின் கல்வி அறிவு, மற்ற சமுகங்களைக் காட்டிலும், நமது சமுகத்தின் ஆண்களைக் காட்டிலும் கல்வி அறிவில் நமது பெண்கள் மிகப் பெரிய அளவில் சாதித்துள்ளார்கள்/ சாதித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்வேறு சமுக, பொருளாதர காரணங்களால் ஆண்பிள்ளைகளால் சாதிக்க முடியாத விசயத்தில், பெண்களின் இந்த சாதனையை மேலும் நாம் ஊக்கப் படுத்த வேண்டும், நமது சகோதரிகளுக்கு சரியான வழிக்காட்டுதலும், தொடர்ந்து படிக்க ஊக்கமும் தர வேண்டும் அது நாளைய நமது சமுகத்தின் வெற்றிக்கு பெறும் உதவியாக இருக்கும், நான் அறிந்து பெரும்பாலான நம் சகோதரிகள் நிரம்ப படித்தும் சரியான வழிக்காட்டுதல் இல்லாமல், இரத்த உறவுகள் யாரும் தாம் தேர்ந்தெடுத்த துறையில் இல்லாததலும் வேலைக்கு செல்ல முடியாமல் / பணி வாய்ப்புகளைப் பற்றி அறியாமல் இருக்குக்கின்றார்கள், இவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பினை எவ்வாறு பெற்றுத்தர முடியும் ? இது குறித்த உங்களின் ஆலோசனை என்ன ? அரசு வேலை என்றால் பாதுகாப்பு பிரச்சனைகள் கிடையாத...
ு, பணி நேரமும் குறைவு ஆனால் அது நமக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. அதற்க்காக அவர்கள் கற்ற கல்வி வீணாகவும் கூடாது, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் அவர்களின் கல்வி நிலைக்கு ஏற்ப உரிய வேலை வாய்ப்பினை பெற்றுத்தர என்ன வழி ? நமது சகோதரர்கள் இவர்களுக்கு உதவ அல்லது இவர்களின் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை பற்றி அறிவிக்க என்ன வழி ? இது நமது இனதின் ஏதிர்கால பிரச்சனை இது குறித்து நாம் விவாதிப்போமா ?

உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கி....



சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,

ஒருங்கிணைப்பாளர்,

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
 
Write to : sanjai28582@gmail.com
 

உணர்ச்சி வசப்படும் இனமா முத்தரையர் சமுதாயம் ?

உறவுகளுக்கு வணக்கம் !



உணர்ச்சி வசப்படும் இனமா முத்தரையர் சமுதாயம் ?
...



கடந்த காலங்களில் நடந்த சில கசப்பான சம்பவங்களில், ஏனோ முத்தரையர் இனம் குறிவைக்கப்படுகிறதோ என்ற சந்தேகதினை வலுப்படுத்துவது போல உள்ளது, தஞ்சாவூர் மாவட்டதில் ஒரு கிராமம், முத்தரையர்கள் மட்டுமே வாழும் அந்த கிராமத்தினருக்கும், அருகில் உள்ள இஸ்லாமியர் நிறைந்து வாழும் ஒரு ஊருக்கும் ஒரு மத மோதல் உருவானது, நம்மவர்களின் நியாயமான கோரிக்கைதான் என்றாலும், அதற்கான போரட்டமுறை தவறாக வடித்தெடுக்கப்பட்டது என்பதுதான் வேதனை இதன் பிண்ணனியில் இருந்து நம் மக்களை தவறாக வழிநடத்தியது இந்து அமைப்புகள் இதில் பாதிக்கப்பட்டது என்னவோ முத்தரையர்கள்தான், இதே நிலைதான் மதுரை மாவட்டத்தில் அமைதியாக வாழ்ந்து வரும் நம் மக்களை தூண்டிவிடும் விதமாக நமது மன்னரின் படத்தினை சிலர் அவமதிக்க அதை காரணமாக கொண்டு சில விரும்பதகாத சம்பவங்கள் நடந்தது, இதே போன்று திண்டுக்கல் மாவட்டதில் நமது சிங்க கொடி சிலரால் திட்டமிட்டு அவமதிக்கப்பட அங்கும் சில விரும்பதகாத சம்பவங்கள், கருர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில், திருச்சியில் முத்தரையர் பிறந்த நாள் விழவில், ராமநாதபுரம் முத்தரையர் சிலை திறப்புவிழாவில் இவ்வாறு விறும்பதகாத சம்பவங்கள் நடைப்பெறும் பொழுதெல்லாம் கடைசில் பாதிக்கப்படுவது நமது இனமாகவே இருக்கின்றது. இதில் நம்மை உணர்ச்சி வசப்படுத்தி ஆதாயம் பெறுகிறார்கள் சிலர். இதனை நாம் எவ்வாறு களைவது என்பதனைக் குறித்து நாம் சிந்திக்கவேண்டும், இந்த தருணத்தில் மேலும் ஒரு முக்கியமான விசயம், இங்கே சில நண்பர்களிடம் ஒரு தவறான எண்ணம் உள்ளது, என்ன நடந்தாலும் பிறரை குறை சொல்வது, நாம் கேட்பது இதற்க்கான தீர்வு என்ன என்பது மட்டும் தான், பிறரை குறை கூறுவதன் மூலம் தான் எதோ பெரிதாக சாதித்து விட்டதாக சில நண்பர்கள் நினைக்கிறரார்கள், தவறு தனி மனிதனால் எல்லா விசயங்களும் சாதிக்க முடியும் என்றால் நாமும் எப்போது வெற்றி பெற்றிருக்க முடியும், ஆகையால் எது நல்ல தீர்வு என்பதும், அதனை எவ்வாறு நாம் நடைமுறை படுத்துவது என்பது குறித்து நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும், முன்பு இதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நமது சமுகத்தவர் ஒரு இஸ்லாமிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதற்க்கான காரணம் என்ன ? அதை தடுக்க நமது சமுக சங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன ? வெறுமனே நம் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு, தங்கள் நிலையைத் தாழ்த்திக் கொள்வதை விட நம்முடைய நிலையை உயர்த்திக்கொள்ள நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வோம்.



உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கி....



சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,

புதன், 12 செப்டம்பர், 2012

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் விழாவில் முத்தரையர் சமுதாய மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்: மாநில துணைத்தலைவர்

திருச்சி, செப். 12-
முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் விழாவில் முத்தரையர் சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் மங்களா ப.செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மலைக்கோட்டை மாநகர் ஸ்ரீரங்கத்தில் மக்கள் நலப்பணி திட்டங்களையும், ரெங்கநாதர் கோவில் தினசரி நாள் முழுவதும் அன்னதான திட்டத்தையும் தொடங்கி வைக்க நாளை (13-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகை தருகிறார். முத்தரைய மக்களின் வரலாற்று மன்னர் பெரும் பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாநகரில் சிலை அமைத்து தந்து மாவட்டத்திற்கும் மன்னரின் பெயர் சூட்டி பல்வேறு பிரிவுகளாக 29 பட்டப்பெயர்களில் வாழ்ந்த முத்தரைய சமுதாயத்தை ஒரே பட்டப்பெயராக முத்தரையர் என்று அழைத்திட உத்தரவு வழங்கி நம் சமுதாயத்தை பெருமைப்படுத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இந்த நல்ல நாளில் நன்றி மறவாமல் வரவேற்போம்.
முத்தரைய சமுதாய மக்கள் அமைதியாய் கண்ணியத்துடன் பெரும் திரளாக வந்து கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மங்களா செல்லத்துரை அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
NEWS FROM MALAIMALAR

திங்கள், 10 செப்டம்பர், 2012

முத்தரையர் வரலாறு ...??


வரலாற்றின் அவசியம் நம் அனைவருக்கும் தெரிந்ததே...வரலாறு தெரியாதவன் வாழ்வதற்கே தகுதி யற்றவன்...ஒவ்வொரு மனிதனும் தம் முன்னோர்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தகுதி வுடயவர்கள் முயற்சிக்க வேண்டும் அதாவது எழுத்தாற்றல் படைத்தோர் புத்தகமாக எழுதவேண்டும்,பேச்சாற்றல் படைத்தோர் அவர்களது பணியை அவர்கள் வழியில் செயல்படவேண்டும்,ஆனால் அது போன்று நம் சமுகத்தின் வரலாற்றை எழுதவோ பேசவோ தேவையான அளவு நம்மவர்கள் முயற்சி எடுக்கவில்லை...நம்மில் பெரும்பாலனோர் முத்தரயர்களின் ஆட்சி ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே துவங்கியதாக நினைதுகொண்டிருகின்றோம் அனால் களப்பிரர் தமிழ் மண்ணில் கால் வைத்த போதே முத்தரயர்களின் தமிழ் வரலாறு துவங்கிவிட்டது அதை மயிலை சீனி வேங்கடச்வாமி என்ற ஒரு வன்னியரை தவிர வரலாறாக பதிவு செய்ய யாரும் முன்வரவில்லை...குறைந்தபட்சம் களப்பிரர் முத்தரையர் என்பதலேணும் நாம் எழுத முற்பட்டிருக்க வேண்டும்...அண்மையில் நான் குற்ற பரம்பரை அரசியல் என்ற நூலை படிக்க வாய்ப்பு கிடைத்தது,அது முழுக்க முழுக்க கள்ளறுககவே எழுத பட்டுள்ளது,அதை எழுதிய முகில்நிலவன் என்ற தேவர் ஒவ்வொரு வரியிலும...
் வுனற்சிகளை கொட்டியுள்ளார் ,அவரது ஆதங்கம் கள்ளர்களை நல்லவர்களாக காட்ட வேண்டும் YENPATHE.அது போன்று அர்பணிப்பு வுனர்வோடு நம் வரலாற்றை எழுத யாரும் இல்லை,காலம் கடந்து விட்டது...இருந்தாலும் நம் முன்னோர் நமக்கு கொடுக்காத வாய்ப்பை நாம் ஏன் நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க கூடது..NAAMMUTAYA க்ரூபில் அதற்கான தகுதிபடைத்த பலர் இருகின்றிர்கள்...நீங்கள் கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும்.மேலும் வுன்களுக்கு தெரிந்த செய்திகளை முழுவதுமாக எங்களுக்கு(YILANYARKALUKU)தெரியபடுத்துங்கள்..நாங்களும் பின்னலில் அதற்கான முயற்சியெடுக்க அவைவுதவும்...நம் இனத்தில் திறமை வுடையோர் சுயநலத்தோடு இருகின்றனர்...சுயநலமற்ற நாமேனும் அதற்கான முயற்சியில் இறங்குவோம்...சாதி அழிய வேண்டியது,,,ஆனால் அது இந்த மண்ணை விட்டு கண்டிப்பாக அவ்வளவு சாதரணமாக அழிந்து விடாது,கால மாறுதலுக்கு ஏற்ப புதிய அவதாரம் எடுக்குமே தவிர அழியாது.மேலும் சாதி அடிப்படையில் நாம் பலவற்றை இழந்து வருகின்றோம்...இது தெரியாதவர்கள்தான் சாதி இல்லை என்று சொல்லி வருகின்றனர்...அரசியல் துவங்கி அனைத்திலும் சாதிதான் அரசோச்சி வருகின்றது.,.
 
-துரை ராஜகுமாரன் 

கருத்து எடுக்கப்பட்டது : முத்துராஜா ஷேரிங் க்ரூபில் இருந்து

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சி.பி.சிற்றரசு பற்றி கவியரசர் கண்ணதாசன் தான் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகத்தில்....

சி.பி.சிற்றரசு பற்றி கவியரசர் கண்ணதாசன் தான் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகத்தில்....
 

 

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கூனி மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா

மண்டபம், : மண்டபம் அம்பலகாரத்தெரு கூனி மாரியம்மன் கோயில் 166ம் ஆண்டு முளைப்பாரி விழா ஆக.28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
இதை முன்னிட்டு தின மும் இரவு செந்திவேல் தலமையில் வாலிபர்களின் ஒயிலாட்டம் நடந்தது. கட ந்த 4ம் தேதி இரவு அம்மன் கரகம் தென் கடற்கரையி லிருந்து ஊர்வலமாக கோ யிலை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்கு வீதி உலா சென்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், ஆடுகள் பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று மாலை அம்மன் கரகத்துடன் முளைப்பாரி சுமந்து ஊர்வலம் சென்ற பெண்கள் பாரிகளை கடலில் கரைத்தனர். இரவு கிராமிய தெம்மாங்கு கலைநிகழ்ச்சி நடந்தது.
ஏள்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள் செல்வராஜ், ரமேஷ், பூசாரி குமார், கவுன்சிலர் முனியசாமி, தண்டல் முருகானந்தம், ராஜேந்திரன், ஷாபு ராஜேந்திரன், நம்புவேல் மற்றும் முத்தரையர் இளைஞரணியினர் செய்திருந்தனர். வருகிற 11ம் தேதி குளுமை பொங்கலுடன் விழா நிறைவு பெறுகிறது.

NEWS FROM : DINAKARAN

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

"சிந்தனை சிற்பி" இரண்டாம் மறு பதிப்பு


சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
இவரது இயற்பெயர் சின்னராஜ். கா
ஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். 1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
-திருமேனி


சில தினங்களுக்கு முன்பு இங்கே மரியாதைக்கு உரிய திரு. திருமேனி அவர்கள் எழுதிய செய்திக்கு திரு. வேலூர் சண்முகம் "முத்தரையர் இணையத்தில்" வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு ..
திரு சி.பி சிற்றரசு , குறித்த விவரங்கள் விளக்கமாக சில காலங்களக்கு முன்னர் நமது குழுமத்தில் பதிவிட்டிருந்தோம் ,அப்போது நண்பர்கள் அவர் நாயுடு என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி சந்தேகங்களும் எழுப்பப்பட்டது அப்போது நமது நண்பர் திரு மணிமாறன் போன்றோர் அவர் முத்தரையர் தான் முத்தரையர் சங்க நிறுவுனர் திரு வேங்கட சாமி அவர்களும் நாயுடு என்றே கூறப்பட்டார் என்பதை சுட்டி காட்டி பதிவிட்டிருந்தோம் .நிற்க தற்போது எனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது ,மற்ற இடங்களில் பதிவு செய்யப்பட்ட பின்பு எனக்கு அனுப்ப பட்டிருந்தது அதில் அவரை பற்றிய தகவல்கள் அவரின் அரசியல் பற்றியவையும் இருந்தது ,கருணாநிதிக்கும் அவருக்கும் கருத்து வேறு பாடு காரணமாக அதிமுகவுக்கு சென்று விட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அதோடு அக்கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது .திரு .சி .பி சிற்றரசு பெயர் வேலூர் மாவட்ட ஆட்சியாளார் கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடபட்டிருந்தது .
சி.பி .சிற்றரசு மாளிகை வேலூர் - இது தான் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலுகம் ,பாலாற்றங்கரை ஒட்டி சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது ,இந்த அலுவலகத்தை ஒட்டி முத்தரையர் இன மக்கள் மற்றும் முதலியார் இன மக்களும் தலித்துகளும் வாழும் பகுதி ,இது மூன்றாம் நிலை நகராட்சியாக சென்ற திமுக ஆட்சி காலத்தில் தரம் உயர்த்தப்பட்டு முத்தரையர் இனத்தை சார்ந்த திருமதி ,ஆர்.பி, ஜெயலக்ஷ்மி ஏழுமலை ,முதல் மற்றும் கடைசி நகராட்சி தலைவர் .இப்போது இது வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது .திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களின் மகன் திரு ,சசிகுமார் அவர்கள் மாமன்ற உறுபினராக வெற்றி பெற்று வெற்றிகரமாக சிறப்பாக செயல் பட்டு வருகிறார் ,இவரது தந்தை திரு ,ஆர் .பி ஏழுமலை அவர்கள் திமுக ஒன்றிய செயலாளராக நீண்ட காலமாக இறுந்து வருகிறார் ,வேலூர் அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தி ,நம் மக்களக்கு முடிந்த அளவுக்கு சென்ற ஆட்சி காலத்தில் அனைத்து உதவிகளும் புரிந்தார் ,அனைத்து நல திட்டங்கள் ,இலவசங்கள் என அனைத்தும் தாராளமாக கிடைத்தது .இவரது மைத்துனர் திரு சக்கரவர்த்தி திமுக நகர செயலாளர் .
அதில் ஒரு உண்மை மறுக்கப்பட்டிருக்கிறது ,தெரிய வில்லையா அல்லது தவிர்க்கப்பட்டதா என்று தெரிய வில்லை ,அது வேலூர் ஆட்சியர் அலுவலகம் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்டது ,அந்த மாளிகைக்கு சி ,பி சிற்றரசு மாளிகை என்று பெயர் சூடியவரும் அவர்தான் ,அதை திறந்து வைத்தவரும் அவர்தான் என்பதை நமது நண்பர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்
உண்மையில் இங்கு வாழும் நமது இனத்து மக்களக்கு பெரும்பான்மையோருக்கு அவர் முத்தரையர் என்று தெரியாது ,எனக்கும் கூட மணிமாறன் அவர்கள் கூறிய போதுதான் தெரியும் .அதேபோல் திரு முத்தையா முரளிதரன் அவர்கள் நம்மவர் என்றும் கூறியதால் நமது இணைய தளத்திலும் போட்டிருக்கிறோம் ,ஆனால் சமிபத்தில் வேறு ஒரு இனத்தின் இணையதளம் ஒன்றை பார்க்க நேரிட்டது அதில் அவர்களும் முத்தையா முரள்தரன் அவர்களின் இனத்தை சார்ந்தவர் என்று பதிவிட்டிருக்கிரார்கள் ,நாமக்கல் நண்பரும் இதையே தான் என்னிடத்தில் கேட்டார் காரணம் முரள்தரனின் மனைவி அந்த இனத்தை சார்ந்தவர் நன்றாக தெரியும் என்றும் கூறினார் .காரணம் ஒரு நாயடு நண்பர் ஒருவர் சிற்றரசு எங்களவர் என்று என்னிடம் கூறினார் ,ஆக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியது நிறைய உள்ளது .
 
சில தினங்களுக்கு முன்பு இந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம் இது தொடர்பாக மேலும் சில புகைப்படங்கள் முத்தரையர் (முத்துராஜா) ஷேரிங் க்ரூப்பில் திரு. திருமேனி அவர்கள் பதிவிட்டு உள்ளார்கள் அது உங்களுக்காக....

 

திங்கள், 3 செப்டம்பர், 2012

குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்சி, செப். 1: திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் வழிப்பறி, நகைப் பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களைத் தடுக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற இந்தச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸôர், கொள்ளையர்களை பிடிப்பதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார். இளைஞரணிச் செயலர் பெரியகோபால், ஒன்றியச் செயலர் விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபரில் மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

NEWS FROM DINAMANI

ஆகாயத்தாமரைகளை அகற்ற முத்தரையர் சங்கம் கோரிக்கை


திருச்சி: "திருச்சி உய்யக்கொ ண்டான் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்றவேண்டும்' என, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடந்தது. பொதுச்செயலாளரும், மாவட்டத் தலைவருமான மரு.பாஸ்கரன் தலைமை வகித்தார். இளைஞரணிச் செயலாளர் பெரியகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலி ல் நித்ய அன்னதான திட்டத்தை அறிவித்து, அதை துவக்கி வைக் க வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவை சங்கம் சார்பில் குடு ம்பத்துடன் வரவேற்கவேண்டும். கல்வி வேலைவாய்ப்புகளில் பி.சி., பட்டியலில் உள்ள முத்தரையருக்கு பத்து சதவீதமும், எம்.பி.சி., பட்டியலில் உள்ள முத்தரையருக்கு ஐந்து சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருச்சி சத்திரம் பஸ்ஸ்டா ண்ட்டுக்கு அண்ணாமலை முத்துராஜா பஸ்ஸ்டாண்ட் என்று பெயர் சூட்டிட திருச்சி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. இன்றுவரை பெயர் சூட்டிட மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக பெயர் சூட்டிட முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.ஆகாயத்தாமரை அகற்றம்: விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால் மாநகரத்தில் ஓடும் உய்யக்கொண்டான் ஆறு மற்றும் வாய்க்கால்களை தூர் வாருவதுடன் ஆகாய தாமரைகளை அகற்றி நீரோட்டம் தடையில்லாமல் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, தூர் வாரும் மண்ணை அங்கிரு ந்து அப்புறப்படுத்தவேண்டும்.கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வழங்கவேண்டும் என்று மத்திய அரசு அலுவலகங்கள் முன் சங்கம் சார்பில் அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
NEWS FROM DINAMALAR

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் கேட்டு மத்திய அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் முத்தரையர் சங்கம் தீர்மானம்

திருச்சி,: கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்கக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முத்தரையர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாவட்ட தலை வர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால் உய்யக்கொண்டான் ஆறு மற்றும் வாய்க்கால்களை தூர்வாருவதுடன் ஆகாய தாமரைகளை அகற்றி நீரோட்டம் தடையில்லாமல் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் பிசி பட்டியலில் உள்ள முத்தரைய ருக்கு, 10 சதவீதம் உள் ஒதுக்கீடும், எம்பிசி பட்டியலில் உள்ள முத்தரையர்களுக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடும் வழங்கிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபரில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, மாநகரில் வழிப்பறி, செயின்பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. ஹெல் மெட் போடாதவர்களை பிடிக்க தீவிரம் காட்டும் போலீஸ், கொள்ளையர்களை பிடிக்க அக்கறை காட்ட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இளைஞரணி செய லாளர் பெரியகோபால், ஒன்றிய செய லாளர் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.

செய்தி தினகரன் நாளிதழிலிருந்து