திங்கள், 29 அக்டோபர், 2012

சிங்க லோகோவுடன் வருகிறது முத்தரையர் டிவி!!!

சிங்கத்தின் மீது ராஜா ஒருவர் நின்றபடி ஒரு லோகவை மையமாக வைத்து விரைவில் துவங்கவுள்ளது முத்தரையர் டிவி . இந்த தொலைக்காட்சியானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தது என்றும் நமக்கு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேனலானது திருச்சியை மையாமாக கொண்டு செயல்படவுள்ளதாகவும் அந்த சேனல் சார்ந்த ஒருவர் கூறினர். இதன் நோக்கம் என்ன என கேட்டதுக்கு எங்கள் சமுதாய மக்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை எழுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதி என்றார். இந்த தொலைக்காட்சியின் மூலம் பழங்காலத்து ராஜாகளின் வாழ்க்கை வரலாறுகளை இளையதளைமுறை அறிய வாய்ப்பாக இருக்கும் என கூறி முடித்தார்.
 
NEWS FROM : TAMILAN DDH

வெள்ளி, 26 அக்டோபர், 2012

நத்தம் தொகுதியில் ஆற்காட்டார் போஸ்டர்!



திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் சொந்தத் தொகுதி முழுக்க ஆற்காடு வீராசாமிக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர், சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

'நன்றி... நன்றி... தி.மு.க ஆட்சியில் மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நாளில் மக்கள் கஷ்டங்களை அறிந்து ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேர மின்வெட்டுக்கு உங்களை விமர்சித்ததற்கு, உங்களை உணர்ந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இவண்: பொதுமக்கள் மற்றும் சிறு, குறுந்தொழில் முனைவோர் நத்தம் தொகுதி' என அச்சிடப்பட்ட போஸ்டர்கள் கடந்த சனிக்கிழமை ஒட்டப்பட்டது.
...

இதைப்பார்த்து டென்ஷனான அ.தி.மு.க-வினர் அந்தப் போஸ்டரைக் கிழிப்பதும், அடுத்த நாள் மீண்டும் போஸ்டர் ஒட்டப்படுவதுமாக இரண்டு நாட்கள் நடந்த காமெடிக் காட்சிகளின் முடிவில் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க செயலாளர் விஜயன் உள்ளிட்ட ஆறு தி.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. இந்த விஜயன்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஸ்வநாதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.

- ஜூ.வி.

முத்தரையர் பாசறை நிர்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டை, : தமிழ்நாடு முத்தரையர் இளைஞர் பாசறை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் காந்திபூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவர் ஆறுமுகம், தலைவர் ராமையா, துணை தலைவர் பழனியப்பன், செயலாளர் தனபால், துணை செயலாளர் கோவில்பட்டி தவசி, பொருளாளர் செல்லத்துரை, புதுக்கோட்டை நகர செயலாளர் கலைச்செல்வன் மற்றும் நகர, மாவட்ட, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல், தொழில், கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற்றிட முத்தரையர் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். தமிழக அரசு இலவசம் என்ற பெயரில் நாட்டின் பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தி அதற்கு செலவு செய்யப்பட வேண்டிய நிதியை மாவட்ட வாரியாக தொழிற்சாலைகள் அமைத்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
News From : DINAKARAN

வியாழன், 25 அக்டோபர், 2012

மாற்றம் வேண்டி மன்னர் குலம்!

      சில சமூகங்கள், இல்லை, பல சமூகங்கள் பெயரால் உயர்வு தேடிக்கொள்ளும் பொருட்டு, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், தங்களை, நெருப்பின் மைந்தர்கள் எனவும் கடவுளைப் போன்றோர் எனவும் கோ மகன் எனவும் இன்னும் பலவாறு பொருள்படும் வகையிலும், பெயர் (போலியாக உயர்ந்த) மாற்றிக்கொண்டன. அதற்கு முன்பு அவர்கள் இருந்த இடத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும். இவர்களுக்கு மத்தியில், தோன்றிய காலம் முதலே ஒரேப் பெயருடன் மங்காத புகழ் கொண்ட கூட்டமொன்று தென்னகத்தில் உண்டென்றால், அது இந்நாட்டு முத்தரையர் குலமன்றி வேறெதுவும் இல்லை இல்லை என உரக்கச் சொல்லலாம். இது மட்டுமல்ல ஏனையோரின் மொத்த
ஆயிளுலுமே முத்தரையர் தம் அனுபவத்திற்கு ஈடாகாது. இன்னும் சொல்லப்போனால், முதன் முதலில் பரம்பரையை மையமாக வைத்து உருவான ஒரே இனமும் முத்தரையர் இனம் தான். ஏனைய இனங்களெல்லாம் தத்தமது தொழிலை மையப்படுத்தி பிரிந்ததுவே ஆகும். பொய் மேல் பொய் சொல்லி, சம்மந்தம் இல்லாதவற்றிர்கெல்லாம் உரிமை கோர நினைக்கும் இவர்களை விட, சரித்திரப் புகழ் வானின் உச்சத்தைக் கடந்த முத்தரையர் குலம் எவ்வகையிலும் குறைந்தது அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். மாறாக, நம்மை நாம் அறியாததே நமது பலவீனம்.

சொல்லும் வரலாறெல்லாம் போலியாய் கொண்ட இவர்கள் எங்கே, உள்ளதைக்கூடச் சொல்லத்தயங்கும் எம் முத்தரையர் குலமெங்கே!!
 
முத்தரையர் செய்யாத தொழிலும் இல்லை
 
அவர் காணாத களம் இல்லை
 
நுகராத துறை இல்லை
 
பெறாத பட்டமும் இல்லை
 
அவரைப் போற்றாத புலவர் இல்லை
 
எட்டாத புகழ் இல்லை
 
கிட்டாத வெற்றி இல்லை
 
கொடாத கொடை இல்லை
 
கட்டாத கோவிலில்லை
 
இவர்க்கு நடுங்காத படையில்லை
 
இவர் எவர்க்கும் அஞ்சியதும் இல்லை
 
முக்கடல் வற்றுவதுமில்லை
 
முத்தரையர் தோற்பதுமில்லை
 
நம்பினோர் கெட்டதில்லை
 
நாலடியாரில் வேறு மன்னர் பெயரே வருவதில்லை
 
இவர்களிருந்தால் பல்லவனுக்கு பாதகமில்லை
 
பாண்டியனுக்கு குறையில்லை பலமில்லை
 
சேரனுக்குச் சேனையில்லை
 
தமிழுக்குத் தாழ்வில்லை
 
இவர்களின்றி சோழனுக்குச் சொந்தமில்லை
 
கொடும்பாளூர் கோட்டை இல்லை
 
களப்பிரர் காலமில்லை
 
புத்தனுக்கு மதமில்லை
 
சமணத்துக்குச் சமயமில்லை
 
வைணவத்துக்கு வாழ்வில்லை
 
சைவத்துக்குச் சரித்திரமில்லை
 
ஈசனுக்குக் கண்ணில்லை
 
குடைவரை கோவிலில்லை
 
கொள்ளிடக்கரை இல்லை
 
வைகைக்கு வளமில்லை
 
மஞ்சு விரட்டில்லை
 
மூவேந்தனுக்கு மகனும் இல்லை
 
இவர்களின்றி ஈராயிரமாண்டு தென்னிந்திய வரலாறே இல்லை
 
இன்றுவரை இவர்களால் மாறாத அரசும் இல்லை
 
இருந்தும் இவர்கள் கர்வம் கொண்டதில்லை
 
எவரையும் தாழ்த்தி நடத்தியதும் இல்லை
 
அப்படிப்பட்டவர்க்கு இவர் பிறக்கவும் இல்லை
 
(முத்து)ராஜா என்ற பெயர் எவர்க்கும் இல்லை
 
இவர்க்கு அடங்காத மாந்தரில்லை
 
விரிக்காத வலை இல்லை
 
பார்க்காத பாளையம் இல்லை
 
ஆடாத வேட்டை இல்லை
 
காக்காத காவல் இல்லை
 
சேர்வை எனும் இவர்க்கு நிகரான தலைவனில்லை
 
கண்ணப்பரை விஞ்சிய பக்தனுமில்லை
 
மூப்பரினும் மூத்தோரில்லை
 
தலையாரியினும் தலைசிறந்தோரில்லை
 
பூசாரியினும் புண்ணியரில்லை
 
நாயகரினும் கொற்றவனில்லை
 
முத்தரையர் விதைக்காது முப்போகம் விளைவதில்லை
 
அடக்காத காளை இல்லை
 
இவர்போல் தமிழுணர்வு யார்க்குமில்லை
 
இவர்போல் கீர்த்திமிகு நீண்ட வரலாறு இன்றைக்கு யவர்க்கும் இல்லை
 
பரங்கியரை எதிர்க்கப் பயந்தவரில்லை
 
எச்சபைக்கும் நீதி சொல்ல அஞ்சியவரில்லை
 
இவர்கள் பலம் இவர்களே அறிவதில்லை
 
மற்ற மக்கள் இவர்களிடம் எளிதாய் சண்டைக்கு வருவதில்லை
 
ஏனெனில் இவர்கள் அவ்வளவு எளிதானவர்கள் இல்லை என்பதை அவர்கள் அறியாமலில்லை
 
முத்தரையர் போல் மக்கள் வளம் யார்க்கும் இல்லை
 
இவர்கள் இல்லாத இடமில்லை
 
ஒன்று சேரப் போவதுமில்லை
 
சேந்தாலும் யாரும் விடப்போவதுமில்லை
 
தாம் முத்தரையர் தாமென்று சில முத்தரையர்க்கே தெரிவதுமில்லை
 
முத்தரையர் பற்றி திரைப்படம் இல்லை
 
முத்தரையர்க்கென்று நவீன பாடல்களும் இல்லை
 
எல்லோரிடமும் உணர்வும் இல்லை
 
நிறுவனங்களுக்கோ கடைகளுக்கோ முத்தரையர் எனும் பெயரை வைப்பதுமில்லை
 
அனைவரும் முத்தரையர் எனும் சரியான பெயரைப் பயன்படுத்துவதுமில்லை
 
முத்தரையர் வாக்கு முத்தரையர்க்கே விழுவதில்லை
 
அரசியலில் செல்வாக்கில்லை
 
பொருளாதார பலமில்லை
 
சாதிக்கென்று பலமான ஒரு கட்சியும் இல்லை
 
இனத்திற்குள் ஒற்றுமை இல்லை
 
பாடநூலில் முத்தரையர் வரலாறில்லை
 
மன்னருக்கு மணிமண்டபமும் இல்லை
 
ஊடகத்திலும் வலுவாய் இல்லை
 
முத்தரையர் செய்திகள் புத்தகங்கள் சரியாய்ச் சென்று சேர்வதுமில்லை...
இருப்பினும் எம்மினமும் இவ்வுலகில் சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். இவைகள் எல்லாம் இல்லாத போது, வெறும் நீண்ட வரலாற்றையும் மிகுந்த மக்கள் தொகையையும் மட்டுமே வைத்துக்கொண்டு “முத்தரையர்” எனும் பெயர் அனைவருக்கும் தெரிவதில்லை தெரிவதில்லை என்றால் எப்படித் தெரியும்? சாத்தியமில்லை! என்று மாறும் இந்த நிலை? இல்லை மாறுவதற்கு ஏதேனும் அறிகுறி தான் உண்டா? சங்கங்கள் மட்டும் சந்துக்குச் சந்து முளைத்துக் கொண்டிருக்கிறதே தவிர, சாதனை என்பது பெரிதாக இல்லை!
வந்தாரை வாழ வைக்கும் முத்தரையர் சமுதாயமே, நீ இவ்வுலகறிய வாழப்போவது என்று!!!...
மாற்றம் நோக்கி மன்னர் குலம் -
 
 
முத்தரையர் விமல் விக்னேஷ்...


 

புதன், 24 அக்டோபர், 2012

சௌதி அரேபியா நாட்டில் நமது உறவுகளால் சிறப்பாக கொண்டாடப் பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா - பாகம் II

சௌதி அரேபியா நாட்டில் நமது உறவுகளால் சிறப்பாக கொண்டாடப் பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா - பாகம் II
புகைப்படங்கள் உதவி : ரமேஷ் முத்தரையர்
 


















 

செவ்வாய், 16 அக்டோபர், 2012

முத்தரையர் பிறந்த நாள் கலவர வழக்கு 29க்குஒத்திவைப்பு

 
 
              திருச்சி, : திருச்சியில் முத்தரையர் பிறந்தநாளன்று கலவரம் ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட முத்தரையர் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு, ரவிசங்கர் உள் பட 9 பேரில் ராம்பிரபு தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் நீதி பதி வேல்முருகன் உத்தரவின்படி, இந்த வழக்கு 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நேற்று 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி ராஜசேகரன், வரும் 29ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

NEWS FROM : DINAKARAN

திங்கள், 15 அக்டோபர், 2012

நேர்காணலில் பங்கேற்காதவருக்கு இளைஞரணி பதவி : "மாஜி' மந்திரியால் தி.மு.க.,வில் "திகுதிகு'

தி.மு.க., "மாஜி' அமைச்சர் நேருவின் ஆதரவாளர் என்பதால், நேர்காணலில் பங்கேற்காதவரை, இளைஞரணி அமைப்பாளராக நியமனம் செய்ததால், மாவட்ட, தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தி.மு.க., இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளருக்கான நேர்காணல், இரண்டு மாதங்களாக, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும், சமீபத்தில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பதவி அறிவிக்கப்பட்டது. இந்த நியமனம், எல்லா மாவட்டங்களிலும், தி.மு.க.,வில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ஆனந்த், சென்னையில் நடந்த நேர்காணலில் பங்கேற்கவே இல்லை. கடந்த சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு, தோல்வியடைந்தவர். நேருவின் தீவிர ஆதரவாளர் என்பதால், நேர்காணலில் பங்கேற்காத நிலையிலும் ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது, திருச்சி மாவட்ட, தி.மு.க., இளைஞரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும், புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆனந்த்துக்கு, சீட் கொடுத்த போதே, கட்சியில் புகைச்சல் கிளம்பியது. தேர்தலுக்கு பின் நடந்த போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவற்றில் ஆனந்த் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. மாவட்டத்தில், முத்தரையர் சமுதாயத்தில் பலமான நபரை, உடன் வைத்துக் கொள்ள நேரு திட்டமிட்டு, நேர்காணலுக்கு வராத ஆனந்த்துக்கு, மாவட்ட அமைப்பாளர் பதவியை வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது தான், மாவட்டத்தில், எதிர்கோஷ்டியாக உள்ள முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி ஆகியோருக்கு ஈடுகொடுக்க முடியும் என்று நினைக்கிறார். இவ்வாறு தி.மு.க.,வினர் கூறினர்.

இதுகுறித்து ஆனந்த் தரப்பில் விசாரித்த போது, நேர்காணலுக்கு ஏன் செல்லவில்லை என்று, தி.மு.க., தலைமையிடம் கடிதம் கொடுத்து விட்டதாக, கூறப்பட்டது.

NEWS FROM : DINAMALAR



வெள்ளி, 12 அக்டோபர், 2012

புதன், 10 அக்டோபர், 2012

ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், நேற்று அதிகாலை நடந்த ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சந்தனக்கூடுக்கு மலர் தூவி வரவேற்றனர். ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா 838 ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா, செப்., 17ல் மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு துவங்கியது.நேற்று மாலை 5 மணிக்கு போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மஹாலில் நடந்தது. யானை, குதிரை, தாரை, தப்பட்டையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக, இன்று காலை 5 மணிக்கு தர்கா வந்தது. நான்கு சக்கர சப்பரத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை, கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மலர்கள் தூவி வரவேற்றனர். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின், தர்கா வாசலில் வைக்கப்பட்டது. யாதவர் மற்றும் முத்தரையர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை இழுத்து வந்தனர். ஊர்வலத்தில் ஆதி திராவிட சமூகத்தினர் தீப்பந்தங்களை பிடித்தும், பிறைக் கொடி ஏந்தியும், பெண்கள் வழிநெடுகிலும் குலவையிட்டும் வந்தனர்.
NEWS FROM : DINAMALAR

செவ்வாய், 9 அக்டோபர், 2012

முத்தரையர் உட்பிரிவு

1முத்தரையர்16முத்திரிய நாயுடு
2முத்திரி17முத்திரிய கவுண்டர்
3முத்திரியர்18முத்திரிய ஊராளிக் கவுண்டர்
4முத்துராயன்19முத்திரிய வன்னியகுல சத்திரியர்
5முத்ராசா20சூரிய குல முத்தரையர்
6முடிராஜ்21வலையர்
7முதிராஜ்22செட்டிநாடு வலையர்
8முத்துராசா23கண்ணப்பர் குல வலையர்
9முத்தரசர்24காவற்க்காரர்
10முத்துராச்சா25வேடுவர்
11அம்பலம்26வேட்டைக்காரர்
12அம்பலக்காரர்27பாளையக்காரர்
13சேர்வை28வளையக்காரர்
14சேர்வைக்காரர்29பூசாரியார்
15முத்திரிய நாயகர்

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மாவீரனுக்கு அஞ்சலி...!!!


 


மாவீரன். ஆலங்குடி A.வெங்கடாசலம் நினைவிடம், வடக்காடு (இன்றைய அஞ்சலி புகைப்படங்கள்)
 
 
படங்கள் உதவி : V.P..ராஜன்

சனி, 6 அக்டோபர், 2012

முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07





முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07
இரண்டாவது வருடமும் இதோ முடியப் போகிறது, இதுவரை யார் உண்மை குற்றவாளி என்று எமக்கு தெரியவில்லை, விசாரணை நடத்தப் படுகிறதா ? என்றும் தெரியவில்லை, யாருக்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்தாரோ அந்த மக்களும் மறந்துப் போனார்கள், யாருக்காக தன் மூச்சு நிற்க்கும் வரை விசுவாசமாக இருந்தாரோ அவர்களே ஆட்சிக் கட்டிலில் இருந்தும், இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு என்று அறிந்துக் கொள்ளும் சாதாரணமான ஆர்வம் கூட இல்லை, இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி யோ அல்லது சிபிஐயோ நடத்த வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைத்தும் அது பற்றிய அக்கறையோ, ஆர்வமோ அரசாங்கத்திற்க்கு இல்லாமல் போய்விட்டது, படுகொலை நடந்த அடுத்த 15 தினங்கள் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தினை ஸ்தம்பிக்க வைத்த முத்தரையர்கள் பின்னர் ஏனோ இதனை மறந்து போனார்கள், முத்தரையர் இனத்தின் வளர்ச்சியை தடுக்க நினைத்து இந்த மாபாதகத்தை செய்த பதருகளே, ஒன்றை மாத்திரம் மனதில் கொள்ளுங்கள், வீழ்வதும், எழுவதும் எமக்கு புதிதல்ல எம்மை நிரந்தரமாக வீழ்த்திவிட்டதாக மனப்பால் குடிக்க வேண்டாம்..!! யாம் எழும் நாள் தொலைவில் இல்லை இந்த நேரத்திலும் நாம் தமிழக அரசினையும்/ தமிழக முதல்வரையும் வேண்டுகிறோம், உங்களின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகவும்,உங்களால் அமைச்சராக்கியும், மாநில அமப்புச் செயலாளராகவும் அழகு பார்க்கப் பட்டவர், முத்தரையர் இனத்தின் பாதுகாவலனாக இருந்தவர் படுகொலை செய்யப்பட்டு ஆண்டுகள் இரண்டு ஆகின்றது, உங்கள் மேல் இத்தனை மரியாதையையும், பாசத்தையும் வைத்தவர் யாரால் கொல்லப்பட்டார் என்று நீங்கள் தானே அறிந்து கொள்ள வேண்டும் ? உங்களுக்காக தானே உழைத்தார் ? இனியும் தாமதிக்காமல் இப்பொழுதாவது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அதுதான் அவரால் உங்களுக்கு ஆதரவாளரார்களாக மாற்றப்பட்ட முத்தரையர்களுக்கு நீங்கள் செய்யும் பிரதிகரமாக இருக்கும், முத்தரைய பெருமக்களே...!! நாம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் நம்மை அடிமைபடுத்த நினைப்பவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுத்துக் கொண்டே இருக்க போகிறோம்.. ? நமக்கான அரசியல் என்ன ? நம் இனத்தவர்களுக்கு ஏன் வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன ? ஊருக்கு ஊர் வெட்டிப் பெருமை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பேசப் போகிறோம் ? ஒருபக்கம் இளைய தலைமுறை குடிப் பழக்கத்திற்க்கு அடிமையாக்கப் படுகிறது, மறு பக்கம் நமக்கான அரசியலை ஏற்று நடத்த சரியான தலைமை இல்லை, இன்னும் சொல்லப் போனால் வருகின்ற தலைமைகள் கூட தங்களின் சுய லாபத்திற்காக நம்மை மற்றவர்களிடம் அடகு வைத்துவிடுகிறது, இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன ? நாம் தெளிவடைவது எப்போது ? அக்டோபர் 7 ந் தேதியுடன் ஆண்டுகள் இரண்டு ஆகிறது, நம்முடைய மாவீரன் நம்மை விட்டு சென்று முத்தரையர் இனமே.. !! உனக்காக உழைத்திட்ட, உன்னுடைய பாதுகாப்பிற்காக தன்னைப் பாதுகாக்க மறந்த மாவீரருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உங்களை வேண்டுகிறோம், அது அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்..!! என்பதை நாம் அறியாததல்ல...
மாவீரனே...! உன்னை நாங்கள் மறக்கவும் மாட்டோம்.. ! உன்னை எங்களிடமிருந்து பிரித்தவர்களை மன்னிக்கவும் மாட்டோம் என்றும் உன் வழியில் ........
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
 

தண்ணிர்....! தண்ணிர்....!! - நமது பார்வையில்.....

 
காவேரி, முல்லைப் பெரியார், பாலாறு தண்ணிரோடு பிரச்சனைகளையும் சிலருக்கு அரசியலையும் தரும் தமிழகத்தில் ஜீவ நதிகளை கடந்து... நமக்கு தண்ணிரை தாரளமாக தருபவள் பூமித்தாய், தாய்தானே என்று அவளின் மார்பில் துளையிட்டு தண்ணீரை உரிமையோடு உறிந்து கொண்டிருக்கிறோம், சாதாரமான ஒரு சிறு கணக்கிட்டு நோக்கினால் .... தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடி சராசரியாக ஒரு நபருக்கு ஒரு நாளைய பயன்பாடு 40 லிட்டர் என்று வைத்துக்கொள்வோம், 80000000 x 40 = 3,200,000,000 லிட்டர், இதில் குடி நீர், சமையல் பயன்பாடு கழித்துப் பார்த்தால் ஒவ்வறுவரும் சுமார் 25 லிட்டர் தண்ணீரை பிர பயன்பாடுகளுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள், முன்புபோல் இப்பொழுதெல்லாம் யாரும் ஆற்று நீரையோ (வந்தால்தானே..?) குளத்து நீரையோ, குளிக்க மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு உபயோகிப்பதில்லை, அப்படியானால் ஒவ்வருவறும் ஒரு நாளைக்கு 25 லிட்டர் நீரை ( 25 x 2,000,000,000) பூமியில் இருந்து உறியப்படும் நீரைத்தான் பயன்படுத்துகிறோம், இதற்கான மாற்றுவழி என்ன ? ஒவ்வறு வருடமும் இரண்டு லட்சம் பொறியாளர்கள் பட்டம் பெற்று வெளிவருகிறார்கள், இவர்களில் இவற்றைப் பற்றி சிந்திக்க தெரிந்தவர்கள் ஒருவர் கூடவா இல்லை ? கம்யூட்டரும், ஆட்டோமொபைலும் நாளைய தேவைகளுக்கு போதுமா ? தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் ? குடிக்க/ சமைக்க தவிர பிற தேவைகளுக்காக கடல் நீரை பயன்படுத்த வழி உள்ளதா ? அல்லது உபயோகித்த நீரை மீண்டும் பயன்படுத்தும் தொழில் நுட்பம் எளிமையாக்கப் படுமா ? இதற்கான தீர்வினை யார் தருவார் பூமிதாய் மிகவும் பொருமையானவள் எவ்வளவு வேண்டுமானாலும் உறிந்துக் கொள்ளுங்கள்.. !!!! அதே நேரம் நினைவில் கொள்ளுங்கள் அவள் பொறுமை இழக்கும்போது அவளை மனசாட்சி இல்லாதவள் என்று நா கூசாமல் நாம் தீட்ட வேண்டி வரும்..!! நாம் செய்த தவறை மறந்து...!!!

வெள்ளி, 5 அக்டோபர், 2012

பிளாஸ்டிக் பற்றிய ஒரு முக்கிய தகவல்

 
 
ந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கலாம்?
நீங்கள் வாங்குகிற எந்த ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது பாட்டிலின் அடியிலும் முக்கோண வடிவமிட்டு ஓர் எண் இருக்கும். ஒன்று முதல் ஏழு வரை இருக்கும் இந்த எண்தான் அந்த பிளாஸ்டிக்கின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமரின் தரத்தைக் குறிக்கும். ஒரேவிதமான பிளாஸ்டிக்கையெல்லாம் ஒன்றாக உருக்கி, மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவதற்காக இந்த எண்ணைக் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த எண்ணை வைத்து எந்தவிதமான பிளாஸ்டிக்கை எதற்காக உபயோகப்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.



எண்: 1 PET
பொதுவாக ஒருமுறை உபயோகப்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.

எண்: 2 - HDPE (High density poly ethylene)
ஷாம்பூ டப்பாக்கள், சில கடினமான பிளாஸ்டிக் பைகள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.
எண்: 3 - PVC ( Poly vinyl chloride)
உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், கிளீனிங் பவுடர்கள் இருக்கும் டப்பாக்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. டையாக்ஸின் போன்ற நச்சுவாயுக்களை வெளிப்படுத்துவதால் உடலுக்குப் பலவிதத் தீங்குகளை விளைவிக்கக் கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்கக்கூடாது.

எண்: 4 - LDPE (Low Density poly ethylene)
இந்த எண் உடைய பிளாஸ்டிக்குகள் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்த ஏற்றது. மற்ற பிளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டு.

எண்: 5 - Poly propylene
சூடான பொருட்களை வைக்கவும், பொதுவான உணவுப் பண்டங்களை வைக்கவும் பயன்படுத்தக் கூடியது. இந்த வகை பிளாஸ்டிக் பொருளை மைக்ரோ வேவிலும் உபயோகப்படுத்தலாம்.

எண்: 6 - Polystyrene
உணவுப் பொருட்கள் வைத்து சாப்பிடலாம். ஆனால், எடுத்துச்செல்ல ஏற்றதல்ல.


1 முதல் 4 எண் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் உணவு எடுத்துச்செல்லத் தகுதியானவை அல்ல. இவை வெப்பச்சூழல் மாறும்போது கார்சினோஜின் எனப்படும் வாயுவை வெளியிடுவதால், இது புற்றுநோய்க்குக் காரணமாக அமையும்.

5, 6 எண் கொண்டவை உணவு, தண்ணீர் ஆகியவை வைக்கவோ, எடுத்துச்செல்லவோ தகுதியுடையவை.


எண்: 7 எண் கொண்ட பாலிகார்பனேட் பிளாஸ்டிக் வகைகளை உலக நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவை இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.