இந்த தொகுதியில் உள்ள, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில், முத்தரையர் சமுதாயத்தினர், 50 சதவீதத்துக்கு மேல் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த தேர்தலில், தி.மு.க., சார்பில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஆனந்த் போட்டியிட்ட போதும், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காலம்தொட்டே, அ.தி.மு.க.,வை ஆதரித்து வரும், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், ஜெயலலிதாவை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
அப்படியிருந்தும் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள முத்தரையர் சமுதாய பிரமுகர்களுக்கு முக்கிய பதவி ஏதும் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக, கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மணிகண்டம், அந்தநல்லூர் யூனியன் தலைவர்கள், அதேபோல், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பதவிகளும், மேற்கண்ட யூனியன் தலைவர்கள் வசமே உள்ளது. அவர்கள் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள்.ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதி செயலாளராக டைமண்ட் திருப்பதி, ஸ்ரீரங்கம் கோட்டத்தலைவர் லதா ஆகியோரும், முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. மேலும் தற்போது ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ., மனோகரனும், வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆகையால் தொகுதியில் உள்ள அனைத்து கட்சி மற்றும் உள்ளாட்சியின் முக்கிய பதவிகள், முத்தரையர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், முத்தரையர் சமுதாய மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கடந்த, 91ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு வரை, எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற அனைவரும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்பிரமணியன், பரஞ்ஜோதி ஆகியோரும், 96ல், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற மாயவனும் அடங்குவர். கடந்த, 23 ஆண்டுகளில் முத்தரையர் அல்லாத இருவர் மட்டுமே ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் வெங்கடேஷ்வர தீட்சதர், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மட்டுமே.
இப்படியா தொடர்ந்து முத்தரையர் தொகுதியாகவும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவான தொகுதியாகவும் இருந்து வரும் ஸ்ரீரங்கம் தொகுதியில், முக்கிய பொறுப்புகளில் முத்தரையர் புறக்கணிக்கப்படுவதாக, அச்சமுதாய மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி,வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம், அ.தி.மு.க.,வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலிலும்முத்தரையர் முத்திரைகடந்த, 2009ம் ஆண்டு நடந்த, லோக்சபா தேர்தலில், திருச்சி எம்.பி., தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையில், அ.தி.மு.க., வேட்பாளர் குமார், புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய, ஐந்து தொகுதிகளில் பின்தங்கிய நிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சாருபாலா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். அப்போது திடீர் திருப்பமாக, ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும் அதிக ஓட்டுக்களை பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளர் குமார் வெற்றி பெற்று எம்.பி.,யானார். இப்படியாக சாதனை வெற்றிகளை, அ.தி.மு.க.,வுக்கு பெற்றுத்தந்தது தான், முத்தரையர் பெரும்பான்மையாகவுள்ள ஸ்ரீரங்கம் தொகுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக