முத்தரையர் என்ற உணர்வில்லாதவர்கள் இதனை படிக்க வேண்டாம்.....!!!!
நமது தம்பிகளில் சிலர் ஒரு பொதுதளத்தில் முத்தரையர்கள் தமிழகத்தில் பெரும்பான்மை சமூகத்தினர் என்று பெருமையாக குறிப்பிட்டார்கள், அதற்க்கு பதில்சொன்ன வேறு ஒரு பெரும்பான்மை சமூகத்தவர் பதிலினை இப்படி சொல்கிறார், " பெரும்பான்மை பெரும்பான்மை என்கிறீர்களே இதுவரை நீங்கள் சாதித்தது என்ன ?தமிழகத்தில் இன்றைய சட்டமன்றத்தில் எங்களின் பிரதிநிதிதுவம் 63, (சுமார் 30 %), அமைச்சரவையில் எங்களவர்களின் எண்ணிக்கை 7, இன்றையநாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதியாக இருப்பவர்களில் 9 பேர் எங்களவர் (சுமார் 25 %), ஏன் புதுச்சேரி மாநில முதலமைச்சரே நாங்கள்தான்” என்று பதில் சொல்லி இருந்தார், இந்த பதிலினை வாசித்தபோது சற்று எரிச்சலுற்ற எனக்கு இதில் இருக்கும் உண்மை "சுரீர்" என்று உறைத்தது, எவ்வளவு பெரிய உண்மை நாம் பெரும்பான்மை சமூகம் என்று சொல்வது எவ்வளவு பெரிய வெக்ககேடு ? பெரும்பான்மை சமூகமாக இருந்து என்ன சாதித்தோம் என்று நாம் மார்தட்டிக்கொள்வது ? பெரும்பான்மை சமூகமாக இருக்கும் நாம், பெரும்பான்மையானவர்கள்தான் என்று பிறரிடம் நிரூபிக்கும் நிலையில் இருப்பது உங்களுக்கெள்ளாம் உறைக்கவில்லையா ??
நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், நாளு மாதத்திற்க்கு ஒரு அமைச்சரையும் வைத்துக் கொண்டு நாம் பெரும்பான்மை என்றால் ஊரார் சிரிப்பார்கள்தானே...? நாம்ஜெயிக்க முடியாத தொகுதியா "பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி" ஒரே ஒரு கட்சியில் ஒரே ஒரு முத்தரையருக்கு வேட்பாளராக வாய்ப்பளிக்கப்பட்ட தொகுதியில்ஆயிரங்களில் விரல்விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கை உள்ள ஒரு சமூகத்தவன் வெற்றிப்பெற முடியும்போது நாம் எப்படி பெரும்பான்மை என்று பெருமை பேசமுடியும் ? உடனே உணர்வாளர்கள் சொல்வார்கள் நான் ஓட்டுப்போட்டேன் என்று நீயும், நானும் போட்டுவிடுவோம், நாம் எத்தனைப்பேரை போட வைத்தோம் ?
எனது தம்பிகளை போல "தமிழ் தேசியம்" பேச இனி ஒருவன் பிறந்துவர வேண்டும், இல்லாத “திராவிடத்தை” கற்றுக் கொடுத்தவனைவிட அதிகம் பேசுபவன் எனதுமாமனும், மச்சானும், எது என்றே தெரியாத “தேசியத்தை” உயிராய் நேசிப்பவன் எனது தகப்பனும், பெரியப்பனும், “கம்யூனுசம், பொதுவுடமை” குறித்து லெனினுக்கேசொல்லிக் கொடுப்பான் எனது அண்ணன், உலக பொருளாதாரம் தொடங்கி தெருவில் கிடக்கும் குப்பைவரை வாய் கிழிய பேசுவான் ஆனால் "சாதியை" பற்றி மட்டும்பேச மாட்டான், சாதிக்காகவும் பேசமாட்டான், சாதியையே தொடமாட்டான்.
சாதியே இல்லை என்பவர்களும், சாதியை சொல்ல மறுப்பவர்களும் தயவு செய்து உங்கள் சாதி சான்றிதழ்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுங்கள், எண்ணிக்கைகுறைந்தாலாவது எனது இனத்திற்க்கு விடிவு வருகிறதா ? என்று பார்ப்போம்.
இன்னும் என் நண்பர்கள் சிலர் உண்டு வேற்று சாதிகாரன் தவறாக நினைத்துவிடுவான் என்று தான் பிறந்த சாதியை எங்கேயும் சொல்லுவது கிடையாது, நமது சமூக நண்பர்களுக்கு நன்றாக தெரியும் அவரின் நண்பர் எந்த சாதியை சேர்ந்தவர் என்று, அதை அந்த நண்பர் சொல்லக் கேட்டோ அல்லது அவரின் நடை உடை பாவனைகளை வைத்தோ, அல்லது அவர் சார்ந்த பகுதியை வைத்தோ நமது இனத்து நண்பர் கணித்திருப்பார், ஆனால் இவர் மட்டும் தான் எந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்லமாட்டார் இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியுமா ? இது அடிமை தனத்தின் மிச்சமில்லாமல் வேறு என்னவென்று சொல்வது ? வேண்டுமானால் இதனை புதுமையாக " நாகரீக அடிமைதனம் " என்று சொல்லலாம் அல்லது ஆயிரமாண்டுகளுக்கு முன்பு அடிமை படுத்தப்பட்டஇனத்தின் நாகரீக மிச்சங்கள் எனலாம்.
பிறப்பதும், இறப்பதும் "புழுக்கள்" கூட செய்கின்றன, உன் இனம், உனது தந்தை, உனது பாட்டன், உனது முப்பாட்டன், ஏன் நாளை பிறக்கப் போகும் உன் மகன் கூடஅடிமையாய் இருப்பது தெரியாமல், நாகரீகம் பேசுகிறாய்...!! நான் என்ன செய்ய முடியும் என்று வியாக்கியானம் பேசுகிறாய்..!! பாவம் எனது தம்பிகள் உண்மையைக் கூடசொல்ல ஊரான் அனுமதிப்பதில்லை.. அதைப் பற்றிய கவலை என் இனத்தில் யாருக்கும் இல்லை..!!! இதை பயன்படுத்தி மேலும் எனது இனத்தை அடிமையாக்க என்இனத்திற்க்குள்ளேயே சில புல்லுருவிகள், அந்த புல்லூருவிகளின் வேலையே 500 க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்து அடிமைகளாக வைத்திருப்பது, அவர்களை வைத்து ஊர் ஊராக சென்று கூட்டம் நடத்துவது, கூட்டத்தில் யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது, அவர்கள் அழைத்துவரும் சிலர் பேச கேட்டுக்கொண்டு வந்துவிட வேண்டும், அப்புறம் எதற்க்கு கூட்டம் ? யாருக்காக கூட்டம் ? கூட்டம் நடத்தி இதுவரை சாதித்தது என்ன ? யாரிடம் எங்கள் இனத்தை அடகு வைக்க கூட்டம் ? பாவம் அவரை சொல்லியும் குற்றமில்லை " நாகரீக அடிமையில்" அவரும் ஒருவர்தானே...? பொதுவாக எதிர்த்து கேள்விகேட்பவர்கள்தான் எதிரியாக பார்க்கப்படுவார் இங்கே ஆதரித்து கேள்வி கேட்டாலே அவர் இல்லாமல் செய்யப்படுவார், காரணம் நாம் எப்போதும் கேள்வியே கேட்கக்கூடாது என்பதில் அவர் யாருக்காக கூட்டம் நடத்துகிறாரோ அவர்களின் விருப்பம் அதை அப்படியே செய்து கொண்டும் இருக்கிறார் அந்த மனிதர்.
வாளெடுத்து வீதிக்கு வாருங்கள் என்று சொல்லவில்லை, அவசியம் என்றால் அதையும் எடுக்கலாம்... அறிவு கொண்டு உங்கள் அடிமைதனத்தை விலக்குங்கள், நாளைய நமது தம்பிகளாவது சுதந்திரமான இருந்துவிட்டு போகட்டும், யாருக்கு பயம் கொள்கிறீர்கள் ?
மனதில் இருக்கும் ஆதங்கத்தை யாரிடம் சென்று சொல்வது ? இதில் சிலருக்கு மனவருத்தம் வரலாம் அதனால்தான் "உணர்வில்லாதவர்கள் படிக்க வேண்டாம்" என்று ஆரம்பத்தில் சொல்ல நேரிட்டது. உணர்வாளர்களுக்கு எனது மனவேதனை புரியும்... இனியேனும் விழித்துக்கொள் என் உறவே....!!! உரிமைக்காக குரல் கொடு....!! யாருக்கும் அடிமையல்ல நான் என்று உணர்வாய் இரு....!!! உன்னால் முடிந்தால் ஒருவருக்காவது உணர்விணை உண்டாக்கு...!!! நாளைய நம் சந்ததியாவது சுயமரியாதையுடன் வாழ உன்னால் இயன்றதை செய்துவிடு...!!! அரசியல் லாபத்திற்க்காக உன்னை யாருக்கும் யாரும் அடகு வைக்கவிடாதே...!!!
அன்புடன்
உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
1 கருத்து:
நன்றாக எழுதியுள்ளீர்கள். கூட்டம் நடத்துபவரின் முகத்திரையை கிழித்தற்கு நன்றி.
கருத்துரையிடுக