அன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் எமது அண்ணன் அழகுற எழுதிவிட்டார்,என்றபோதும் என்னுடைய நன்றியையும் எம் உறவுகளுக்குச் சொல்லவேண்டியது எமது கடமை,ஏனெனில் வந்தவர்களை வரவேற்று உபசரிப்பது,பரம்பரை பரம்பரையாக தமிழர்களிடையே தொடர்ந்து வரும் ஒரு பழக்கம்,ஆனால் எமது மதுரை வாழ் அண்ணன்கள் அதை ஒரு கடமையாக என்னாது அதனினும் ஒரு படி மேலே சென்று எங்களை வரவேற்றார்கள்....காரணம் எங்களை உடன்பிறவா தமையன்கலாகவே அவர்கள் கண்டார்கள்...
அண்ணன் சஞ்சய் அவர்கள் குறிப்பிட்டதைப் போன்று எமது அண்ணன்,வீரமுத்தரையர் சங்கத்தின் வடகாடு பகுதி ஒருங்கிணைப்பாளர் அருள் அவர்களின் மகிழுந்தில் பட்டுக்கோட்டை துவங்கி மதுரை நோக்கி,எமது வரலாற்றுக்கால வீரத்தை இன்றைக்கும் பறைசாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எமது வளையறின உறவுகளைத்தேடிய பயணத்தை துவங்கினோம்,பயணத்தின் இடையே,மரணித்த பின்பும் மௌனிக்காமல் எம் போன்ற பல தம்பிகளின் உள்ளத்திலே கனலாக இருந்து ஒவ்வொரு கணமும் என்னை இயக்கிக் கொண்டிருக்கும், முத்தரையர்களின் பெருமகன்,வடகாட்டின் தலைமகன்,எமது அஞ்சா நெஞ்சன்,அய்யா அழகர் சேர்வையின் அடிதொட்டு வந்த,அய்யா வெங்கடாசலனாரின் நினைவிடத்தில் வழக்கமான உறுதி எடுப்பை முடித்துக்கொண்டு அங்கு திரண்டுநின்ற வடகாடு பரமநகர்,அண்ணன் அருள் அவர்களின்,போர்க்குணம் கொண்ட உறவுகளோடு சற்று நேரம் உரையாடிவிட்டு மீண்டும் துவங்கினோம் எமது பயணத்தை,புதுக்கோட்டை நகரின் நுழைவிடத்தில்,முத்தரையர் குடும்பங்கள் திரண்டு வாழும் மேட்டுப்பட்டியில்,நம் இனத்தின் வளரும் கவிஞர் அண்ணன் ஹரிபாலா அவர்களை சந்தித்தோம்,எங்கள் பயணத்தில் இணைந்துகொள்ள அவருக்கும் ஆவல் இருந்தாலும்,இன நலனை விடப் பெரிய முக்கியப்பணியொன்று ,அன்று மதியம் அவருக்கு இருந்ததால்,எங்களிடமிருந்து பிரியாவிடைபெற்றர்.
மீண்டும் தொடர்ந்த எங்கள் பயணத்தின் இடையே தொடர்புகொண்டு பேசிய அண்ணன் முருகேஷ் அவர்கள் வரும் வழியில் காத்திருப்பதாகச் சொன்னார், உறவுகள்தான் காத்திருப்பதாக நினைத்து எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்,ஆனால் அங்கு சென்ற பிறகுதான் உணர்ந்தோம் அங்கே காத்திருந்தது எம் உறவுகள் மட்டுமல்ல எம் இனத்தின் வளர்ச்சிக்கான பல ஆச்சரியங்களும் காத்திருப்பதாக,காரணம் பயணித்த நாங்கள் எல்லோரும் இளையவர்கள்,இந்த சமூகத்திற்கான களமாடலுக்குப் புதியவர்கள்,ஆனால் எங்களைவிட பலமடங்கு வயதாலும்,களமாடல் அனுபவத்தாலும் உயர்ந்த பெரியவர்,அய்யா R.V அவர்களின் வழிகாட்டுதல் படிநடக்கும் சருகுவலயப்பட்டியை சார்ந்த அய்யா பட்டதாரி அவர்களை சந்தித்தோம்,மேலும் அங்கே திரண்டு நின்றது பெரும்பிடுகு முத்தரயனின் வழி வந்த எம் இனத்தின் ஆடவர்கள் மட்டும் கிடையாது,பல பெண்களும்தான்,அந்த செட்டிநாட்டு வளயர்களோடு பேசும்போதுதான் நான் உணர்ந்துகொண்டேன்,இனி இந்த சமூகத்தின் வளர்ச்சியை எந்த பலம் கொண்ட ஆற்றலாலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதை.ஏனென்றால் வயது வேறுபாடு,EGO போன்றவற்றைப் பார்த்துப் பார்த்தே வீணாய்ப் போன என் சமூகம் இன்று பல படிப்பினைகளைப் பெற்று முற்றிலுமாக மாறி நிற்கின்றது என்ற உண்மையை உணர்ந்து கொண்டதால்...
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேலூரில் சற்றுநேரம் நின்று,அங்கு வந்த இரு உறவுகளோடு (பெயரை மறந்துவிட்டேன் )கருத்துகளை பரிமாறிக் கொண்டு,திருச்சி முதல் மதுரை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்,மாட்டுத் தாவணி சென்றடைந்தவுடன் அங்கே காத்திருந்த,முத்தரையர் மகாராஜா என்ற பெயரில் முகநூலில் இயங்குபவரும் காலைக் கதிர் நாளேட்டின் செய்தியாளருமான அண்ணன் அவர்களையும் பயணத்தில் இணைத்துக் கொண்டு சரந்தாங்கி நோக்கி சென்றோம்,அங்கு அண்ணன் தீபக்,மகேஷ்,கபிலன் உள்ளிட்டோரின் வழக்கமான அன்பையும் பெற்றுக்கொண்டு அந்த பகுதி பெரியவர்களையும் சந்தித்து நெடுநேரம் உரையாற்றிவிட்டு பிரியா விடை பெற்று ஊர் நோக்கி புறப்பட்டோம்.
தெள்ளத் தெளிவாக அண்ணன் சஞ்சை பதிவிட்ட பிறகும் இந்தப் பதிவை நான் தொடரக் காரணம் யாதெனில் சில விடயங்களை இங்கு எம் தோழர்களுக்குச் சொல்லத்தான்..,உண்மையிலே இந்த சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது,குறிப்பாக இளஞர்களின் மத்தியிலே,அவர்களினிடையே ஒரு புதிய தேடல் பிறந்துள்ளது,அந்தத் தேடல் வரலாற்று ரீதியாக,அரசியல் ரீதியாக சில தெளிவுகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது,அந்த வகையில் இணையத்தின் பங்கு அளப்பறியாதது,பல குழுமங்கள் குறிப்பாக இந்தக் குழுமம் பல நூறு இளைஞர்களை இந்த சமூகத்திற்கு உருவாக்கி உள்ளது,பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகொண்டோர் இங்குண்டு,பல அரசியல் கட்சிகளைச் சார்ந்தோர்,பல கருத்தியலை ஏற்றுக்கொண்டோர் இப்படி பலரும் இயங்கும் தளம்.ஆனாலும் என்னைப் பொறுத்தளவில் வாழ்க்கை ஒரு போதும் நாம் நினைத்தபடி நகர்வதில்லை,இன்றைக்கு இன உணர்வோடு இங்கு பதிவிடுவோரில் பலர் நாளையே ஒரு அரசியல் கட்சியோடு இணைந்து கொள்ளலாம்,தமது விருப்ப அல்லது சுயநலத்திற்காக கூட அது அமையலாம் (இதை எழுதும் நானும் விதிவிலக்கல்ல),அவர்கள் அரசியல் கட்சியோடு இணைந்த பிறகும் இதே இன உணர்வோடு இயங்க நினைத்தாலும் அது நடைமுறைச் சாத்தியமல்ல,ஆனாலும் சில நூறு இளைஞர்கள் இப்படிப் பிரிந்தாலும் பல்லாயிரம் இளைஞர்கள் புதிதாக இன உணர்வோடு புறப்படுவார்கள்,ஏனெனில் அது காலத்தின் கட்டாயம்,அவர்கள் இந்த இனத்திர்க்கான அரசியல் அதிகாரத்தை மீட்டெடுப்பார்கள்,மீண்டும் ஒரு முத்தரயனை நாடாள வைப்பார்கள்...அது இந்த தலைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் அடுத்த தலைமுறையிலேனும் சாத்தியப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக