முத்தரையர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் கூட்டத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டம்
புதுக்கோட்டையில் தமிழ் நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமலைநம்பி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு;-
இட ஒதுக்கீடு
முத்தரையரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர் த்து, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழக அரசு வாரியங்களில் தலை வர்களாக முத்தரையர்களை நியமிக்க வேண்டும். அறங்காவலர் குழுத் தலைவராகவும், பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் முத்தரையர்களை நியமிக்க வேண்டும். முத்தரையர் மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை முத் தரையர்களுக்கே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக