சென்னையிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவுடைய இவ்வரலாற்றுச் சிறப்பிடம் முதலில் ம@கந்திர வர்மனால் கட்டப்பட்டு, நரசிம்மவர்மனால் அழகுப்படுத்தப்பட்டது எனக் கூறலாம்.”சுற்றுலாப்பயணிகளின் ஆர்வத்தைத் தூண்டி விடக் கூடியவையாகவும், எளிதில் மனத்தை பறிகொடுக்கக் கூடியவையாகவும் அமைக்கப்பட்டவை நரசிம்ம வர்மனின் “ குகைக் கோயில்கள் ” ஆகும். இவ்வகையான குகைக் கோயில்களை, “ ஒற்றைக் கல் இரதங்கள் என்றும் அழைக்கின்றனர். இவ்வகையான குகைக் கோயில்களில், மிகப் பெரிய பாறைகளில் வடிவமைக்கப்பட்டதால் இதனைப் பாறைக் குகைக் கோயில்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்விடம், ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் அடைக்கப்பட்டுக் கிடப்பதுபோல் காணப்படுகிறது. அவற்றில் மாமல்லபுரத்தில் காணப்படும் ஒன்பது பாறைக் கோயில்கள் அல்லது ஒற்றைக் கல் இரதங்கள் மிகவும் புகழ் மிக்கவை. அவை, திரௌபதை இரதம், அர்ச்சுனன் இரதம், கணேச இரதம் ஆகிய இரதங்களின் கலை அழகு காண்பவரின் கண்களையெல்லாம் களைப்படையச்செய்யும் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை.ஆனால், மாமல்லபுரத்து ஊருக்கு அருகே பக்கிம்காம் கால்வாய்க்குக் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ள “ வலயன் குட்டை இரதமும் ”இதற்கு வடக்கே சிறிது தொலைவில் வேறு இரண்டு பாறைக் கோயில்களான “பிடாரி இரதங்கள் ” எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும். எத்தனை சுற்றுலாப் பயணிகள் இதைக் கண்டு களித்திருப்பார்கள் என்ற வினா உள்மனத்தில் எழத்தான்
செய்கிறது.
.
இவ்விரண்டு பாறைக் கோயில்களும், செங்கற்பட்டிலிருந்து, மகாபலிபுரம் வரும் வழியில் அமைந்துள்ளதோடு, ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அமைந்திருப்பது போல், தனிமையாக காணப்படுவது குறைந்த அளவான பார்வையாளர்களைக் கவர்ந்த குகைக் கோயில் என்று கூட அழைக்கலாம்.
இவ்விரண்டு வகையான பாறைக் கோயில்களும் கற்பாறைக் கோயில்களைப் போல் ஒரே பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த இரண்டு பாறைக் கோயில்களின் பெயர்கள் சற்று மாறுபட்டுக் காணப்படுவதோடு, அவை ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது என்பதனை ஆராய்ந்த போது, அவை சரியான காரணமாகவே கருதப்பட்டது. “ வலயன் குட்டை இரதம் ” என்ற பெயர்
பெற்றதற்கு அங்கே வலயன் குட்டை என்னும் குட்டை ஒன்று காணப்படுவதால், அந்தக் குட்டைக்கு அருகில் இந்த இரதம் அமைந்திருப்பதால் அவ்வாறு, அழைக்கப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.மேலும், பிடாரி இரதங்களின் பெயர்த் தோன்றல்களும், மாமல்லபுரத்தின் கிராம தேவதையாகிய பிடாரியின் கோயில் அருகில் இவ்வகையான இரதங்கள் எழுப்பப்பட்டுள்ளதால் (செதுக்குதல்) பிடாரி இரதங்கள் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.இப்பாறைக் @காயிலின் சிறப்பம்சம் என்னவெனில், அடிப்பகுதி, கருவறை ஆகியவைக்கு முதன்மை தராமல் இக்கோயில்களின் மேற்பகுதிக்கு மட்டும் அதிகத் தனிக்கவனம் செலுத்தப்பட்டுச் செம்மையாகவும், ஒழுங்காகவும், சிறப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது. வலயன் குட்டைக் கோயிலும், பிடாரிக்
கோயிலும் மூன்று நிலையுள்ள இளங்கோயில்கள் வகையைச் சார்ந்தவை என்றாலும், இவ்விரண்டிற்கும் சில வேறுபாடுகள் கழுத்து முதலிய உறுப்புகளில்
காணப்படுகின்றன.பக்கிங்காம் கால்வாயின் அருகில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அமைந்துள்ள ஒற்றைக் கல் இரதங்களின் சிறப்பு என்னவெனில், இவ்வகையான
இரதங்கள் மேற்புறம் மட்டும் அழகுபட அமைக்கப்பட்டிருப்பதால் ‘ விமானங்களின் ’ சிறப்பினை மட்டும் வெளிப்படுத்திக் காட்டக்
கூடியதாக இவை அமைக்கப்பட்டிருக்கலாம்
என்று கருதத் தோன்றுகிறது...
-மகேஷ் முத்தரையர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக