100 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றால் தமிழக வரலாற்றிலே முழு அரசியல் அதிகாரமும் பார்பனர்களிடதிலே இருந்தது...அதன் பிறகு பெரியார் போன்ற சில தலைவர்களின் போராட்டத்தாலும் முயற்சியாலும் அந்த நிலை மாறி 1920 க்குபிறகு பார்பனர் விரட்டப்பட்டு பார்பனர் அல்லாதோர் அந்த இடங்களுக்கு சென்றுள்ளனர்...இது நம் அனைவருக்கும் தெரிந்ததே...இதில் நீதிக் கட்சி போன்ற சில அரசியல் கட்சிகளின் பங்குதான் அதிகம் இருந்தது,அனால் இதை பார்பனர் அல்லாதோர் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக நாம் கருத முடியாது,ஏனெனில் பார்பனர் விரட்டப்பட்டு அந்த இடத்திலே அமர்ந்தவர்கள் யாரென்று பார்த்தால் தாழ்த்தபட்ட மக்களோ,தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களோ அல்ல...அவர்கள் அனைவரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மக்கள்...அதாவது நாய்டு,நாயக்கர்,ரெட்டியார்,மு
ஆனால் இதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் மேற்கண்ட தமிழ் சாதிகள் தங்களை அரசியலில் மிக விரைவாக ஈடுபடுத்தி கொண்டுள்ளன-நம்மை தவிர,காரணம் அந்த காலங்களில் நமக்கு பள்ளிக்கூடமே தெரியாமல் இருந்துள்ளோம்,ஆதாரம் சட்டநாதன் அறிக்கை 1974 -அதாவது 1920 வரை பார்பனரும்,அதன் பிறகு தெலுங்கரும்,1950 க்கு பிறகுதமிழ் சாதிகளிடையே போட்டி ஏற்படுகிறது...இதில் முதலில் வென்றவர்கள் வன்னியர்கள்...50 களிலே அவர்கள் உழைப்பாளர் கட்சி, உழைப்பாளர் பொதுநலக் கட்சி,என்று அந்த சமுதயதவர்களை அரசியல் ரீதியாக தயார் செய்து 25 சட்டமன்ற உறுப்பினர் வரை உருவாக்கினார்கள், அதன் பிறகும் திராவிடப் போர்வையில் தெலுங்கர்களில்ஆட்சி தொடர்ந்தது இருந்தாலும் தமிழர்களின் அரசியல் வளர்ச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை...குறிப்பாக முக்குலத்தோர் என்று சொல்லி கொண்டு ஒரு கும்பல் அரசியலை தன் வசப்படுத்தியது...எல்ல சாதிகளும் தமது மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்ப முயற்சிக்க இவர்கள் மட்டும் அதை விட அதிகமாக அனுப்பினர்...இதற்கு உதவியது அவர்களின் ஒற்றுமை,வீர வரலாறு படைத்தோர் என அந்த சமுதாய மக்கள் தங்களை நம்பியது...ஆனால் சில சாதிகள் எதுவுமே தெரியாமல் தமக்குள்ள தலைவர்களை உருவாக்காமல், தாமாக உருவாகினால் அவர்களை வளரவிடாமல் செய்தனர்,செய்துவருகின்றனர்...
இப்பொழுது நாம் ஒரு விசயத்திற்கு வருவோம்...நமது மக்கள் தொகை எவ்வளவு? நமக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட சாதி எது?வன்னியர்...அவர்களுக்கு அனைத்து அரசியல் கட்சியையும் சேர்த்து சட்டமன்றத்திலே எத்தனை இடம் ? நமக்கு எத்தனை ? நாம் கேட்பதெல்லாம் சாதி அரசியல் பேசக்கூடாது என்று சொல்பவர்கள் உங்கள் தொகுதியில் ஒரே ஒருமுறை சாதி இல்லாமல் முத்தரையர்களை வேட்பாளர் என்று அனைத்து சாதியினரும் ஏற்று கொள்ளுங்கள் என்று மாற்று இனத்தவரிடம் சொல்ல முடியுமா? குறிப்பாக முக்குலத்தோரிடம் சொல்லி தொகுதியை பெற முடியுமா?சற்று சிந்தித்து பாருங்கள்...
ஆ.வெங்கடாசலம் என்ற தலைவனை வெட்டி கொன்றார்களே...ஒரு முக்குலதவனயோ,வன்னியனயோ கொன்றிருந்தால் அந்த கட்சி சும்மா இருந்திருக்குமா? இல்லை அந்த சமூகம்தான் சும்மா விட்டிருக்குமா? ஆனால் நாமோ அவருக்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி கொண்டாட தயாராகி வருகின்றோம்...ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவரது சாவின் உண்மை காரணம் தெரியும்? தெரிந்தவர்களும் சும்மா தானே இருக்கின்றோம்...என்றாவது சிந்தித்து உண்டா? சாதியின் பெயரை சொன்னாலே ஏதோ சொல்ல கூடததை சொன்னதை போன்று பார்க்கின்றோம் எப்படி இந்த சாதி முன்னேறும்? நம் சமுக இளைஞர்களால் ஒரு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ,முக்குலத்தவர்க்கும் நிகராக அரசியல் பேச முடியுமா?இந்தநிலை எப்பொழுது மாறுகிறதோ அப்போதுதான் சமுதாயம் முன்னேறும்...