இதை முன்னிட்டு தின மும் இரவு செந்திவேல் தலமையில் வாலிபர்களின் ஒயிலாட்டம் நடந்தது. கட ந்த 4ம் தேதி இரவு அம்மன் கரகம் தென் கடற்கரையி லிருந்து ஊர்வலமாக கோ யிலை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்கு வீதி உலா சென்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், ஆடுகள் பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று மாலை அம்மன் கரகத்துடன் முளைப்பாரி சுமந்து ஊர்வலம் சென்ற பெண்கள் பாரிகளை கடலில் கரைத்தனர். இரவு கிராமிய தெம்மாங்கு கலைநிகழ்ச்சி நடந்தது.
ஏள்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள் செல்வராஜ், ரமேஷ், பூசாரி குமார், கவுன்சிலர் முனியசாமி, தண்டல் முருகானந்தம், ராஜேந்திரன், ஷாபு ராஜேந்திரன், நம்புவேல் மற்றும் முத்தரையர் இளைஞரணியினர் செய்திருந்தனர். வருகிற 11ம் தேதி குளுமை பொங்கலுடன் விழா நிறைவு பெறுகிறது.
NEWS FROM : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக