தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடந்தது. பொதுச்செயலாளரும், மாவட்டத் தலைவருமான மரு.பாஸ்கரன் தலைமை வகித்தார். இளைஞரணிச் செயலாளர் பெரியகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலி ல் நித்ய அன்னதான திட்டத்தை அறிவித்து, அதை துவக்கி வைக் க வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவை சங்கம் சார்பில் குடு ம்பத்துடன் வரவேற்கவேண்டும். கல்வி வேலைவாய்ப்புகளில் பி.சி., பட்டியலில் உள்ள முத்தரையருக்கு பத்து சதவீதமும், எம்.பி.சி., பட்டியலில் உள்ள முத்தரையருக்கு ஐந்து சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருச்சி சத்திரம் பஸ்ஸ்டா ண்ட்டுக்கு அண்ணாமலை முத்துராஜா பஸ்ஸ்டாண்ட் என்று பெயர் சூட்டிட திருச்சி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. இன்றுவரை பெயர் சூட்டிட மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக பெயர் சூட்டிட முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.ஆகாயத்தாமரை அகற்றம்: விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால் மாநகரத்தில் ஓடும் உய்யக்கொண்டான் ஆறு மற்றும் வாய்க்கால்களை தூர் வாருவதுடன் ஆகாய தாமரைகளை அகற்றி நீரோட்டம் தடையில்லாமல் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, தூர் வாரும் மண்ணை அங்கிரு ந்து அப்புறப்படுத்தவேண்டும்.கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வழங்கவேண்டும் என்று மத்திய அரசு அலுவலகங்கள் முன் சங்கம் சார்பில் அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக