தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாவட்ட தலை வர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால் உய்யக்கொண்டான் ஆறு மற்றும் வாய்க்கால்களை தூர்வாருவதுடன் ஆகாய தாமரைகளை அகற்றி நீரோட்டம் தடையில்லாமல் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் பிசி பட்டியலில் உள்ள முத்தரைய ருக்கு, 10 சதவீதம் உள் ஒதுக்கீடும், எம்பிசி பட்டியலில் உள்ள முத்தரையர்களுக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடும் வழங்கிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபரில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, மாநகரில் வழிப்பறி, செயின்பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. ஹெல் மெட் போடாதவர்களை பிடிக்க தீவிரம் காட்டும் போலீஸ், கொள்ளையர்களை பிடிக்க அக்கறை காட்ட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இளைஞரணி செய லாளர் பெரியகோபால், ஒன்றிய செய லாளர் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக