உணர்ச்சி வசப்படும் இனமா முத்தரையர் சமுதாயம் ?
...
கடந்த காலங்களில் நடந்த சில கசப்பான சம்பவங்களில், ஏனோ முத்தரையர் இனம் குறிவைக்கப்படுகிறதோ என்ற சந்தேகதினை வலுப்படுத்துவது போல உள்ளது, தஞ்சாவூர் மாவட்டதில் ஒரு கிராமம், முத்தரையர்கள் மட்டுமே வாழும் அந்த கிராமத்தினருக்கும், அருகில் உள்ள இஸ்லாமியர் நிறைந்து வாழும் ஒரு ஊருக்கும் ஒரு மத மோதல் உருவானது, நம்மவர்களின் நியாயமான கோரிக்கைதான் என்றாலும், அதற்கான போரட்டமுறை தவறாக வடித்தெடுக்கப்பட்டது என்பதுதான் வேதனை இதன் பிண்ணனியில் இருந்து நம் மக்களை தவறாக வழிநடத்தியது இந்து அமைப்புகள் இதில் பாதிக்கப்பட்டது என்னவோ முத்தரையர்கள்தான், இதே நிலைதான் மதுரை மாவட்டத்தில் அமைதியாக வாழ்ந்து வரும் நம் மக்களை தூண்டிவிடும் விதமாக நமது மன்னரின் படத்தினை சிலர் அவமதிக்க அதை காரணமாக கொண்டு சில விரும்பதகாத சம்பவங்கள் நடந்தது, இதே போன்று திண்டுக்கல் மாவட்டதில் நமது சிங்க கொடி சிலரால் திட்டமிட்டு அவமதிக்கப்பட அங்கும் சில விரும்பதகாத சம்பவங்கள், கருர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில், திருச்சியில் முத்தரையர் பிறந்த நாள் விழவில், ராமநாதபுரம் முத்தரையர் சிலை திறப்புவிழாவில் இவ்வாறு விறும்பதகாத சம்பவங்கள் நடைப்பெறும் பொழுதெல்லாம் கடைசில் பாதிக்கப்படுவது நமது இனமாகவே இருக்கின்றது. இதில் நம்மை உணர்ச்சி வசப்படுத்தி ஆதாயம் பெறுகிறார்கள் சிலர். இதனை நாம் எவ்வாறு களைவது என்பதனைக் குறித்து நாம் சிந்திக்கவேண்டும், இந்த தருணத்தில் மேலும் ஒரு முக்கியமான விசயம், இங்கே சில நண்பர்களிடம் ஒரு தவறான எண்ணம் உள்ளது, என்ன நடந்தாலும் பிறரை குறை சொல்வது, நாம் கேட்பது இதற்க்கான தீர்வு என்ன என்பது மட்டும் தான், பிறரை குறை கூறுவதன் மூலம் தான் எதோ பெரிதாக சாதித்து விட்டதாக சில நண்பர்கள் நினைக்கிறரார்கள், தவறு தனி மனிதனால் எல்லா விசயங்களும் சாதிக்க முடியும் என்றால் நாமும் எப்போது வெற்றி பெற்றிருக்க முடியும், ஆகையால் எது நல்ல தீர்வு என்பதும், அதனை எவ்வாறு நாம் நடைமுறை படுத்துவது என்பது குறித்து நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும், முன்பு இதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நமது சமுகத்தவர் ஒரு இஸ்லாமிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதற்க்கான காரணம் என்ன ? அதை தடுக்க நமது சமுக சங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன ? வெறுமனே நம் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு, தங்கள் நிலையைத் தாழ்த்திக் கொள்வதை விட நம்முடைய நிலையை உயர்த்திக்கொள்ள நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வோம்.
உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கி....
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக