து.நெப்போலியன் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் எம்.பி. வளர்ச்சி நிதியின் கீழ் மேற்கொண்ட பணிகள் மற்றும் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தி உபகரணங்கள், உதவிகள் வழங்கியது தவிர குறிப்பிடும்படியான பணிகள் எதுவும் தொகுதியில் நடைபெறவில்லை.
தி.மு.க. 7 முறை வெற்றி
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்று உள்ளன.
1952 பொதுத்தேர்தலில் உழவர் உழைப்பாளர் கட்சி (டி.என்.டி.) சார்பில் போட்டியிட்ட பூவராகசாமி படையாச்சி, 1957 தேர்தலில் காங்கிரஸ் தலைவர் எம்.பழனியாண்டி, 1962 தேர்தலில் தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.செழியன், 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.துரைராசு ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
1977–ல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.அசோக்ராஜ், 1980–ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.பி.எஸ்.மணி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1984 தேர்தலில் எஸ்.தங்கராசுவும், 1989 மற்றும் 1991 தேர்தல்களில் அ.அசோக்ராசு தொடர்ந்து இருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1996–ல் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, 1998 தேர்தலில் பி.ராஜரெத்தினமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1999, 2004 எம்.பி. தேர்தல்களில் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றார்.
இதனை அடுத்து 2009 எம்.பி. தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெப்போலியன் மத்திய மந்திரிசபையில் இடம் பெற்று மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். 2009 பாராளுமன்ற தேர்தலில் நெப்போலியன் (தி.மு.க)– 3,98,742, கே.கே.பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.)– 3,21,138, துரை.காமராஜ் (தே.மு.தி.க.)– 74,317, ஜி.செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி)– 5,014 வாக்குகளும் பெற்றனர்.
6 சட்டமன்ற தொகுதிகள்
பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி), முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
2011 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில்
இளம்பை.ஆர்.தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.), லால்குடி தொகுதியில் சவுந்திரபாண்டியன் (தி.மு.க.), மண்ணச்சநல்லூர் தொகுதியில் டி.பி.பூனாட்சி (அ.தி.மு.க.), துறையூர் தொகுதியில் டி.இந்திராகாந்தி (அ.தி.மு.க.), முசிறி தொகுதியில் என்.ஆர்.சிவபதி (அ.தி.மு.க.), குளித்தலை தொகுதியில் ஏ.பாப்பாசுந்தரம் (அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
12 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள்
கடந்த ஜனவரி 10–ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 12,62,644 இதில் ஆண்கள்– 6,23,359, பெண்கள்– 6,39,259, இதரர் 26 பேரும் அடங்குவர்.
கடந்த 2009 பொதுத்தேர்தலில் பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் 10,49,033 வாக்காளர்கள் இருந்தனர். 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட 2,13,611 அதிகம் ஆகும்.
கோரிக்கைகள்
பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க தி.மு.க. ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்திற்காக பெரம்பலூர்–அரியலூர் சாலையில் ஒதியம் பிரிவு பாதை அருகே ஏறத்தாழ 28 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்தை கைவிட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசு புதிய அரசு மருத்துவ கல்லூரியை அமைத்திடவேண்டும். பெரம்பலூருக்கு காவிரி–கொள்ளிட குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. லால்குடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. டோல்கேட்–லால்குடி–ஜெயங்கொண்டம்–சிதம்பரம் பைபாஸ் சாலை திட்டமும் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் முன்மாதிரியாக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார்.
ஆனால் அதற்கு பிறகு 2009–ல் எம்.பி. ஆகி மத்திய மந்திரியாக பதவி வகித்த நெப்போலியன், எம்.பி.யின் தொகுதி அலுவலகத்தை பெரம்பலூரில் திறக்காமல் திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் அமைத்தார். பொதுமக்கள் அவரை சந்தித்து கோரிக்கைகள், குறைகளை தெரிவிக்க முடியவில்லை என்பது பெரம்பலூர் மக்களின் நீங்காத குறையாக இருந்து வருகிறது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் முத்தரையர், கவுண்டர், பார்க்கவகுலம், ரெட்டியார், எஸ்.சி. எஸ்.டி. பழங்குடியினர் என பரவலாக வசிக்கின்றனர். பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் வேட்பாளர் வெற்றியை தீர்மானிப்பதில் முத்தரையர் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக