முத்தரையர் மேல்நிலைப் பள்ளி தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி முத்தரையர்பாளையம் முத்தரையர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 82 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி நிக்கிதா 1,200க்கு 1,112 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம், சிவபாரதி 1,079 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், ராஜா 1,075 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம், சரவணன், கீர்த்திவாசன் ஆகியோர் தலா 1,068 மதிப்பெண்களுடன் நான்காமிடம் பெற்றனர்.
பள்ளி முதல்வர் முத்துராமன் கூறியதாவது:
பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 82 பேரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 15 பேர் 1000 மதிப்பெண்களுக்கு மேலும், 14 பேர் 900 மதிப்பெண்களுக்கு மேலும், தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெறுள்ளனர். எங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாணவர் மீதும் தனி கவனம் செலுத்துகிறோம். பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பிளஸ் 1 வகுப்பில் சேர்த்து, அந்த மாணவர்களை பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வைத்துள்ளோம்.
பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கைகையில் கட்டண சலுகை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், வெற்றிக்கு காரணமான ஆசிரிய-ஆசிரியைகளை பள்ளி முதல்வர் முத்துராமன் வாழ்த்தினார்.
News source : http://www.dinamalar.com/district_detail.asp?id=1249685
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக