கரூரில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ். சபரிசன் என்கிற ரிஷி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலர் க. ஆனந்தன் வரவேற்றார். பொருளாளர் தினேஷ்குமார், துணைச் செயலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முத்தரையர் பட்டியலில் உள்ள அனைவரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முத்தரையர்களுக்கு 15 சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்கொடுமைச் சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் முத்தரையர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் துணைத் தலைவர் ரத்தினகுமார், துணைச் செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக